வால் ஹேங்கிங்

தேதி: July 26, 2010

3
Average: 3 (15 votes)

 

பழைய காலண்டர் அட்டை
பெல்ட் துணி
கோல்டுநிற சம்கி
ஸ்டோன்கள்
உல்லன் நூல் - கருப்பு நிறம்
க்ளாஸ் ஸ்ட்ரா - 10
கலர் மணி பெரியது - 21
வெள்ளைநிற மணி - 5
பெவிக்கால்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 3
கம் டேப்
பிஷ்நெட் ஒயரில் செய்த குருவி - 2, மீன் - 1

 

வால் ஹேங்கிங் செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பழைய காலண்டர் அட்டை 14 செ.மீ அளவில் சதுரமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பெல்ட் துணியை 17 செ.மீ அளவிலான சதுரதுண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதன் நான்கு மூலைவிட்டத்தையும் 3 செ.மீ அளவில் நறுக்கி விடவும்.
பின்பு பெல்ட் துணியை திருப்பி வைத்து அதன் மேல் அட்டையை வைத்து நான்கு பக்கங்களையும் பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
குந்தன் ஸ்டோன்களில் ஜர்தோஸி ஒர்க், மணிகள் வைத்து தைத்து ரெடிமேடாக கடைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்டோனை பெல்ட் துணி ஒட்டிய அட்டையின் நடுவில் வைத்து ஒட்டிக் கொள்ளவும். அட்டையின் நான்கு பக்கங்களிலும் உள்ள மூலைவிட்ட பகுதியை தவிர, அதன் ஓரங்களில் பெரிய சம்கியை ஜிக்ஜாக் வடிவில் வரிசையாக வைத்துக் கொண்டு வரவும்.
இதைப்போல் அட்டையின் நான்கு பக்கங்களிலும் செய்து முடிக்கவும். அதன் மூலைவிட்ட பகுதியில் பூவடிவிலான ஸ்டோனை இடைவெளிவிட்டு வரிசையாக மூன்று ஸ்டோன்களை ஒட்டிக் கொள்ளவும்.
22 செ.மீ அளவிலான உல்லன் நூலை எடுத்துக்கொள்ளவும். அதில் பெரிய கலர்மணியை கோர்த்து அடியில் முடிச்சு போட்டுக் கொள்ளவும். பிறகு அந்த நூலின் ஒரு க்ளாஸ் ஸ்ட்ராவை கோர்க்கவும். அடுத்து ஒரு பெரிய மணி, சிறிய வெள்ளைநிற மணி, பெரியமணி, ஒரு ஸ்ட்ரா என்று கோர்க்கவும். கடைசியாக ஒரு பெரிய மணியை கோர்த்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். இதேப் போல் மற்றொரு நூலில் கோர்த்து வைக்கவும். அட்டையை பின்புறமாக திருப்பி அதன் இரு முனைகளிலும் இந்த மணியை பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
28 செ.மீ அளவிலான நூலில் முதலில் பெரிய மணியை கோர்த்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். அடுத்து பிஷ்நெட் ஒயரில் செய்த கிளியை அதன் வால் பகுதியில் உள்ள துளையில் கோர்க்கவும். பிறகு ஒரு பெரிய மணி, க்ளாஸ் ஸ்ட்ரா, ஒரு பெரிய மணி, சிறிய வெள்ளைநிற மணி, பெரியமணி ஆகியவற்றை கோர்க்கவும். கடைசியாக ஒரு க்ளாஸ் ஸ்ட்ராவும், பெரிய மணியையும் கோர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். இதேப் போல் மற்றொன்று செய்து வைக்கவும்.
அடுத்து 32 செ.மீ அளவில் உல்லன்நூலை நறுக்கி எடுத்துக் கொண்டு அதில் 22 செ.மீ நூலில் கோர்த்து போல் மணியையும் ஸ்ட்ராவையும் கோர்த்து வைக்கவும். கடைசியாக பிஷ்நெட் ஒயரில் செய்து வைத்திருக்கும் மீனை அதன் தலைப்பகுதியில் உள்ள துளையின் வழியாக கோர்த்து விட்டு ஒரு மணியையும் கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
அட்டையின் பின்புறத்தில் அடிப்பகுதியிலுள்ள முனையில், பெவிக்கால் தடவி மீன் கோர்த்து வைத்த நூலில் முடிச்சுப் போட்டப்பகுதியை வைத்து ஒட்டவும். பிறகு ஒட்டி வைத்திருக்கும் நூலுக்கு உள்ள இடைவெளியின் நடுவில் கிளிகள் கோர்த்து வைத்த நூலை ஒட்டி விட்டு நன்கு காயவிடவும். நூல் ஒட்டிய இடத்தின் மேல் கம் டேப்பை தேவையான அளவு சிறியதாக நறுக்கி ஒட்டவும்.
பிறகு ஐஸ்க்ரீம் ஸ்டிக்கை 7 செ.மீ அளவில் மூன்று துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் ஏதாவது ஒரு பக்கத்தில் கலர் கம் டேப்பை ஓட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு மூன்று துண்டுகளையும் முக்கோணம் போல் வைத்து பெவிக்கால் கொண்டு ஒட்டி நன்கு காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
இதனை அட்டையின் மேல் முனையில் வைத்து ஒட்டவும். அட்டையில் ஒட்டும் போது முன்பக்கத்தில் ஆணியில் மாட்டிவைப்பதற்கு போதுமான இடைவெளி உள்ளதா என்று சரிப்பார்த்துவிட்டு ஒட்டவும்.
எளிமையான முறையில் செய்யக்கூடிய வால் ஹேங்கிங் தயார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் பத்மா, ரேவதி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பத்மா, ரேவதி.

அருமையான கைவேலை
எப்படி தான் இப்படிலாம் யோசிக்கிறீங்கலோ?

வாழ்த்துக்கள். இதுபோல் அதிக கைவினைகளை செய்து காட்ட வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பத்மா & ரேவதி,
என்றும் போல் கலக்கல் குறிப்பு. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

வால் ஹேங்கிங்க் ரொம்ப அழகா இருக்கு. தனலஷமிங்க்ரவங்க
ஃபிஷ்னெட் ஒயரில் மீன் பண்ணும் விதம் சொல்லித்ததிருந்தாங்க.
க்ருவி செய்முறை எங்கே இருக்கூ?

கோமு
ஏன் உங்க தமிழ் இப்படி தடுமாறுது?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கே தெரியலையே.

பத்மா அண்ட் ரேவதி மேடம்,
ரொம்ப அருமையா இருக்கு...
மேலும் நல்ல குறிப்புகள் தாங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

nan arusuvaiku puthusu tholiyeray, ungal wallhanging simply superp. very beautiful.

வாங்க எப்படி இருக்கீங்க, அருசுவைக்கு உங்களை வரவேற்கிறே. தமிழில் டைப் செய்வது எப்படி என்று கீழே பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்..

அன்புடன்
பவித்ரா

பிஷ்நெட் ஒயரைக் கொண்டு குருவி செய்வது எப்படி? இந்த லிங்கில் இருக்கு பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/14921

ரேவதி, பத்மா... ரொம்ப அழகு வழக்கம் போல அசத்திட்டீங்க. :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta