3 1/2 வருச பையனுக்கு உடல் எடை 13 கிலோவே உள்ளது

அன்பு தோழிகளே,

என் தோழியின் பையனுக்கு 3 1/2 வருசம் ஆகுது.அவங்களுக்கு இரண்டாவது பையன் அவன்.அவன் பிறந்தப்ப அவனுக்கு 2,3 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் இருந்ததாம்.கொஞ்சம் எடை போடுவான் அதற்க்குள் சளி பிடித்து மீன்டும் இளைத்து விடுவான்.தற்போது அவனுடைய எடை 13 கிலோவே உள்ளது.அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது.அவன் பார்க்க மிகவும் ஒல்லியாக உள்ளான்.என் தோழியின் வருத்தமும் அதுவே.என்ன செய்யலாம் என்று ஒரு யோசனை சொல்லுங்களே please..........நான் உங்களை நம்மித்தான் அவளிடம் தைரியம் சொல்லியுள்ளேன்.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

என் பையனுக்கு மூன்றே கால் வயது ஆகிறது. அவனுடைய எடை 12 கிலோ தான்.
ரெம்ப ஆக்ட்டிவ்வா இருப்பான். ஆனால் ஒல்லியா தான் இருக்கான். அவனுக்கும் இதே பிரச்சனை தான் பா. பிறந்த்ப்போ 3 கிலோ இருந்தான். நான் அவனுக்கு 1 1/2 வயது வரை தாய்ப்பால் குடுத்தேன். ஆனாலும் எடை ஏறவில்லை. டாக்டர் சொல்ரான்க ஆக்ட்டிவ்வா தானே இருக்கான். அதனாலே ப்ரச்சனை இல்லைனு.
ஒரு சில பேர் உடல்வாகு நு சொல்றாங்க.
சாப்பாட்டுலே இன்னும் காரம் சேர்க்க மாட்டேன்றான். டெய்லி பருப்பு சாதம் கேட்கிறான். இட்லி தொடவே மாட்டான். தோசை, சப்பாத்தி ஓ.கே. என்ன பண்றது, ஒரு ஸ்டேஜ் வர்ர வரை வெய்ட் பண்ண வேண்டியது தான்.
தோழிகள் பதிலுக்கு னானும் காத்திருக்கிறேன்.

priyamudan sangops

மாணிக்கவள்ளி

என் பையனுக்கு 4 1/2 வயது தான் ஆகிறது.. அவனுடைய எடை 15 கிலோ தான். பார்க்க ஒல்லியாகத்தான் இருப்பான். ஆனால் ரொம்ப சுறுசுறுப்பா ஆக்டிவ்வா இருப்பான். நானும் 1 வருடத்திற்கும் மேல் தாய்ப்பால் கொடுத்துள்ளேன். ஆரம்பம் முதற்கொண்டே அவன் சற்று இளைத்துதான் இருப்பான். அதனால் உடல் எடை குறைவாக உள்ளதை டாக்டரிடம் சென்று கேட்டு சரிசெய்து கொள்ளவும். நான் என் மருத்துவரிடம் கேட்ட போது இந்த எடை நார்மல் என்றுகூறிவிட்டார். ஆக்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் கவலை வேண்டாம் என்றார்.

உங்கள் தோழியின் பையனுக்கு அடிக்கடி சளி பிடிக்க காரணம் என்ன என்பதை ஆராயவும். குளிர்ந்த தண்ணீா், ஜீஸ்,ஐஸ்க்ரீம் அல்லது ப்ரிட்ஜில் இருந்து உடனே கொடுக்கும் தயிர் போன்ற விஷயங்கள் காரணமாக இருக்கலாம். முதலில் சளியை சரிசெய்யச் சொல்லுங்கள். சளிப்பிடித்தால் பெரியவா்களாலேயே சாப்பிட முடியாது. குழந்தைகளுக்கு கேட்கவே வேண்டாம். அவா்களுக்கு சுத்தமாக சாப்பிடப் பிடிக்காது. முதலில் சளியைக்குறைக்க மருத்துவரை அணுகச் சொல்லவும். சளி நீண்ட நாட்கள் இருக்கக்கூடாது.
ஒருவேளை பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தால் (play school) சளி வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்ஃபெக்சன் ஆகிவிடும்

அதனால் ஒல்லியாக இருப்பதைக்கண்டு வருத்தம் அடைய வேண்டாம். நாட்கள் செல்லச் செல்ல அவா்களுக்கு உணவின் தேவை புரிந்துவிடும். இந்த வயது விளையாட்டு புத்தி அதிகம் இருக்கும் சாப்பாட்டில் கவனம் போகாது. அதுவே காரணம். முடிந்த மட்டும் சளிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

சத்துமாவுக் கஞ்சி, பழங்கள், தானியங்கள் அதிகம் உபயோகப்படுத்த சொல்லுங்கள். அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் அதைப்பற்றித் தெரிந்தவா்கள் என்ன சாப்பிடலாம் என்பதைக் கூறவும்.

கவலை வேண்டாம் என்று தைரியம் கூறுங்கள்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Hai,nan meena..en paiyanuku 3 1/4 vayathu than.ithe pbm than..schl ponathula irundhu cold adikadi..naanum sapda veika try pani oonchuten.ipo paedo kita kaamichen.iron deficieny nu iron tonic,.antibiotic tablet kuduthrukar..ipo paravala.kandipa dr kita kaatunga

மேலும் சில பதிவுகள்