பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா

அறுசுவை தோழர் மற்றும் தோழிகளே..

வேலைப்பழு சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் சரியான நேரத்தில் தொடங்க வேண்டிய பட்டி மன்றம் சிறிது காலத் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்.

இதோ உங்களுக்காக........

பெருகி வரும் தகவல் தொடர்பு வசதிகள் (டிவி, ரேடியோ, இன்டர் நெட்,மொபைல் ...இன்னும் பல) இன்றைய இளையத் தலைமுறையினர்களின் வளர்ச்சியை சீராக்குகிறதா ? சீரழிக்கிறதா?

உங்க கருதுக்களை கொண்டு வந்து கொட்டுங்க.. ;-)

இன்னொரு முறை பட்டிமன்ற விதிமறைகள் :
1.யார் பெயரையும் குறிப்பட்டு வாதாட கூடாது.
2.ஒரே ஒரு அணியை எடுத்து அதில் பேச வேண்டும்.. பொதுவாக இரண்டு பக்க கருத்தையும் கூறக்கூடாது.
3.ஜாதி, இனம், மொழி, என தேவையில்லாத சமூக பிரச்சனையை திணிக்கக்கூடாது.
4.யார் மனதையும் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தாமல் வாதாட வேண்டும்
5.நடுவரின் தீர்ப்பே உறுதியானது.. இறுதியானது.. (அப்பா தப்பிச்சாச்சு ;-)...இதுக்கு விதிமுறைனு எல்லாம் ஒரு பில்டப் குடுக்க வேண்டி இருக்கு.. ;-) )

sorry to say this. நானும் இதை தான் சொல்ல வந்து யோசித்து நின்றேன். இந்த தலைப்பு ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டது. மீண்டும் நீங்கள் அதை தலைப்பாக அறிவித்ததும் உங்களிடம் சொல்ல தோன்றியது. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது நமக்கு சரியாக தெரியாமல் சொல்ல கூடாதே என்று சொல் யோசித்துக் கொண்டிருந்தேன். கவி சிவா சொல்லிட்டாங்க.
இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் இருக்கு ரம்யா நீங்க அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விரும்பினால்
தலைப்புகள் காண / சேர்க்க:

http://www.arusuvai.com/tamil/node/10388
(உபயம்: வனிதா)

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" அப்படீன்னு சொல்லுவாங்க.

நல்லாயிருக்கு என்பதற்காக ஓவரா எந்த விஷயத்தை எடுத்துக்குட்டாலும் கெடுதிதான். அதற்காக அந்த பொருளே தவருதான்னு சொல்லிட கூடாது இல்லையா.

முன்னாடி, பள்ளியில் படிக்கும்பொழுது ஒரு பொருள பற்றி தெரிஞ்சிக்க, படிச்ச விஷயங்கள் கற்பனை செய்து இப்படி இருக்கும்னு ஒரு வரைபடம் வச்சி நம்ப ஒன்னு புரிஞ்சி வச்சிருப்போம், ஆனா கல்லூரியில் படிக்கும்போது அத நேரடிய பார்த்தா அது சுத்தமா வேற மாதிரி இருக்கும். இப்பொழுது 3-dimension முறையில், முதல் முறையே நன்றாக கற்றுக்கொள்ள முடியுது. இது எவ்ளோ பெரிய அனுகூலம்.

இதுவும் கடந்து போகும்.


சீராக்கறதுங்கறதுன்னுதான் நான் சொல்வேன்.

டிவி ய எடுத்துகோங்கோ.முன்பெல்லாம் நியுஸ் பாக்கனும்னா அடுத்த நாள் வரைக்கும் காத்துண்ட்டிருக்கனும்.
இப்போ ஒடனே ஒடனே லோக்த்ல எந்த மூலெல என்ன நடந்தாலும் நம்மாத்துக்கே வந்துடறது.
இண்டர் நெட்டால பயன் பெறாதவா இருக்காளா என்ன?
ஒன்ன்மில்ல நமக்கு என்ன தெரியலேன்னாலும் நெட் மூலியமா ஒடனெ பாத்து தெர்ஞ்சுக்கறோமே!
காட்டு விலங்குகளை பத்தி முந்தி எத்தனை பேருக்கு தெரியும்?
இப்போ டிஸ்கவரி சானல பாத்து அதுவும் தமிழ்ல தெர்ஞ்சுக்கறோம் .

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இளைய தலைமுறை சீரழிந்து கொண்டிருக்கிறது. இது எதிர் அணியிணர் கூட மறுக்க கூடாத மறுக்க முடியாத உன்மை அதென்னங்க செல்ல காதுல வச்சா நேரம் போறதே தெரியாதா?.என்ன பேசறாங்க மணிக்கணக்கா பாடத்துல சந்தேகமா கேக்கறாங்க, இதிலும் பெண்களை பெற்றெடுத்துள்ள பெற்றோர்கள் மடியில் நெருப்பை கட்டிகொண்டிருக்கின்றனர். அனைத்து கல்லூரிகளிலும் ஏன் செல்போன்களை தடை செய்திருக்கிறார்கள் என்ற தகவல் எதிரணியினருக்கு தெரியாதா? எவ்வளவு சாலை விபத்துக்கள் அதனால் எத்தனை உயிரிழப்புகள் இதனால் பாதிக்கப் பட்ட குடும்பங்கள் எவ்வளவோ. குழந்தைகள் செல்லும் பள்ளி வாகனத்தை டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டி பல குழந்தைகள் பலியானார்கள். இதெல்லாம் வளர்ச்சியா நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள் எதிர் அணியினரே தொலைக்காட்சிகளால் படிப்பை தொலைத்த குழந்தைகள் எத்தனையோ பேர். ஒரு பையன் தொலைக்காட்சியில் வரும் ஹீரோ போல் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்தது தெரியாதா, ஆகவே சீரழிவுதான் அதிகம் என்பதே என் கருத்து.

அன்புடன்
THAVAM

நடுவரே, அப்படி சொல்ல முடியாது,
செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் நமது வாழ்க்கையை யோசித்து பாருங்கள், அது நமக்கு எவ்வளவு உபயோகமானதாக உள்ளது. நாம் நினைத்த நேரத்தில் எங்கிருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை, யாருடன் வேண்டுமானாலும் பேசலாம், விவசாயம் முதல் கிரிக்கெட் ஸ்கோர் வரை தெரிந்துகொள்ள அதன் தேவை அத்தியாவசியம்.போன் மற்றம் இல்லை அனைத்து ஊடகங்களும் சீர் படுத்துகின்றன.
அருசுவை எடுத்து கொள்ளுங்கள், உலகத்தில் ஏதோ ஒரு மூளையில் உள்ள நாம் அனைவரும் நட்பு என்ற வட்டத்துக்குள் உள்ளோம் என்றால் அது சீரமைப்பே.

அன்புடன்
பவித்ரா

ரம்யா, நீங்கள் நெய்த இழை அருமையான இழை. வாழ்த்துக்கள். இந்த தலைப்பில் நீங்கள் ரேடியோவை சேர்த்திருக்க வேண்டாம். அது எந்தவித சீரழிவையும் இது வரை ஏற்படுத்தவில்லை. நம் தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா, அவங்க தாத்தா, பாட்டி, பாட்டிக்கு பாட்டி, அவங்க பாட்டி (பல்லை நறநறக்குறது இங்க கேக்குது.) சரி நான் விஷயத்திற்க்கு வரேன். இப்படி அந்த காலத்து பெரியவங்க எல்லோரும் பெரிய ரேடியோ பெட்டிய வச்சு தான் உலகத்துல என்ன நடக்குதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க . அவங்கல்லாம் சீரழிஞ்சு போகலயே. அதனால, இந்த தலைப்புல ரேடியோவ ஓரம் கட்டியிருக்கலாம்.

இப்ப நான் வாதத்துக்கு வரேன். நான் பேச போவது பெருகிவரும் தகவல் தொடர்பு (டிவி,இன்டெர்னட்,செல்போன்) இளைய தலைமுறையை வெகுவா சீரழிக்குது, சீரழிக்குது,சீரழிக்குது அப்படின்னு தான்..

டிவிய எடுத்துக்குங்க. நம்ம சின்ன வயசா இருக்கும்போது நமக்கு சானிட்டரி நாப்கின்னா என்னன்னு தெரியாது. இப்ப நம்ம வீட்டு வாண்டுகள கேளுங்க தெள்ளத் தெளிவா சொல்லுவாங்க. அதேபோல எந்த பெற்றோராவது தங்கள் பிள்ளைகளை டீவி விளம்பரங்களை பார்க்க விட முடிகிறதா? அடுத்து வருவது காண்டம் விளம்பரம், அதற்கு உணர்ச்சி பெருக்கோடு ஒரு விளம்பரம் வேறு. இதற்கு பிள்ளைகள் கேட்கும் சந்தேகத்திற்க்கு நம்மால் விளக்கம் அளிக்க முடியமா? டிவியில் தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்று இல்லை. எத்தனையோ மக்கள் தொடர்பு சாதனங்கள் உள்ளன அவற்றில் செய்யலாமே.

அதேபோல இப்போது ஒளிபரப்பப்படும் தொடர்கள் எத்தனை நல்லனவற்றை சொல்ல வருகின்றன. அதுக்காக நீங்க கேக்கலாம், நல்ல தொடர் இல்லைல நீங்க ஏன் பார்க்கறீங்கன்னு? ஏங்க, அதுக்காக நாங்க நல்ல டிவி ஒன்னு, கெட்ட டிவி ஒன்ன்னுன்னா வாங்க முடியும். எல்லாத்துலயும் அததான் போட போறாங்க. சின்ன பசங்க எங்காவது நீயூஸ் பேப்பர பார்த்து எனக்கு 'குறு குறு' (அட அது தாங்க கோணலும், மாணலுமா இருக்குமே பேரு கூட KurKure ன்னு சொல்லுவாங்களே)வாங்கி தா, எனக்கு லேஸ் சிப்ஸ் வாங்கி தா, அப்புறம் மேகி வாங்கித்தானு சொல்றாங்களா? இல்லையே. எல்லாம் இந்த பாழாபோன டிவிய பார்த்துட்டு தானே நச்சரிக்கறாங்க. அவங்க கேட்ட அத்தன ஐட்டமும் உடம்புக்கு ரொம்ப நல்லதுங்களா?

ஓரிரு வருடங்களுக்கு முன்னால் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொடரை பார்த்த 5 வயது சிறுவன் விளையாட்டாக தனக்கு தானே உடம்பில் தீயை வைத்துக் கொண்டு அந்த தொடரில் நடித்த துடிப்பான நாயகன் பறந்து வந்து காப்பாற்றுவார் என்று ஏமாந்து பரிதாபமாக உயிர்விட்டான். இவை இளைய தலைமுறையை சீராக்குபவையா? அதுபோல டிவியில் ஒளிபரப்பபடும் மல்யத்தம் சிறு பிள்ளைகளை வெகுவாக கவரும் ஒரு நிகழ்ச்சி. அந்த இடத்தில் அவர்களே இருந்து சண்டை இடுவது போல தங்களை பாவித்துக் கொள்வார்கள். இது பிஞ்சு வயதில் அவர்களுக்கே தெரியாமல் வன்முறை என்னும் நஞ்சை கலக்கும் விஷயம் இல்லையா? இளைய தலைமுறை துளிரிலேயே பட்டுப் போய்விடாதா?

இன்டெர்நெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். கம்யூட்டர் இன்டெர்நெட் வசதியோடு வைத்திருக்கும் வீடுகளில் பிள்ளைகளை பெற்ற பெற்றோர் நிம்மதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பார்கள். மாணவர்கள் குரூப் ஸ்டடீஸ் என்று சொல்லிக் கொண்டு குரூப்பாக தவறான வலை தளத்தில் தங்களுடைய கல்வியையும், எதிர்காலத்தையும் குழியில் தள்ளி புதைத்துக் கொண்டிருப்பார்கள். வீட்டில் பார்க்க முடியாவிட்டால் இன்டெர்னெட் நிலையங்கள் சென்று அவர்களுடைய அற்ப ஆசைகளை பார்த்து தீர்த்துக் கொள்வார்கள். இப்போது இன்டெர்னெட் நிலையங்களில் காவல் துறை தீவிரமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை விதித்துள்ளதே அது இளைய தலைமுறையை சீரழிக்கவா? கூடுமானவரை சீரழிவு பாதைக்கு போகாமல் தடுக்க.

அடுத்தது செல்போன். முன்பெல்லாம் ஒரு இடத்தையோ, இயற்கை காட்சிகளையோ, முக்கிய நிகழ்ச்சிகளையோ, தனி நபரையோ, சொந்தங்களையோ படமெடுக்க ஒரு பெரிய கேமராவை சுமந்து செல்வர். ஆனால், இப்போது நவீன யுகத்தில் கைக்கு அடக்கமான செல்போனிலேயே பல படங்களையும் எடுக்கலாம், பலான படங்களையும் எடுக்கலாம். எடுத்த படத்தை தான் ரசித்தால் போததென்று தன்னுடைய சுற்றம் நட்புக்கெல்லாம் அனுப்பலாம். இதுபோதாதென்று சம்மந்தப்பட்டவர்களை அந்த படம் காண்பித்து மிரட்டி தனது தேவையை தீர்த்துக் கொள்வது. வக்கிர புத்தி படைத்தவர்கள் செல்போனிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி எத்தனை குடும்பங்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை கண்கூடான உண்மை.

நீங்கள் எல்லோரும் இவற்றில் உள்ள நன்மைகளை பட்டியல் போட்டாலும் இதில் உள்ள தீமைகள் தான் முன்னின்று இந்த தலைமுறையை தவறான பாதைக்கு வழிநடத்துகிறது. நீங்கள் சொல்லும் நன்மைகள் ஒருகுடம் முழுக்க இருக்கும் பாலென்று வைத்துக் கொண்டாலும் நான் சொல்லியிருக்கு தீமைகள் என்னும் ஒரு சொட்டு விஷம் கலந்திருந்தால் அந்த குடம் பாலும் வீண். யாருக்கும் பயன் படாமலே போகும்.

ஆகவே நடுவர் அவர்களே தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இளைய தலைமுறையினரை சீரழிப்பதை தவிர வேறோன்றும் செய்யவில்லை என்று கூறி எங்களுக்கு நல்ல தீர்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

(செல்போன் ரிங்..ரிங்.ரிங். ஹலோ...என்னங்க விஷயம். என்னது டிவில எனக்கு பிடிச்ச் சீரியல் தொடங்கிட்டாங்களா? இதோ, நான் வந்துட்டே இருக்கேங்க. இப்ப தான் பட்டிமன்றத்துல பேசி முடிச்சேன். சரி, நான் வர்ற வரைக்கும் சீரியல்ல ஒரு சீன் விடாம பார்த்து வையுங்க நான் வந்தவுடன் கதை சொல்லுங்க. சரியாங்க. வச்சுடவா. சரி வச்சுடறேன்.)

ஹிஹிஹி தப்பா நினைச்சுக்காதீங்க. என் வீட்டுக்காரர் தான் என்னை இங்கே வந்து பிக்கப் பண்ணிட்டு போறேன்னு சொன்னாரு. அதுக்கு தான் கால் பண்ணாரு வேற ஒண்ணும் இல்லை. (அப்பாடா. தப்பிச்சோம் யாரும் நாம பேசினத கேக்கல)

கல்பனா வுடு ஜீட்ட்ட்ட்ட்ட்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் இன்னும் சொல்ல நினைத்ததையும் சகோதரி கல்பனா அவர்கள் அழகாக சொல்லிவிட்டார் அவருக்கு நன்றி விடலை பருவம் என்பது உடலளவில் வளர்ந்தும் மனதளவில் வளராத பருவம் அந்த வயதில் எதை பார்த்தாலும் ஒரு ஈர்ப்பு வரும் அவர்களை குறி வைத்து கெடுத்து கொண்டிருக்கன்றன பல மோசமான இணையதளங்கள் அதை பார்ப்பதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை இந்த நிறுவனங்கள் உனக்கு வயசு 18 ஆயாச்சான்னு பொத்தாம் பொதுவா ஒரு கேள்வி ஆம்னு சொன்னா போதும் உள்ளே போயிடலாம் அந்த மாதிரியான இணையங்களை நடத்துபவர்களே ஏன் எங்கள் குழந்தைகளை குறி வைத்து தாக்குகிறீர்கள் அவர்களை கெடுப்பதால் உங்களுக்கு என்ன லாபம் எங்கள் நாட்டின் எதிர்காலங்கள் அவர்கள் அவர்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் எங்கள் அரசே சட்டங்களை இன்னும் கடுமையாக்குங்கள். நமது வருங்கால சந்தயினர் உடலளவிலும் மனதளவிலும் ஆரொக்கியமும் வலுவும் உள்ளவர்களாக இருக்க விடுங்கள்.ஒருநாள் என் மகன் வயது12 ஆங்கில விளையாட்டு சேனல் ஒன்றில் அடித்து கொள்ளும் சண்டை நிகழ்ச்சியை பார்த்து விட்டு தூக்கத்தில் என் முகத்தில் ஓங்கி விட்டான் ஒரு குத்து அவனை எழுப்பி கேட்டபோது அவன் சொன்னான் டிவில பார்த்தது மாதிரியே கனவில் நான் சண்டை போடுவது போல் வந்தது அதுதான் குத்தினேன். நீங்க ஏம்பா குறுக்க வந்தீங்க என்றான் நடுவர் அவர்களே யோசனை செய்யாம தீர்ப்பு தராதீங்க என் மகனிடம் சொல்ல வேண்டி இருக்கும். வணக்கம்

நன்றி

அன்புடன்
THAVAM

பட்டிமன்றத் தலைப்பு இது தான் என்று முடிவாகிவிட்டதா? ரம்யா நீங்கள் ஏதோ மாற்றுத் தலைப்பு கொடுக்கப்போவதாக கூறியுள்ளீர்கள். நானும் நிறைய யோசித்து வைத்து சொல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் இந்த தலைப்பு ஏற்கனவே பட்டிமன்றம் வைத்து தீா்ப்பு கூறியாகிவிட்டது என்று சொல்கிறீா்கள். பட்டிமன்றத் தலைப்பை விரைவில் முடிவு செய்யுங்கள் ரம்யா. காத்திருக்கிறோம்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இந்த தலைப்பின் கீழ் ஏற்கனவே பட்டிமன்ற நடந்துள்ளது என கவிசிவா சொன்னதால் இந்த பட்டியில் கலந்துக்கொள்ள குழப்பமாய் இருக்கிறது.

பட்டி நடந்தது உண்மை தான். ஆனால் அது பட்டிமன்ற சிறப்பு இழையில் ஏன் குறிக்கப்படவில்லை?

பழையவர்களுக்கு என்னன்ன பட்டி நடந்தது என தெரியும். புதிதாய் வருபவர்கள் நடுவராய் வந்தால் எப்படி தெரிந்துக்கொள்வது?

நடந்து முடிந்து விட்டது என சொல்லப்பட்ட தலைப்பு பொது தலைப்பில்,பொதுவிரிவில் உள்ளது. இதனால் எந்த தலைப்பை தேர்ந்தெடுப்பது என குழப்பம் வராதா?

ரம்யா’வும் இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார் என நினைக்கிறேன். இந்த பட்டியை தொடங்குவீர்களா? இல்லை வேறு தலைப்பை சொல்ல போகிறீர்களா?

எதுவாயினும் கலந்துக்கொள்ள நாங்கள் தயார். குழப்பத்தை மட்டும் போக்குங்கள். இதிலேயே தொடர்ந்து பேசலாமா?

பட்டியில் நடுவர்,அட்மின் தவிர நடுநிலையாய் பேச யாருக்கும் அனுமதி இல்லை என்பது தெரியும். இது வரை யாரும் சொல்லாததால் இதை நான் கேட்கிறேன்.மன்னிக்கவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட்மின் அண்ணா & ரம்ஸ், ஆமினா, எனக்கும் அதே சந்தேகம் தான், நாம் இதில் தொடர்ந்து பேசலாமா வேண்டாமா என்பதை சொன்னால் நல்லது.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்