உதவுங்கள் ப்ளீஸ்

ஹாய் தோழீஸ் நான் 9மாதம் கர்ப்பமாக இருக்கேன். எனக்கு 2நாட்களாக வரட்டு இருமல், சலி காய்சல் இருக்கு. நான் என்ன மாத்ரி மருந்து சாப்பிட வேண்டும். 3நாட்களுக்கு முன்பு நான் அஸ்ட்மின் மருந்து குலுகோஸ்சுடன் சேர்த்து ஏற்றப்பட்டது. இதனால் தான் எனக்கு இந்த பிரச்சனையா தெரிய வில்லை. இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும். உதவுங்கள் தோழீகளே. இருமலில் ரொம்ப கஷ்டபடுரேன்.

இந்த மாதிரி நேரத்துல உடம்பை நல்லா பாத்துக்கனும்ன்னு சொல்லுவாங்கல்ல, எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது, கொஞ்சம் பொறுங்கள் மற்ற தோழிகள் வந்து உங்களுக்கு உதவுவார்கள், உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்
பவித்ரா


என் ஓர்படி புள்ளையாண்டிருந்த போது எங்கம்மா செய்து கொடுத்த கஷாயத்தில்
இருமல் போயே போச்.

சித்தரத்தைனு தமிழ் மருந்து கடெல கெடைக்கும்.
அதை வாங்கிண்டு வந்து ஒரு நசுக்கு நசுக்கி நன்னா வென்னீர்ல கொதிக்க வெச்சு தேன் மற்றும் .பனங் கல்கண்டு கலந்து சப்பிடுங்கோ

இது கொஞ்சம் காரமாக இருக்கும்.சாப்ட கஷ்டமா இருந்தா பால் விட்டு சாப்டுங்கோ

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

You cn try to have inji kashayam at empty stomach in morning.. by this u wl feel better....

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

அன்பு தோழியே நீங்கள் நல்ல படியாக குழந்தை பெற்றெடுக்க முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். நம்ம தோழிகள் சொல்லும் டிப்ஸை முயற்சித்து பாருங்கள். இல்லையென்றால் நேரடியாக மருத்துவ மனையை அணுகவும். ஏனென்றால் தற்போது நீங்கள் நிறை மாதமாக உள்ளீர்கள். நீங்கள் உண்ணும் உணவு கடுகளவாயினும் அதில் சிறிது உங்கள் குழந்தைக்கும் சேரும்.
டெலிவரி நேரத்தில் சளி இருந்தால் அது குழந்தைக்கும் வரும்னு சொல்லுவாங்க. கவனமா இருங்கப்பா. நான் பயம் காட்டுறேனு தப்பா எடுக்க வேண்டாம். எனக்கு தெரிந்ததை சொல்றேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு சுக பிரசவம் ஆக, ஆரோக்கியமான குழந்தை பெற எனது வாழ்த்துக்கள்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மீனா நீங்க இந்தியாவுல தான் இருக்கிறீர்களென்றால் நாட்டு மருந்து கடைகளில் வறட்டு இருமலுக்கு சில மூலிகைகள் கிடைக்கும் அதை (நீங்க pregnent என்பதை சொல்லி) வாங்கி கஷாயம் வைத்து குடிக்கலாம் இரவு படுக்கும் முன்பு பாலில் சிறிது மஞ்சள் தூள் ,மிளகு தூள் சேர்த்து வடிகட்டி பனங்கல்கண்டோ தேனோ சேர்த்து குடிக்கலாம் without doctors advice dont take any medicines it will affect your baby

ponni

மீனா முதலில் வுங்களுக்கு சுகப்பிரசவம் ஆக என்னுடைய வாழ்த்துக்கள். 9 மாதம் என்கிறீர்கள் மிளகு பால் பனக்கற்கண்டு ,சுக்குபொடி தேன்,போன்றவற்றை வுபயோக படுத்தலாம்.வேறு மூலிகைகள் என்றால் அது டாக்டரின் ஆலோசனை படியே வுபயோகபடுத்துவது நல்லது

ஹாய் மீனா, முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொண்டை சம்மந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் மிளகு ஒன்றே கைக்கண்ட மருந்து. இரவு படுக்க போகும் முன் வெதுவெதுப்பான பாலில் சிறிது மிளகு தூளும், சிறிது மஞ்சள் தூளும் கலந்து ஒரு வாரம் விடாமல் குடித்து பாருங்கள். உங்கள் இருமல் இருந்த இடம் தெரியாமல் போகும். நானும் கர்ப்பமாக இருந்த போது அத்தியாவசியமான ஊட்டச்சத்து மாத்திரைகளை தவிர வேறு ஆங்கில மருந்துகளை பயன்படுத்தியது இல்லை. கூடுமானவரை வீட்டிலேயே பார்க்கும் வைத்தியங்களுக்கு இயற்கை மருந்துகளையே சாப்பிட்டேன். உங்களுக்கு சுகப்பிரசவம் ஆக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்