நாட்டு கோழி குழம்பு

தேதி: July 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (15 votes)

 

1. கோழி - 1 கிலோ
2. சின்ன வெங்காயம் - 35
3. தக்காளி - 2
4. தேங்காய் துருவல் - 1/4 சின்ன தேங்காய்
5. கறிவேப்பிலை - 6 கொத்து
6. கொத்தமல்லி - சிறிது
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
9. மல்லி தூள் - 2 1/5 தேக்கரண்டி
10. உப்பு
11. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
12. சோம்பு - 1 தேக்கரண்டி
13. பச்சை மிளகாய் - 2
14. எண்ணெய் - தேவையான அளவு


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் 15, கறிவேப்பிலை 4 கொத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தேஙாய் துருவல் சேர்த்து வதக்கி, இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதை மசாலாவாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
மஞ்சள், தூள், கரம் மசாலா, கோழி சேர்த்து வதக்கி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
பின் அடுப்பில் வைத்து அரைத்த மசாலா சேர்த்து, உப்பு போட்டு எண்ணெய் திரண்டு வர கொதிக்க வைத்து எடுக்கவும்.


தண்ணீர் சேர்க்காமல் மசாலாவில் வேக வைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம் ,
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் மேலும் பல குறிப்புகள் தாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா... மிக்க நன்றி. அவசியம் செய்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super and wonderful dish.

Madam,
I'm following your recipes. All your recipe are excellent. Today i prepared in this recipe, very excellent taste, smell and etc. Thank you madam for that