டிப்ஸ்,டிப்ஸ்,டிப்ஸ்............................

வாங்க தோழிகளே இங்கு வந்து உங்களுக்கு தெரிந்ததை வந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்களில் வைக்கும் கவனம் நம் குடும்பத்தின் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இந்த இழையில் அவரவர்கள் வீட்டில் கையாளும் ஒரு சில குரிப்புகளை இங்கு வந்து பதியுங்கள்.

முதலில் நான் தொடங்குகின்றேன்...........

மளிகை பொருட்கள்:

1.நாம் வாங்கிவரும் பொருட்களை உடனடியாக சரிபார்த்து அதர்க்குதகுந்தார்போல் உள்ள(Tight container)மூடி போட்ட சில்வர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாகளில் தண்ணீர் இல்லாமல் வெயிலில் காயவைத்து பொருட்களை போட்டு வைக்கவும்.
அந்தந்த டப்பாக்களில் அடயாளம் காண்பதர்க்கு அதில் அதன் பெயரை எழுதி ஒட்டி வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
2. வாரம் ஒரு முறை அதை சரிபார்க்கவும், ஏதவது ஒருசில பொருட்களில் பூச்சிகள் தென்பட்டாலோ அதை அப்புற செய்து சலித்து காயவைத்து விடவும்(மாவுவகைகளை)
3. ஒவ்வோறு மளிகை பொருட்களிலும் கரண்டி சிரியது முதல் பெரியது வரை( Plactic&silver spoons) உபயோகப்படுத்தவும்.
4. அதிகமாக உபயோகப்படுத்தும் பொருட்களை நாம் சின்ன சின்ன பிளஸ்டிக் டப்பகளில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். எ.டு., கடுகு, எண்ணைய், உளுந்து, க.பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்கள் தூள், மற்றும் இதர தூள்வகைகள், அடுப்புமேடையில்,ஒருசெட் தனியாக வைத்தால் அவரசத்தில் எதையும் தேடிகொண்டு இருக்க வேண்டாம்.
5. அரிசி வகைகளில் பட்டை மிளகாயை போட்டு வைத்தால் அதில் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம், மற்றும் அதில் அரிசி அளக்கும் படி அல்லது கப் இவை எப்போழுதும் அதிலேயே போட்டு வைத்தால் தேட வேண்டாம்.

காய்கறிகள்:

1. நாம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை ஒரு டப் தண்ணீரில் காய்களை ஒவ்வொன்றாக அலசி பிரிட்ஜில் வைக்கவும்.
2. எலுமிச்சை பழம் காய்ந்து போகாமல் இருக்க அதை ஒரு (Foil papers ) வைத்தால் காயாமல் இருக்கும் (ஜுனியர் ஹார்லிக்ஸில் வரும் சில்வர் பேப்பர்) பாதியாக வைத்தாலும் காயாமல் இருக்கும்.
3. கீரை வகைகளை உடனடியாக உபயோகப்படுத்த வேண்டும். புதினா, கொத்தமல்லி வங்கி வந்தவுடன் அதன் வேர்களை நீக்கி தண்ணீரில் அலசியவுடன் ஒரு கவரில் போட்டு வைக்கவும். (இதர்க்கு ஏற்ற கவர் கல்யாண வீட்டில் கொடுக்கும் தேங்காய் பை, வழுவழுப்பாக இருக்கும்)
4. பச்சை மிளகாயையும் அதே கவரில் போட்டு வைக்கலாம், பச்சை மிளகாயை வைக்கும்முன் அதன் காம்பினை நீக்கியபின் வைத்தால் சீக்கிரம் பழுக்காது.
5. இஞ்சி, பூண்டையும் அரைத்து விழுதாக வைக்கவும்.

தோழிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், நான் கொடுத்திருக்கும் கருத்துக்களில் ஏதெனும் தவறுகள் இருந்தால் மன்னித்து உடனடியாக சரி செய்யவும்.

அன்புடன்
நித்யா

நன்றீ அண்ணீ,
ரொம்ப நல்ல suggestion ப்ட் உங்ஹ கிட்ட இருந்து இன்னும் நிரைய எதிர் பர்ர்க்கிரொம்.அண்ணீ இன்னைகு என்ன் சமயல் .

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

வணக்கம் நான் காயத்ரி...

என்னோட குறிப்பு என்னனா ,fridge-இல் நாற்றம் வராமல் இருக்க , எலுமிச்சை துண்டுகளை கட் பண்ணி வைக்கலாம் ...

எந்த பொருளையும் திறந்து வைக்க கூடாது.

--

-

-

நல்ல தலைப்பு நித்யா...

ஆரம்பமே அமர்க்களம்.எதுபற்றியும் டிப்ஸ் கொடுக்கலாம் இல்லையா?
நான் பிறகு வந்து சொல்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கிறது. கொத்தமல்லி புதினா கருவேப்பிலையை டப்பாவில் இட்டு ஃபிர்ஜ்ஜில் வைத்தால் அதிக நாள் கெட்டுப்போகாது. சமையல் செய்யும் போது கழுவி பயன்படுத்தலாம் கீரை வகைகளை மண்ணுடன் சேர்ந்த வேரை நீக்கிவிட்டு நியூஸ் பேப்பர் சுற்றி வைக்கலாம். தேங்காய் துருவி டப்பாவில் இட்டு பிரீஸரில் வைத்தால் அதிக நாள் உபயோகிக்கலாம்

பொன்னி

நல்ல விஷயங்கள் சொல்லிருக்கீங்க

நன்றி. படிக்க தான் நேரமில்லை. நான் எனக்கு தெரிந்ததை பிறகு கூறுகிறேன். தங்களுடையதை படித்துவிட்டு தான் நான் கூற வேண்டும். பிறகு நானும் அதையே கூறிவிடப் போகிறேன்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

-

மேலும் சில பதிவுகள்