பாசிப்பருப்பு திரட்டுப்பால்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லத்தூள் - 2 கப்
பால் - கால் லிட்டர்
ஏலக்காய் - 5
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
துருவிய தேங்காய் - 2 கப்
நெய் - கால் கப்


 

பாலை குங்குமப்பூவுடன் அடுப்பில் வைத்துக் காய்ச்சி கெட்டியாக குறுக்கிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை பொன் வறுவலாய் வறுத்து, தேங்காய் துருவலுடன் சிறிது நீர் தெளித்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதை குறுக்கிய பாலுடன் சேர்த்து ஒரு கெட்டியான வாணலியில் கொட்டி பாதி நெய் விட்டு குறைந்த தீயில் வேகும்வரை கிளறவும்.
பிறகு வெல்லத்தூளை ஏலக்காய்ப்பொடியுடன் சேர்க்கவும்.
மறுபடியும் மீதி நெய்யை விட்டு, திரட்டுப்பால் நன்கு வெந்து சுருண்டு வரும்வரைக் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இப்படி ஒரு வித்தியசமான டிஷை நான் இது வரை கேள்விப்பட்டதில்லை இதனை செய்து பார்து அதன் சுவையை ஊணர ஆர்வமாக இருக்கிறேன். இதனை கன்டென்செட் மில்க் இல் செய்யலமா?

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதால் உடன் பதிலளிக்க முடியவில்லை.
கண்டென்ஸ்ட் மில்க்-ஐ உபயோகித்து இந்த இனிப்பை செய்யலாம். முதலில் அரைத்த பாசிப்பருப்பு+தேங்காய்க் கலவையை சிறிது நேரம் நெய்யில் குறைந்த தீயில் வதக்கி அதன் பிறகு கண்டென்ஸ்ட் மில்க்-ஐ சேர்க்கலாம். மிகவும் சுவையான இனிப்பு இது. செய்து பாருங்கள்.