கஞ்சி (குழந்தைகளுக்கு)

தேதி: July 28, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

1. பருப்பு வேக வைத்த நீர் - 1 கப்
2. கோதுமை மாவு - 2 தேக்கரண்டி
3. உப்பு - 1 சிட்டிகை
4. வெல்லம் - தேவைக்கு
5. வேக வைத்து மசித்த உருளை - 2 தேக்கரண்டி
(அ)
5. மசித்த ஆப்பிள் - 2 தேக்கரண்டி
6. நெய் - 1/4 தேக்கரண்டி


 

மாவை சிறிது பருப்பு வேக வைத்த நீர் விட்டு கரைத்து வைக்கவும்.
மீதம் இருக்கும் நீரை சூடாக்கி, அதில் உப்பு சேர்த்து, கரைத்த மாவை ஊற்றிக்கொண்டே கிளறவும்.
பாதி வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து கைவிடாமல் கிளர வேண்டும்.
வெந்ததும் மசித்த உருளை அல்லது ஆப்பிள், நெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.


கஞ்சி நன்றாக கெட்டியாகி இருந்தால் கொடுக்கும் முன் சிறிது காய்ச்சிய பால் சேர்த்து கொடுக்கலாம். ப்ரோட்டீன் உள்ள பருப்பு நீர், ஃபைபர் உள்ள கோதுமை, சூடு குறைக்க நெய், சத்தான உருளை, ஆப்பிள், பால், அயர்ன் சத்து உள்ள வெல்லம் அனைத்தும் ஒன்றாக சேர்வதால் நல்ல ஆரோக்கியமான கஞ்சி.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா,
இந்த குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு. நல்ல குறிப்பு. இந்த கஞ்சியை எத்தனை மாதத்தில் இருந்து குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்?

ஹர்ஷா... 7 மாதத்துக்கு மேல் கொடுக்கலாம். முதலில் குறைவாக கொடுத்து பழகுங்க, கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம் ,
நல்ல குறிப்பு எளிமையா தந்து இருக்கீங்க
என் மகளுக்கு செய்து தரலாம்னு இருக்கேன்
மேலும் பல நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா,
உங்கள் பதிலுக்கு நன்றி.

என் பொண்ணுக்கு சுவையான இன்னொரு ரெசிப்பி கிடைச்சாச்சு. நன்றி வனிதா.

Don't Worry Be Happy.

கவிதா.. மிக்க நன்றி :)

ஜெயலஷ்மி... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா