பிஷ்நெட் ஒயரை கொண்டு மீன்கள் செய்வது எப்படி? - பின்னல் பொருட்கள் - அறுசுவை கைவினை


பிஷ்நெட் ஒயரை கொண்டு மீன்கள் செய்வது எப்படி?

திருமதி. தனலெட்சுமி
வியாழன், 22/07/2010 - 17:53
Difficulty level : Medium
4.22222
9 votes
Your rating: None

 

  • பிஷ்நெட் ஒயர்
  • ஸ்டாஃப்ளர்
  • சம்கி

 

பிஷ்நெட் ஒயரை 14 செ.மீ அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு ஒயரையும் தனித்தனியாக சமமாக மடக்கி எடுத்துக் கொள்ளவும். மடக்கிய ஒயரில் ஒரு ஒயரை கையில் எடுத்துக் கொண்டு, அதன் மேல் மற்றொரு ஒயரை படத்தில் இருப்பது போல் சொருகி கொள்ளவும்.

இப்போது முதல் ஒயரின் அடிப்பகுதியை இரண்டாவது ஒயரின் மேல் சற்று விலகி இருப்பது போல் வைக்கவும்.

இரண்டாவது ஒயரின் அடிப்பகுதியை முதல் ஒயரின் உள்ள துளையில் விட்டு நான்கு ஒயர்களையும் ஒரே சீராக இழுக்கவும்.

பிறகு ஒயரை பின்புறமாக திருப்பி வெளியில் நீட்டியிருக்கும் நான்காவது ஒயரை அதன் உள்வழியாக பாதியளவு விட்டால் அந்த இடத்தில் சிறிய துளை போன்று இருக்கும். அந்த துளையில் வெளியில் நீட்டியிருக்கும் முதல் ஒயரை விடவும். இப்போது நான்காவது மற்றும் முதல் ஒயரை மட்டும் இழுக்கவும். (அடுத்த படத்தின் விளக்கத்திற்காக இதில் எண்கள் இட்டு காட்டப்பட்டுள்ளது)

ஒயரை முன்பக்கமாக வைத்து இரண்டாவது ஒயரை மடக்கி பிடித்துக் கொண்டு, அந்த துளையில் மூன்றாவது ஒயரை விடவும். (படத்தில் இருப்பது போன்று)

இப்போது நான்காவது ஒயரை, மடக்கி வைத்திருக்கும் இரண்டாவது துளையில் விட்டு பிடித்துக் கொள்ளவும். பார்க்க மூன்று துளைகள் இருப்பது போன்று இருக்கும்.

முதல் ஒயரை மேல்வழியாக நான்காவது துளையில் விட்டு அடிவழியாக கொண்டு வந்து மூன்றாவது துளையில் விடவும்.

இரண்டு பக்கங்களிலும் இருக்கும் இரு இறக்கைகளை பிடித்து மெதுவாக இழுத்து பிறகு இறுக்கமாகி கொள்ளவும்.

பின்பு இறக்கைகளின் அடியில் ' v ' வடிவில் நறுக்கி விடவும். இரு பக்கத்திலும் உள்ள இரண்டு இறக்கைகளையும் சேர்த்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். மீனின் தலைப்பகுதியில் சம்கி அல்லது கண்களை பெவிக்கால் தடவி ஒட்டவும்.

இதுப்போல் விரும்பிய நிறத்தில் நிறைய மீன்கள் செய்து க்ளாஸ் ஸ்ட்ரா அல்லது மணிகளில் கோர்த்து நிலைமாலை போல் செய்து கதவுநிலையில் மாட்டிவிடலாம். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெட்சுமி அவர்கள்.


அழகான மீன்

அழகான மீன் செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

தனலஷ்மி மேம்!


அப்பா! கண்ணுக்கே குளிர்ச்சியாயிருக்கே!ரொம்ப அழகா இருக்கு.

(ஹையா! அன்பு ஆம்ஸ் & ரம்யா மேடத்துக்கு முன்னாடி வந்துட்டேனே!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அருமையான மீன்

தனலெஷ்மி

அருமையான மீன்:)

என் தையல் டீச்சரும் இது சொல்லி கொடுத்துற்காங்க!
ஆனா எனக்கு அப்ப புரியல:(
உங்க தெளிவான விளக்கங்களால் தெளியவடைந்தேன்.

நன்றி.!!!

மேலும் இது போல் நிறைய கைவேலைகளை பகிர்ந்துக்கொள்ள வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தனலஷ்மி

ஃபிஷ்னெட் ஒயரில் மீன் செய்யும் விதம் படங்களுடன் தெளிவாக
விளக்கிச்சொல்லி இருக்கிரீர்கள். நன்றி பாராட்டுக்கள்.

அழகு மீன்

அழகு மீன்... சின்ன வயசுல அம்மா செய்து குடுப்பாங்க பள்ளியில் குடுக்கும் க்ராஃப்ட் வேலையை. அதில் இதுவும் அடக்கம்....!!! :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீன்

எனக்கும் சின்னக் காலத்தில் செய்த நினைவு வருகிறது. ;)

‍- இமா க்றிஸ்

தனலட்சுமி மேடம்,

தனலட்சுமி மேடம்,
மீன் ரொம்ப அழகா இருக்கு
இது போலே அம்மாவும் செய்து இருக்காங்க
வாழ்த்துக்கள் மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அழகான மீன்

ஹாய் தனலெட்சுமி மேடம் எப்படி இருக்கீங்க? உங்க மீன்ங்கள் ரொம்ப அழகாயிருக்கு. வாழ்த்துக்கள்.

மீன்.

மீன்களை சாப்பிடனும் போல் இருக்கிறது.

shagila

doubt in the steps

Hi,

I tried to make the fish as per your instructions. After the 2nd step i cant understand and proceed. Just the knot only i made. after that confused with how u hold the back side and numbered the wires.so please help me in finishing that.

Thanks.

Be good,do good.