இயற்கை வீட்டுத் தோட்டம்

இயற்கை முறையில் எவ்வாறு தோட்டம் அமைத்து பராமரிக்கலாமென அறுசுவை உறுப்பினர்களின் சந்தேகங்களை விவசாயி தவமணி அண்ணா விளக்கவுள்ளார். உறுப்பினர்கள் தாங்களின் கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பயன்பெறுங்கள்.

கூடுதலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துக்கொள்ள உள்ளார்;)

தவ்ஸ் அண்ணா, நாங்க வீட்ல ஒரு தொட்டில பெங்களூர் ரோஜா செடி வளர்த்தோம். ஆனா அதில் முதல் இரண்டு, மூன்று பூக்கள் மட்டும் பெரிதாக பூத்தன. பிறகு பூத்த பூக்கள் எல்லாம் பட்டன் ரோஜா போல சிறியதாக பூத்தன. எல்லா பூக்களுமே பெரியதாக பூக்க என்ன உரம் போட வேண்டும்.? விளக்குங்கள் அண்ணா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூச்சிக் கொல்லி மருந்துகள், இரசாயன உரங்களின் கலப்பு இல்லாமல் நீங்களே உங்கள் வீட்டு தோட்டங்களில் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் வாருங்கள் இயற்கை வீட்டுத் தோட்டம் அமைப்போம்.

அன்புடன்
THAVAM

உங்க வீட்ல டீ போடுவீங்க தானே, டீ போட்ட பின் தூள் இருக்கிறதில்லயா அத போடுறாங்க காங்கோல ஆர்கானிக் பெர்டிலைசர் கடை இருக்கும் அதில் ரோஜாவிற்காக தனி உரம் இருக்கும் வாங்கிப்போடுங்கள்

அன்புடன்
THAVAM

அண்ணா, நான் உடனே இங்கே ஒரு உரக்கடையை தேடி பார்த்து நீங்க சொன்ன மாதிரி ரோஜா செடிக்கு உரம் வாங்கி போடுறேன். நன்றி அண்ணா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் தவமணி.

சென்னையில் எங்கு கீரை விதைகள்,மற்றும் பூ செடிகள் எங்கு விற்கிறாங்க என்று தெரிந்தால் அருசுவையில் இருக்கும் மற்றும் யாருக்கு தெரிந்தாலும் சொல்லுங்க.

அடுத்து தவமணி எனக்கு இயற்க்கை முறையில் கீரை,காய்கறி,பழங்கள் போன்றவை வளர்க்க வேண்டும் உங்கள் ஆலோசனை கேட்டு பயிரிடலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி தவமணி & அட்மின்.

சகோதரி ஆர்கானிக் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடங்களை வெளியிட அட்மின் அவர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியை கேட்டு மெயில் அனுப்பியுள்ளேன். அவரிடமிருந்து முறையான அறிவிப்பு வெளியான பின்னரே, உங்களுக்கு கடைகளின் தனிப்பட்ட முகவரிகளை தரலாமா என்பது குறித்து முடிவு எடுக்க முடியும்./ உங்கள் வீட்டில் தோட்டம் போடக் கூடிய அளவுக்கு போதிய இடம் உள்ளதா?, மரங்கள் உள்ளதா?, என்பதை குறித்து எழுதுங்கள்.

அன்புடன்
THAVAM

நல்லாருக்கீங்களா? அண்ணா சிவப்பு கீரை விதையும், புடலங்காய் விதையும் நேத்து தான் வாங்கிட்டு வந்தேன். இன்னிக்கு நட போரேன். அப்பறம் எல்லா செடிக்குமே வடிகட்டின டீதூள் போடலாமா??? பழத்தோல் காய்கறி வேஸ்ட்டையும் செடிகளுக்கு போடலாமா???

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

சகோதரி மகிழ்ச்சி டீத்தூளை ரோஜா செடிகளுக்குத்தான் போடுவார்கள் பழத்தோல் முதலான கழிவுகளை மக்கச் செய்து செடிகளுக்கு போடுங்கள். நன்றி

அன்புடன்
THAVAM

இந்த இழையை ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி. ஆமினா மற்றும் சகோதரர் தவமணிக்கு.எங்கள் வீட்டில் பச்சைமிளகாய், புதினா, கத்தரிக்காய், ரோஜா செடிகள், கருவேப்பிலை, ஜாதி முல்லை கொடி இருக்கிறது. ஆனால் கருவேப்பிலை செடியை சிறிய தொட்டியில் வைத்துள்ளார்கள். 2 அடிக்கு வளர்ந்திருக்கிறது. மாற்ற வேறு இடம் இல்லை. மாடியில் குடியிருக்கிறோம். வேர் போக வழியில்லை என்றால் செடி வாடி விடாதா? என்ன செய்தால் செடியை பாதுகாக்கலாம். அப்படியே போன்சாய் மரங்கள் குறித்தும் அறிய ஆவலாக உள்ளேன்.

தவமணி அண்ணா
நல்ல இழை, நல்ல படியா போகும் உங்க மனம் போலவே, ஆனா இதுக்கும் எனக்கும் ஜாஸ்தி சம்பந்தம் இல்லை, ஆனாலும் அண்ணாவுக்காக அடிக்கடி வருவேன்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்