ஃபெல்ட் பூ ப்ரோச்

தேதி: July 30, 2010

5
Average: 4.7 (10 votes)

அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த ஃபெல்ட் பூ ப்ரோச்சை செய்து காட்டியுள்ளார். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

ஃபெல்ட் துணி - மஞ்சள் நிறம்
பொத்தான் - ஒன்று (கருப்பு நிறம்)
நூல் - மஞ்சள், கருப்பு
ப்ரோச் பின் - ஒன்று
கத்தரிக்கோல்
தையல் ஊசிகள் - 2

 

ஃபெல்ட் பூ ப்ரோச் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஃபெல்ட் துணியில் 6 செ.மீ x 6 செ.மீ அளவிலான சதுரம் ஒன்று வரைந்து வெட்டி எடுக்கவும். துணி தடிமனாக இருப்பின் சதுரத்தை ஒன்றிரண்டு மி.மீ அதிகமாக வைத்து வெட்டவும்.
சதுரத்தின் ஏதாவது ஒரு பக்கத்தின் நடுவில் ஆரம்பித்து நேரே மறுபக்கம் முடியும் வரை சிறிய நூலோட்டம் தைத்துக் கொள்ளவும். (இதற்கு மஞ்சள் வர்ண நூல் பயன்படுத்த வேண்டும்.) நூலோடியதைச் சீராகச் சுருக்கி, வெளியே தெரியாதவாறு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
இதே போல் சதுரத்தின் மறு பக்கமும் நூலோடவும்.
நான்கு இதழ்களும் சமமான அளவு வரத்தக்கவாறு சுருக்கிக் கட்டவும்.
பூவின் நடுவே கருப்பு நூலைக் கொண்டு பொத்தானை இணைக்கவும்.
அதன் பின்புறம் திருப்பி சிறியதாக முடிச்சுப் போட்டு கொள்ளவும்.
ப்ரோச் பின்னைக் கருப்பு நூல் மறையக் கூடியவாறு வைத்து மஞ்சள் நூலினால் பூவோடு சேர்த்துத் தைத்துக் கொள்ளவும். தையல், பூவின் முன் பக்கம் தெரியக் கூடாது.
தைத்து முடிந்ததும் அதிகமான நூல் இருந்தால் அதனை வெட்டி சீராக்கவும்.
அழகாக சுலபமாக செய்யக்கூடிய ஃபெல்ட் பூ ப்ரோச் ரெடி. இந்த ப்ரோச் செய்வதற்கு ஐந்து நிமிடங்களே எடுக்கும். கருப்பு உல்லன் துணிகளோடு அணிந்து கொள்ள பொருத்தமாக இருக்கும். இந்த ப்ரோச் செய்து அணிந்து பாருங்கள், பார்ப்பவரின் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா... ரொம்ப ஈசியா செய்ய கூடிய அழகான பூ ப்ரோச்.... சூப்பர் இமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓடி வந்து முதலாவது ஆளா கமன்ட் போட்டு இருக்கிறீங்க. ;) நன்றி. ;)

ஃ! நன்றி அட்மின். ;)

இப்படிக்கு
இமா சிஸ்டர்

‍- இமா க்றிஸ்

இமா மேடம்

உங்க ப்ரொச் சூப்பர். இதைப்பாத்தா ஊசியே பிடிக்கத்தெரியாத என்ன மாதிரி ஆளுங்க கூட பண்ணிடுவாங்க. அவ்வளோ ஈசி யா இருக்கு (பாக்க அப்படி தெரியுது பண்ணிணா தான தெரியும்)... ஒரு நாள் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கஷ்டமில்லை ராதா. பாடசாலையில் குழந்தைகளைச் செய்ய வைத்தேன். உங்களால் முடியாதா! சும்மா கஷ்டம் என்று சொல்லப் படாது. செய்து சட்டையில் குத்திப் போங்க. பிறகு வந்து கமன்ட் சொல்லுங்க. ;)

‍- இமா க்றிஸ்

கண்டிப்பா சொல்றேன். நீங்க ரொம்ப அழகா பண்ணிருக்கீங்க. நான் இந்த மாதிரி hand work எல்லாம் பண்ணினது இல்லை. அதுதான் பிரச்சனை. ஆனா படத்தை பாக்கும் போது ஆசையா இருக்கு. நம்மளும் பண்ணினா என்ன னு. நான் சிங்கப்பூர் ல இருக்கேன். நீங்க சொன்ன பெல்ட் துணி இங்க கிடைக்குமா? அப்படின்னா என்ன துணி (வெல்வட் துணி யா) ஸாரி எனக்கு தெரியல அதனான் கேக்குறேன். நேரம் கிடைத்தால் பதிவு போடுங்கள்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இமா..

ரொம்ப எளிமையா எல்லாராலையும் செய்யக் கூடிய டிசைன். கலர் கலரா நிறையா செய்து பயன்படுத்தலாம். ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ராதா,
இது வெல்வெட் இல்லை. 'ப்ளாங்கட்' கம்பளி போல மெல்லிதாக இருக்கும். கரை சிலும்பாது. துணிக் கடைகளிலும் க்ராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.

ரம்யா, //கலர் கலரா // வைத்திருக்கிறேன். ஆனாலும் இதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ;)

‍- இமா க்றிஸ்

கலக்கறீங்க இமாம்மா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அழகா இருக்கு. எளிமையானது. கொஞ்ச நேரத்திலேயே செஞ்சு முடிக்கலாம்!நான் செய்துட்டு சந்தேகம் என்றால் கேக்குறேன்:)

இதுமாறி நிறையா செஞ்சு சுவர்ல ஒட்டலாம்’னு இருக்கேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாங்கோ கவி. பழைய தோழிகளைக் கண்டால் ஒரு சந்தோஷம் வருகிறது. ;)

கலக்குங்கோ ஆமினா. ;)

‍- இமா க்றிஸ்

ராதா ஹரி,

ஃபெல்ட் துணி - பொம்மை செய்ய பயண்படுத்துவாங்க. இப்போ தெரியுதா எதுன்னு??? டெடி பொம்மை'ல புஸ் புஸ்'னு இருக்குறது ஃபர் துணி. மூக்கு, கை, கால்'லலாம் முடி மாதிரி இல்லாம ஒரு துணி வைத்து தைப்பாங்க... அது தான் ஃபெல்ட் துணி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) வனிதா சொன்னது தான். நன்றி வனி.

இயற்கை உல்லன் இழைகளால் ஆன ஃபெல்ட் விலை அதிகம். மல்டிகலர் கூட கிடைக்கும். ப்ரோச் செய்தால் அழகாகவும் இருக்கும்.

இங்கு பயன்படுத்தி இருப்பது க்ராஃப்ட் கடைகளில் கலர் கலராக பாக்கட்டுகளில் கிடைப்பது.

‍- இமா க்றிஸ்

இமா மேடம்,
நல்ல எளிய குறிப்பு
ரொம்ப அழகாக இருக்கு
கண்டிப்பாக செய்து பார்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா. ;)
//மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.// இப்படித் தான் எல்லோரும் வாழ்த்துகிறார்கள். என்னால் 'சில' குறிப்புகள் தான் கொடுக்க முடிகிறது. ;)

‍- இமா க்றிஸ்

இமாம்மா சூப்பரா இருக்கு. செய்ய ஈஸியாவும் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ப்ளாக் ட்ரெஸ்ல மஞ்சள் பூ பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

மிகவும் அழகாய் உள்ள்து.

பாராட்டுக்கு நன்றி லக்ஷ்மி & கலை.
நீங்க எல்லோரும் செய்து போட்டுக் கொள்ளுவீங்க என்று தான் குறிப்புக் கொடுத்தேன். பார்க்கலாம், யார் யாரெல்லாம் செய்து பார்க்கிறீர்கள் என்று. ;)

‍- இமா க்றிஸ்

நான் செய்துட்டேனே!!! என்னுடைய சிகப்பு டி-ஷர்ட்டுக்கு சந்தன கலரில் ஒன்று. எல்லாரும் செய்து பாருங்கப்பா!!! ரொம்ப சுலபம் தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபெல்ட் பூ ப்ரோச் ரொம்ப நல்லா செய்திருக்கீங்கம்மா.
வாழ்த்துக்கள்.

வனி,
;) பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். நன்றி நவில்கிறேன்.
ப்ரோச் அழகு. இதற்காக... பிடியுங்கள் ஒரு ரோஜா விருது. @}->--

மிக்க நன்றி கோமு. ;)

‍- இமா க்றிஸ்

அழகாக இருக்கிறது...
இந்த வாரத்திற்குள் செய்து விடுகிறேன்...

ஹாய் இமா உங்களுடய புரோச் மிகவும் எளிதாகவும்,அழகாயும் இருக்குது. உங்களுக்கு எனது வாழ்த்துகள்
அன்புடன்
காயத்திரி

;)) மிக்க நன்றி தேன்.

ஹாய் காயத்ரி, ;) எப்படி இருக்கிறீங்க? ;) காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதே! ;) பாராட்டுக்கு நன்றி.

மிகுந்த அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

aaha.....super...

கருத்துக்கு மிக்க நன்றி சீதா. ;) தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta