கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

யோகராணி எப்படியென்றால்........தாங்களது கூற்றின் படி 1 கிலோ சதையை மட்டுமே வெட்ட வேண்டும். சதையின் உடன் இரத்தமோ, நரம்போ, எலும்போ வரக்கூடாது.அப்படி வெட்டினால் நீ குற்றவாளி. தண்டனை கிடைக்கும் என்றிருப்பார். சரி தான் என்று நினைக்கிறேன்.. சரியா தோழி....

God bless us.

பாரதி சொன்ன பதில் சரியானது.
(இரத்தம் வெளியில் சிந்தாமல் தசையை அறுக்க வேண்டும் என்பதே)

அடுத்த புதிர்;

ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவரும் தந்தை சேர்த்து வைத்த சொத்துக்களைச் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள். மீதம் இருந்த ஒரு பசு மாடு மட்டும்தான். இருவருமே அந்த பசு தனக்குத்தான் வேண்டும் என்று பிடிவாதமாகப் பேசினார்கள்.யாரும் விட்டுத் தரத் தயாராக இல்லை. அதனால் இருவரும் மாட்டை ஓடிக்கொண்டு அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசனிடம் போனார்கள்.
கொழுகொழுவென்று அழகாக இருந்த பசுமாட்டைக் கண்ட அரசன், ஏதாவது தந்திரம் செய்து அந்தப் பசுவை தான் வைத்துக்கொள்ளத்
தீர்மானித்தான்.
அதனால் அவர்களைப் பார்த்து, "நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கிறேன். நாளைக் காலைக்குள், உங்களில் யார் அதற்குச் சரியான விடை தருகிறரோ, அவருக்கே பசுமாடு சொந்தமாகும். இருவருமே சரியான விடை கொடுக்காவிட்டால், நான் மாட்டை எடுத்துக்கொள்வேன்" என்றான்.
இது ஏதடா....குரங்கு, ஆப்பக் கதையாக இருக்கிறதே என்று அவர்கள் நினைத்தாலும், அரசனின் சொல்லை மீற முடியாமல், என்ன கேள்விகள் என்று கேட்டார்கள்.
"மனிதனின் வயிற்றை நிரப்புவதில் சிறந்ததாகக் கருதப்படுவது எது?
மனிதனுக்கு மிகுதியான இன்பம் தருவது எது?
மிக வேகமாகப் பயணம் செய்வது எது"...இதுதான் எனது கேள்விகள் என்றான் அரசன்.
அண்ணன் தம்பி இருவரும் கேள்விகளுக்கான பதிலை ஆலோசனை செய்தபடி வீடு வந்தார்கள்.
அண்ணனோ இவை எளிதான கேள்விகள். தான் சரியான பதில் கூறி பாட்டை ஓட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து மேற்கொண்டு சிந்தனை செய்யாமல் வீட்டுக்கு வந்ததும், சாப்பிட்டு உறங்கிவிட்டான்.
ஆனால் தம்பியோ, இந்தக் கேள்விகளை சாதாரனமாக நினைக்கவில்லை. நல்ல பதிலாக என்ன கூறலாம் என்ற சிந்தனையிலேயே, உறக்கமின்றித் தவித்தான். அப்போது அவனது மூத்த மகள், அங்கே வந்தாள். அவள் அழகு நிறைந்தவள்....அதி புத்திசாலி. சாமர்த்தியம் மிக்கவள். அவள் தனது தந்தையின் நிலை கண்டாள். என்ன விஷயம் என்று கேட்டாள். அவனும் நடந்த விபரங்களைக் கூறினான். சிறிது நேரம் சிந்தனை செய்த அவள், " தந்தையே, கவலைப் படாதீர்கள். நான் அரசனது கேள்விகளுக்குச் சரியான விடை கூறுகிறேன்...நீங்கள் அந்த விடைகளைக் கூறி பசுமாட்டை கொண்டு வந்துவிடுங்கள்" என்றாள்.
அவள் கூறிய விடைகளை மனதில் வாங்கிக்கொண்ட தம்பி....மறுநாள் அரசவைக்குச் சென்றான். அண்ணனும் வந்திருந்தான்.
முதலில் அண்ணன் தனது பதிலைக் கூற எழுந்து,
" அரசே, மிகவும் சிறந்த உணவு தேன்....
மிகவும் மகிழ்ச்சியைக் கொடுப்பது பணம்,.....
மிகவும் வேகமாகச் செல்வது வேட்டை நாய்" என்றான்.

அரசன் அவனது பதில் தவறானது என்று கூற அண்ணன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சபையை விட்டு வெளியேறினான்.
அண்ணன் சென்றபிறகு தம்பி எழுந்தான். அரசனை வணங்கிவிட்டு, தம்பி கூறிய பதில்களை அரசன் மிகச் சரியானவை என்று ஏற்றுக்கொண்டான்..

நண்பர்களே அரசனது கேள்விகளுக்கு தம்பி கூறிய பதில்கள் என்ன????

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நீர் ,நிலம் ,காற்று இது சரியா ,

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

விடை பெறுகிறேன் தோழிகளே...

அடுத்த வருடம் சந்திப்போம்...

எனக்கு இந்த மாத இறுதியில் பரீட்சை இருப்பதால் 1 வாரமாக அறுசுவைக்கு வர முடியவில்லை.என்னவரின் வேண்டுகோளுக்கிணங்கி உங்களிடம் இருந்து விடை பெற்று கொள்கிறேன்.மேலும் புதுவருடத்திற்கு பாண்டி -லிருந்து சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறோம்.அடுத்த வருட துவக்கத்திலேயே உங்களுடன் இணைந்து கொள்கிறேன்..அது வரை இதே போல் விறுவிறுப்பான புதிய இழை தொடங்க வாழ்த்துக்கள்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்................

அன்புடன்,
ரூபி தினேஷ்.....

God bless us.

பதில் தவறு பாரதி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எல்லாம் கடந்து போகும் ,புது வருட வாழ்த்துக்கள் ரூபி ,எல்லாவற்றையும் நல்லதாய் செய்யுங்கள் .அன்புடன் உங்கள் தோழி பாரதி மதன செல்வம்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

முதலுக்கு விடை -பால்
இரண்டாவது - அறிவு
மூன்றாவது - மனித எண்ணங்கள் ,தவறா சரியா

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

உணவு,சொத்து,விமானம்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நன்றி தோழி...
விடை;மகிழ்சி,கனவு,சிந்தனை

God bless us.

யோகா சரண்யாவின் இரு கேள்விக்கு ஒரு பதில் சரியான பதிலா சொல்லுங்க

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்