பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா

அறுசுவை தோழர் மற்றும் தோழிகளே..

வேலைப்பழு சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சரியான நேரத்தில் தொடங்க வேண்டிய பட்டி மன்றம் சிறிது காலத் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்.

இதோ உங்களுக்காக........

பெருகி வரும் தகவல் தொடர்பு வசதிகள் (டிவி, ரேடியோ, இன்டர் நெட்,மொபைல் ...இன்னும் பல) இன்றைய இளையத் தலைமுறையினர்களின் வளர்ச்சியை சீராக்குகிறதா ? சீரழிக்கிறதா?

உங்க கருதுக்களை கொண்டு வந்து கொட்டுங்க.. ;-)

இன்னொரு முறை பட்டிமன்ற விதிமறைகள் :
1.யார் பெயரையும் குறிப்பட்டு வாதாட கூடாது.
2.ஒரே ஒரு அணியை எடுத்து அதில் பேச வேண்டும்.. பொதுவாக இரண்டு பக்க கருத்தையும் கூறக்கூடாது.
3.ஜாதி, இனம், மொழி, என தேவையில்லாத சமூக பிரச்சனையை திணிக்கக்கூடாது.
4.யார் மனதையும் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தாமல் வாதாட வேண்டும்
5.நடுவரின் தீர்ப்பே உறுதியானது.. இறுதியானது.. (அப்பா தப்பிச்சாச்சு ;-)...இதுக்கு விதிமுறைனு எல்லாம் ஒரு பில்டப் குடுக்க வேண்டி இருக்கு.. ;-) )

சுந்தரி

அடடா.. என்ன இது.. எல்லாரும் ரெண்டு பக்கமும் சப்போர்ட் பண்றீங்க..பட்டி மன்றம்னா ஒரே ஒரு பக்கத்தை மட்டும் எடுத்து வாதாடனும்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய்
கண்டிப்பாக தகவல் தொடர்பு சாதனங்கள் இளையத் தலைமுறையினர்களின் வளர்ச்சியை சீராக்குகிறது. ஏனென்றால் இன்றைய இளைய சமூதாயத்திற்கு எது நல்லது, எது வளர்ச்சிக்கு, எது வெறும் பொழுதுபோக்கிற்கு, எதை விடுப்பது, எதை எடுத்துக்கொள்வது என்பது நன்றாகவே தெரிகிறது.

இதுவும் கடந்து போகும்.

அப்பாடா யோகலஷ்மி

ஒரு வழியா சீராக்குகிறதுனு ஒருத்தர் முடிவு பண்ணிட்டாங்க.. எதிரணி வந்ததும்.. இவங்களோட கருத்துக்களை மழை மாதிரி கொட்டி எடுக்கப் போறாங்க.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


சீராக்கிதான் வரதுன்னுதான் சொல்வேன்.
ரேடியோ இல்லாத எடம் இப்பொ எங்கியாவது இருக்கோ?
அன்னிக்கு மினி பஸ்ல நான் போன போது ’ஒலக கண் நாள’ பத்தி ரேடியோல சொல்லிண்டுருந்தா
அதுல கண்ணை பாதுகாக்கரது எப்படி, என்னென்ன நோய் கண்ணுல வரும்,அதுக்கு என்னனென வைத்யம் பண்ணலாம்னு சொன்னா.
என் பக்கத்துல ஒரு 10வது படிக்கற பொண் ஒக்காந்துண்டு வந்தா.
அவளுக்கு கண் சித்த மங்கலாதான் தெரியுமாம்
இதையெல்லாம் கேட்ட பின்னாடி அவ ’மாமி, இது பத்தி யார்கிட்டயாவது கேக்க நேக்கு ரொம்ப சங்கோஜமாயிருந்தது.நான் இப்பொவே அரவிந்த் ஐ ஹாஸ்பிடல் போய் கண்ண டெஸ்ட் பண்ணிக்கரேன்னு சொன்னா.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா

சீராக்குகிறதுனு அடிச்சு சொல்லிட்டாங்க நம்ம மோகனா.. யாருப்பா எதிர்த்து போட்டி போட போறிங்க.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா என் பெயர் பொன்னி. சீராக்காது எப்படின்னா இப்போ டிவி, நெட் இதில் எல்லாம் நல்ல விஷயங்கள் இருக்கு கெட்ட விஷயங்களும் இருக்கு இளைஞர் இந்த காலத்தில கெட்ட விஷயங்கள்ல ரொம்ப அட்ராக்ட் ஆகுறாங்க அட்ராக்ட்ன்னு சொல்றத விட curiosity அதிகமாகுது அதனால உள்ளே போறாங்க வெளியே வரமுடியரது இல்லை இப்படியே போனா எங்க சீரகும்

அதென்னப்பா சிங்கம் புலி புரியலை

பொன்னி..

ஓ.. பொன்னி என்ன சொல்ல வராங்கனா... இளைய சமூகம் கெட்ட விஷயத்தால் சீக்கிரம் ஈர்க்கபடுகிறார்கள். அதனால் சீரழிக்கிறதுனு சொல்றாங்க.. அப்பா ஒரு எதிரணி உருவாயிட்டது.. நிம்மதி ;-)..

சிங்கம் புலி எல்லாம் இனி வருவாங்க பாருங்க.. படு பயங்கரமா வாதாடுபவர்களை கூறினேன் பொன்னி ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாங்க நடுவரே! எங்க இன்னும் காணோமேன்னு நினைச்சேன்..

ரம்யா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கங்கற நம்பிக்கையில் சொல்றேன். இந்த தலைப்பில் ஏற்கெனவே பட்டிமன்றம் நடந்து தீர்ப்பும் வந்திடுச்சு.

http://www.arusuvai.com/tamil/node/10198

தலைப்பு சொல்லப்பட்ட விதம் வேறன்னாலும் ஒரே பொருள்தான்.

முடிந்தால் தலைப்பை மாற்றி ஆரம்பியுங்கள். ஏற்கெனவே ஒருவர் நடுவராக இருந்து முடிவு சொன்ன பிறகு நாம் மீண்டும் வாதிப்பது வேண்டாம் என நான் நினைக்கிறேன்.

முடிவு முழுக்க முழுக்க உங்கள் கையில் மட்டுமே! நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்படி இல்லை,
ஏதோ சில பேர்தான் தப்பான விஷயங்களுக்காக பயன்படுத்தறாங்க, எவ்வளவோ நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறதே, நம்முடைய நேரம் இன்று பயனுள்ளதாக களிக்க முடிகிறது என்றால் அது மீடியா மூலம்தான்.

குழந்தைகளின் அறிவு கூட நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. வீட்டில் இருந்து கொண்டே ரேடியோ மூலமும் டிவி மூலமும் நாம் அறிந்து கொள்ள எத்தனையோ விஷயம் நமக்காக நாற்காலியிட்டு காத்துக் கொண்டிருக்கிறது. அதை தேடி செல்வது நமது கடமையே.

அன்புடன்
பவித்ரா

அடடா கவி...

பழைய தலைப்பில் பார்த்தேன்
கவி..என்னுடையதில் நான் நீங்கள் கூறிய தலைப்பை தேடி பார்த்தேன்.. காணவில்லையே. அதை பார்த்து இல்லை என தீர்மானித்த பின்பே இந்த தலைப்பை போட்டேன். நகரமா கிராமமா என்ற தலைப்புதான் உள்ளது 10ல்.. விவாதங்களில் உள்ளதா? அரட்டையில் உள்ளதா?

எனினும் தலைப்பை மாற்றுகிறேன்

மேலும் கவி நீங்க குடுத்திருக்க லின்க்ல் இதே தலைப்புதான் பேசியே முடிச்சமாதிரி இருக்கு. ஆனா என்னோட மன்றத்தின் லிஸ்ட்ல இல்லியே..ஏன் ? ;-) அதனால தான் எனக்கு கன்யூஷன்.. இப்போ அடுத்த ஒரு தலைப்பு இருக்கு. அது ஏற்கனவே பேசப்பட்டதா இல்லையானு தெரிலையே..

என்னோட லிஸ்ட்ல மீடியா தலைப்பு எடுக்கும் முன்னாடி பார்த்தமாதிரி இந்த புது தலைப்பையும் செக் பண்ணிட்டேன். இருந்தாலும் நம்பமுடில. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்