மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் இஞ்சித் துருவல் - 2 கப்
எலுமிச்சை சாறு - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
பெருங்காயம் - பட்டாணி அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு ஸ்பூன்


 

வாணலியில் 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடாக்கவும்.
கடுகைப் போட்டு, அது வெடித்ததும் மாங்காய் இஞ்சித் துருவலைப் போட்டு மஞ்சள் தூளையும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்கவும்.
பிறகு எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வேறொரு சிறு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தையும், வெந்தயத்தையும் பொன்னிறத்துக்கு வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
மாங்காய் இஞ்சி நன்கு வெந்து சேர்ந்து வரும்போது மிளகாய்த்தூளையும் வெந்தயம், பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்