புளிசேரி(இடியாப்பத்திற்கு)

தேதி: August 2, 2010

பரிமாறும் அளவு: 3பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்க:
தேங்காய் துருவல்- 3/4கப்
பச்சை மிளகாய்-2 அல்லது 3(காரத்திற்கேற்ப)
பூண்டு-1பெரியபல்
சீரகம்-1/2தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்-1தேக்கரண்டி
கடுகு-1/2தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-1
கறிவேப்பிலை-1இனுக்கு

தயிர்-1/2 முதல் 3/4கப்(புளிப்பிற்கு எற்ப)
உப்பு-தேவையான அளவு


 

அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்
வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து அரைத்த தேங்காய் கலவை,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும்.
லேசான சூட்டுடன் இருக்கும் போதே தயிரை கட்டியில்லாமல் அடித்து சேர்த்து கலக்கவும்.
தயிர் சேர்க்கும் போது முதலில் 1/2கப் கலந்து பின் புளிப்பு போதவில்லையென்றால் மீதியை சேர்க்கவும்


இடியாப்பத்தோடு எப்போதும் சால்னா பாயா குருமான்னு போரடிக்கும் போது சுலபமாக இதை செய்யலாம். இந்த குழம்பு சாதத்தோடும் நன்றாக இருக்கும். கெட்டியாக இல்லாமல் சற்று நீர்க்க இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவிதா மேடம்,
இந்த புளிசேரி ரொம்ப புதுமையா இருக்கு
இந்த புளிசேரி பண்ணும் பொது அம்மா தயிர் சேர்க்காமல் புளியை சேர்த்தே கொதிக்கவைத்து தருவாங்க
கண்டிப்பாக செய்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டில் சேவைக்கு இது தான் நாங்க தொட்டு சாப்பிடுவோம். நன்றாக இருக்கும்.

நன்றி கவிதா! செய்து பாருங்க.

விஜி நாகர்கோவில் திருவனந்தபுரம் ஏரியாக்களில் பொதுவாக இதைத்தானே செய்வோம். எனக்கு குருமாவை விட இதுதான் இஷ்டம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!