பிரஷர் குக்கர் கோதுமை ஹல்வா

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
நெய் - கால் கப்
சர்க்கரை - கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
பச்சைக்கற்பூரம் - ஒரு சிட்டிகை
கேஸரி கலர் - ஒரு சிட்டிகை
முந்திரிப் பருப்பு நறுக்கினது - அரைக் கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை(சூடான பாலில் கரைத்துக் கொள்ளவும்)


 

கோதுமை ரவையை நன்கு கழுவி நிறைய தண்ணீரில் சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் வடிய வைத்து மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். பிழிந்து பாலை எடுக்கவும்.
சக்கையை மறுபடி போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துப் பாலை எடுக்கவும். இது போல் நான்கு முறை செய்தால் பால் முழுவதும் வந்து விடும்.
பிறகு பாலும் தண்ணீரும் கலந்து இருப்பதை ஒரு உயரமான பாத்திரத்தில் 6 அல்லது 7 மணி நேரம் தெளிவதற்காக வைக்கவும். நடுவில் அதைத் தொடாமல் இருப்பது நல்லது.
பின் மேலே இருக்கும் நுரையையும், தெளிந்த தண்ணீரையும் மெல்ல இறுத்துக் கொட்டி விடவும். கீழே தங்கின கெட்டிப் பாலை அளந்து கொள்ளவும்.
1 கப் பாலுக்கு ஒன்றரைக் கப் சர்க்கரை தேவை. இருக்கும் பாலின் அளவிற்கு ஏற்றார்போல் சர்க்கரையை சேர்த்து, தேவையான அளவு வண்ணப்பொடியையும் சேர்க்கவும்.
இப்பொழுது அவற்றை நன்றாகக் கலக்க வேண்டும். இது மிக முக்கியம்.
பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிரஷர் குக்கரில் வைக்கவும். குக்கரை மூடி, வெயிட்டை வைக்கவும்.
முதல் விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 45 நிமிடம் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து பிரஷர் இறங்கின பின் திறக்கவும்.
திறந்த பின் கனமான மரக் கரண்டியோ, முட்டை அடிக்கும் கருவியோ அல்லது எலக்ட்ரிக் ஹான்ட் ப்ளெண்டரோ உபயோகித்து கலப்பதும் மிகவும் முக்கியம்.
அடுப்பில் வாணலியில் அல்லது நான் ஸ்டிக் பானில் நெய் விட்டுக் காய்ந்ததும் கலவையைப் போட்டு நன்கு கிளறவும்.
முந்திரி, வாசனை சாமான்கள் எல்லாவற்றையும் சேர்த்து விடவும். சில நிமிடங்களில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்து விடும்.
பிறகு இறக்கி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறின உடன் துண்டு போடவும்.


மேலும் சில குறிப்புகள்