பரங்கிக்காய் புலாவ்

தேதி: July 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.3 (4 votes)

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ,வைட்டமின் இ ,அல்பா மற்றும் பீட்டா - கரோடீன்ஸ், தாது சாதுக்களான மக்னீஷியம், பொட்டசியம், இரும்பு, ஜின்க் நிறைந்து உள்ளது இதில் 90% நீர் தான் நிரம்பி உள்ளது. விஷமுறிவு, தோல் வியாதிகள், புற்றுநோய், இருதய நோய், ரத்த கொதிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த தீர்வை தர கூடியது என்று சமீபத்தில் இங்கு கூடும் உழவர் சந்தையில் அறிந்தேன்.

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பெரிதாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
அவை பொரிந்து வரும்போது நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது உப்பு மற்றும் ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்து வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும்.
சுவையான, சத்தான பரங்கிக்காய் புலாவ் ரெடி.

இந்த பரங்கிக்காய் புலாவ் உடன் தயிர் பச்சடி, டல்மா, கிரேவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அனைவரும் சாப்பிட கூடியது மிகவும் சத்தானது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பரங்கிக்காய் புலாவ் பாக்கும்போதே பசியைத்தூண்டுகிரது.
செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்ரேன்.
நல்ல குறிப்புக்கு பாராட்டுக்கள்.

கவிதா,
உங்கள் குறிப்பு நல்லாயிருக்கு. இதுவரை பரங்கிக்காய் புலாவ் பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை. அதனால் எப்படி இருக்கும் என்று ஆவலாக உள்ளது. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். ஒரு சந்தேகம், அரிசியுடன் சேர்த்து வேக வைக்கும் போது காய் குழைந்து விடாதா? தவறாக நினைக்க வேண்டாம்.....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கோமு மேடம்,
செய்து பார்த்து விட்டு சொல்லுங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி ,
காயை வாங்கும் போது ரொம்ப பழுத்த காயா வாங்காதீங்க
பெரிய தூண்டுகளா போடுங்க
செய்து பார்த்து விட்டு சொல்லுங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
நீங்க என்ன தப்பா சொல்லிடீங்க? தவறா நினைக்க மாட்டேன்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா உங்கள் பரங்கிக்காய் புலாவ் குறிப்பு அருமை எனக்கு பரங்கிக்காயில் பொரியல் மட்டும் தான் செய்ய தெரியும்.நீங்கள் பரங்கிக்காய் புலாவ், பரங்கிக்காய் சட்னி, என்று அருமையான குறிப்புகள் கொடுத்து அசத்துறீங்க வாழ்த்துக்கள்.விரைவில் சமைத்து பார்த்துட்டு பின்னோட்டம் தருகிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா மேடம்,
கண்டிப்பாக செய்து பாருங்க
முதலில் நானும் சாம்பாரிலோ,அவியளிலோ மட்டும் தான் போடுவேன்
அப்புறம் ஒவ்வொன்றாக செய்து பார்த்தபின் தான் அதன் சுவை தெரிந்தது
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இன்னிக்கி பரங்கிக்காய் புலாவ்தான், என்ன புதினா போட மறந்துட்டேன், கொஞ்சம் குழைந்து போச்சு, சைட் டிஷ் சென்னா மசாலா, நல்லாயிருந்தது.

அன்புடன்
பவித்ரா

பவி,
நல்ல combination
செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தந்தற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா