help please

ஹலோ எலோருக்கும் வணக்கம், நாங்கள் இப்பொழுது குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். எனக்கு நார்மலாக periods 35 வது நாட்களில் வரும், ஆனால் இந்த முறை இன்றோடு 40 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் வரவில்லை. நாங்கள் home pregnancy test எடுத்து பார்த்தோம் அதில் negative என்று வருகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை, எவ்வளவு நாட்களில் தெரியும் என்ன செய்யலாம் என்று யாரவது சொல்லுங்கள் please. இந்த time ல் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள் please

லால்பால், முதலில் உங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நீங்கள் 45வது நாளில் மறுபடியும் டெஸ்ட் எடுத்து பாருங்கள். நான் என்னுடைய 42வது நாளில் டெஸ்ட் எடுத்தேன். பாசிட்டிவாக வந்தது. ரொம்ப டென்ஷனா இருக்காதீங்க. மனச கூலா வச்சுக்கங்க. நல்லதே நடக்கும். ஆல் தி பெஸ்ட் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹலோ கல்பனா, எப்படி இருக்கீங்க. ரொம்ப நன்றி உங்கள் பதிலுக்கு, நானும் இன்னும் 5 நாட்கள் கழித்து டெஸ்ட் எடுத்து பார்க்கிறேன். எனக்கு இன்னும் ஒரு சந்தேகம், இப்பொழுது எல்லாம் periods வரும் மாதிரியான ஒரு feeling இருக்கு, இப்படித்தான் இருக்குமா?

லால்பால், நீங்க எத பத்தியும் அநாவசியமா கவலை பட்டுட்டு இருக்காதீங்க. இந்த சமயத்தில அப்படித்தான் இருக்கும். ஒயிட் மாதிரி போகும். எந்த கஷ்டமான வேலையும் செய்யாதீங்க. பளுவான பொருட்களை தூக்காதீங்க. வன்முறை கலந்த படங்களை பார்க்காதீங்க. மாடிப்படி ஏறாதீங்க. ரொம்ப குனிஞ்சு வேலை செய்யாதீங்க. ரொம்ப தூரம் நடக்காதீங்க. சூடான உணவுப்பொருட்களை சாப்பிடாதீங்க. மனசையும், உடம்பையும் கூலா வச்சுக்கங்க. கண்டிப்பா நல்லதே நடக்கும். கன்பார்ம் ஆன பிறகு எனக்கு சொல்லுங்க. முக்கியமான ஒன்று மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழங்கள், கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது மலச்சிக்கல் வராமல் தடுக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். இந்த சமயங்களில் சிரமப்பட்டு மலம் கழிக்கக் கூடாது. மீண்டும் வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நன்றி கல்பனா, கண்டிப்பாக டெஸ்ட் எடுத்து பார்த்தும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். முதல் முறை என்பதால் ஒன்றும் தெரியவில்லை. உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
thanks

மேலும் சில பதிவுகள்