கலர்புல் சாதம்

தேதி: August 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
வெண்டக்காய், கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், காரட், அவரைக்காய், கோவக்காய், முள்ளங்கி - 250 கிராம்
பசலை கீரை - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
லவங்கம் - 2
சோம்பு - சிறிதளவு
ஏலக்காய் - ஒன்று
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது
நெய் - 3 தேக்கரண்டி
அலங்கரிக்க:
கொத்தமல்லி
பூந்தி


 

பருப்பை கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.
5 நிமிடம் வதங்கியதும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறி குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர், கீரை, உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சாதத்தில் கொட்டவும். கொத்தமல்லி, பூந்தி தூவி ரைத்தாவுடன் பரிமாறவும். இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. லாவண்யா மூர்த்தி அவர்கள்

பூந்தி ரைத்தாவுடன் பரிமாறினால் இன்னும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சமையல் கலர்ஃபுல்லாக இருந்தால் சத்தானதாக இருக்கும் என்பார்கள். படங்கள் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. நிச்சயம் சுவை சுப்பராக இருக்கும். பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

காய்களின் ஒவ்வொரு கலருக்கும் ஒரு ஊட்டச்சத்து

இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக்குறிப்பிலும் கலர்

ஃபுல்லா நிரைய காய்கள்,அரிசி,பருப்பு என்று நிரைய

சத்துக்கள் நிரம்பி உள்ளது. குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

படங்களை அழகாக வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என் மகளுக்கு எல்லா காயும் பருப்பையும் ஒரே முறையில் குடுக்க ஆசை. அது தான் இந்த சாதம். பல வைட்டமின் புரதம் மற்றும் கார்பஸ் உள்ள உணவு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
சுவையாக இருந்தது..
நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா