டால்மா

தேதி: July 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

ஒரியர்களின் முக்கிய உணவு பதார்த்தங்களில் ஒன்று டால்மா. நம் சாம்பார் எப்படியோ அவர்களுக்கு டால்மா. டால்மா செய்யும் போது நாம் இரு வேறு பருப்புகளையும், காய்கறிகளையும் சேர்த்து செய்ய வேண்டும் அப்படி செய்யும் போது தான் சுவை கூடும்.

அவர்கள் பஞ்ச்புத்னா என்று சொல்லப்படும் கடுகு, சோம்பு, கருப்பு சீரகம், சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்கின்றனர். கடுகு எண்ணெய் சேர்த்து சமைக்கிறார்கள்.

 

துவரம் பருப்பு - அரை கப்
பச்சை பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 2
பரங்கிக்காய் - ஒரு துண்டு
வாழைக்காய் - அரை துண்டு
காரட் - 3
உருளைக்கிழங்கு - ஒன்று
கத்தரிக்காய் - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
வெங்காயத்தாள் - 2
தாளிக்க :
கடுகு, சோம்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பில்லை, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
வறுத்து அரைக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
தனியா - ஒரு தேக்கரண்டி


 

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
துவரம் பருப்பு, பச்சை பருப்பு இவற்றுடன் பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
பின்பு வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து பிறகு மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அதனை வேக வைத்த பருப்புடன் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து காய்களோடு சேர்க்கவும். அதனுடன் உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும்.
பிறகு குழம்பை மூன்று கொதி கொதிக்க வைத்து இறக்கவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும். சுவையான டால்மா ரெடி.

வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம். புலாவ், இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, ஊத்தப்பம் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும். இங்கு நான் தரும் டால்மாவில் கருப்பு சீரகமும், கடுகு எண்ணெயும் சேர்க்கவில்லை. கடுகு எண்ணெய், கருப்பு சீரகம் எனக்கு கிடைக்க வில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரெசிப்பி நல்லா டேஸ்டா இருக்கும்மா. பருப்புகள், காய்கள்
எல்லாமே சேர்வதால உடம்புக்கும் நல்லது. நல்ல குறிப்பு
கொடுத்ததற்கு பாராட்டுக்கள். மேலும் இது போல சுவையான
குறிப்புகளை கொடுத்துவரவும்.

ஹாய்...

பார்க்கும்போதே சூப்பரா இருக்குபா... நான் செய்து பார்த்துட்டு பின்னூட்டம் அனுப்புரேன்...

வரலக்ஷ்மி.

True Love Never Fails.

கோமு மேடம் ,
உங்கள் பின்னூட்டத்திற்கும் ,வருகைக்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

vara மேடம் ,
உங்கள் பின்னூட்டத்திற்கும் ,வருகைக்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா