கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

________
| 4 | 4 | 4 |
________
| 4 | * | 4 |
________
| 4 | 4 | 4 |
________

ஒரு குதிரை லாயத்தில் 32 குதிரைகள் மேற்கூறியுள்ள முறையில் கட்டி வைக்கபட்டிருந்தன. நடுவில் குதிரை காவலனின் வீடு இருந்தது. ஒரு வழிப்போக்கன் 8 குதிரைகளை எடுத்துக்கொண்டு வந்து காவலனிடம் அதை கட்டிக்கொள்ள இடம் கேட்டான். அதற்க்கு காவலர் நீ கட்டிக்கொள்ளலாம், ஆனால் என் முதலாளி தினமும் நான்கு மூலையிலும் நின்று கூட்டிப்பார்ப்பார். அப்பொழுது மொத்தம் 12 வரவேண்டும், அவ்வாறு கட்ட முடிந்தால் கட்டிக்கொள் என்றார். அவனும் அதே போல் கட்டிக்கொண்டான், முதலாளி வந்து என்னும் பொழுதும் சரியாக இருந்தது. மறு நாள் செல்லும்பொழுது கூடுதலாக 4 குதிரைகளையும் திருடிச்சென்றான், அதையும் முதலாளியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது அந்த லாயத்தில் கூடுதலாக இருக்கும்போதும் குறைந்தபோதும் குதிரைகளை எப்படி கட்டிவைத்திருந்தான்.

இதுவும் கடந்து போகும்.

8குதிரைகளை சேர்த்து கட்டும் போது மொத்தம் 40 குதிரைகள். 8+8+8+8+2+2+2+2= 40
_____________
| 2 | 8 | 2 |
|___|___|___|
| 8 | * | 8 |
|___|___|___|
| 2 | 8 | 2 |
|___|___|___|

4குதிரைகளை திருடிய பின் மீதமிருக்கும் குதிரைகள் 28. 8+8+3+1+3+1+3+1= 28

_____________
| 8 | 3 | 1 |
|___|___|___|
| 1 | * | 3 |
|___|___|___|
| 3 | 1 | 8 |
|___|___|___|

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மூளைக்கு வேளை
இரண்டு எண்களின் கூட்டுத்தொகை- 101,
அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம்- 25,அந்த எண்கள் எவை?

63 & 38

63+38=101
63-38=25

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

super kavisiva

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹி ஹி நன்றி மஞ்சு! அது குழந்தைகள் போடும் கணக்காயிற்றே!

a+b= 101
a-b=25

add these equations

2a=126
ஃ a= 63

substitute a=63 in 1st equation

63+b=101
b= 101-63
b=38

6ம் வகுப்பில் படித்த அல்ஜீப்ரா :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சரியான விடை,நான் இன்னும் சின்னப் பெண்ணாவே இருக்கேன்.

கவிசிவா, உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள்.

மூன்று நண்பர்கள் மாம்பழங்கள் திருட சென்றனர். நிறைய பறித்து கூடையில் வைத்தனர், வீடு திரும்புவதற்குள் இருட்டியதால் உறங்க முடிவு செய்தனர். சிறிது நேரம் கழித்து, முதல் நண்பன் எழுந்து கூடையில் இருந்த மாம்பழங்களை மூன்றாக பிரித்தான். ஒரு மாம்பழம் மீதம் இருந்தது, அதை அவன் உண்டுவிட்டான். அவனுடைய பங்கை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்ற மாம்பழங்களை கூடையில் வைத்து விட்டு உறங்கிவிட்டான். இரண்டாம் நண்பன் எழுந்து கூடையில் இருந்த மாம்பழங்களை மூன்றாக பிரித்தான். ஒரு மாம்பழம் மீதம் இருந்தது, அதை அவன் உண்டுவிட்டான். அவனுடைய பங்கை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்ற மாம்பழங்களை கூடையில் வைத்து விட்டு உறங்கிவிட்டான். பின்னர் மூன்றாம் நண்பன் எழுந்து கூடையில் இருந்த மாம்பழங்களை மூன்றாக பிரித்தான். ஒரு மாம்பழம் மீதம் இருந்தது, அதை அவன் உண்டுவிட்டான். அவனுடைய பங்கை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்ற மாம்பழங்களை கூடையில் வைத்து விட்டு உறங்கிவிட்டான். காலையில் மூவரும் எழுந்து கூடையில் இருந்த மாம்பழங்களை பிரித்தனர், மறுபடியும் ஒரு மாம்பழம் மீதம் இருந்தது, எவ்வளவு மாம்பழங்கள் பறித்தனர்.

இதுவும் கடந்து போகும்.

அவர்கள் 112 மாம்பழங்கள் பறித்தனர்.சரியா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இல்லை யோகராணி, விடை சரியாக வரவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள், கண்டுபிடித்து விடலாம்.

இன்னுமொரு குறிப்பு, முழு மாம்பழங்கலாக தான் பிரிக்க வேண்டும்.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்