முடக்கற்றான் கீரை சூப்

தேதி: July 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

1. முடக்கற்றான் கீரை பொடியாக நறுக்கியது - 5 தேக்கரண்டி
2. சின்ன வெங்காயம் - 4
3. தக்காளி - 4 துண்டு
4. பூண்டு - 5 பல்
5. ரசப்பொடி - 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. உப்பு
8. எண்ணெய் - 1 தேக்கரண்டி


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் தக்காளி, கீரை சேர்த்து வதக்கவும்.
பின் ரசப்பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கவும்.


விரும்பினால் கடுகு தாளித்து சேர்க்கலாம். ரசப்பொடிக்கு பதில் மிளகு, சீரக தூள் சேர்த்தாலும் போதும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
முடக்கற்றான் கீரை சூப் பார்த்ததும் நீங்க தான் செய்து இருப்பீங்கன்னு நினைத்தேன் உங்க கீரை ரசம் சாப்பிட்டு அம்மாவுக்கு கால் வலி பரவாயில்லைன்னு சொன்னங்க இந்த குறிப்பையும் கண்டிப்பாக சொல்கிறேன்
வாழ்த்துக்கள்
மேலும் பல குறிப்புகள் தாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.. மிக்க நன்றி. வாரம் ஒரு முறை கண்டிப்பா சாப்பிட சொல்லுங்க, நிச்சயம் நல்ல பலன் இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முடக்கற்றான் தந்தையும் பயன்படுத்தாலாமா ரசம், சூப் வைக்க, கொஞ்சம் சொல்லுங்க பா. வேறு என்ன உணவுகள் மூட்டு வலிக்கு, என் அப்பாவிற்காக கேட்கிறேன்.

இதுவும் கடந்து போகும்.

மூட்டு வலிக்கு எனக்கு வேறு உணவுகள் தெரியாது... ஆனா கத்தாழையை (aloe vera) மஞ்சள் கலந்து அரைத்து பூசினால் வலி குறையும்னு சொல்வாங்க. ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா