ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு போட்டோ ப்ரேம் செய்வது எப்படி?

தேதி: August 6, 2010

5
Average: 4.4 (19 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சிகள் - 26
ஃபேப்பரிக் பெயிண்ட் - கருப்பு, நீலம், வெள்ளைநிறம்
கோல்டுநிற பூக்கள் - 10
கோல்டுநிற மணிகள் - 6
பெவிக்கால்
ரிப்பன் லேஸ்
ப்ரஷ்

 

போட்டோ ப்ரேம் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
12 ஐஸ்க்ரீம் குச்சிகளில் மட்டும் இருப்பக்கம் கருப்புநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிட்டு எடுத்து கொள்ளவும்.
முதலில் பெயிண்ட் செய்த ஆறு குச்சிகளை எடுத்து படத்தில் உள்ளது போல் வைக்கவும்.
இப்போது அந்த இடைவெளிகளில் மற்ற ஆறு குச்சிகளையும் பெவிக்கால் தடவி ஒட்டவும். அதாவது ஒரு ஐஸ்க்ரீம் குச்சி முனையில் இரண்டு ஐஸ்க்ரீம் குச்சிகளின் முனையை வைத்து ஒட்ட வேண்டும். சுற்றிலும் குச்சிகளை ஒட்டிய பிறகு பார்ப்பதற்கு அறுங்கோண வடிவில் இருக்கும்.
ஒரு ஐஸ்க்ரீம் குச்சியின் ஒரு பக்கத்தில் பெவிக்கால் தடவி மற்றொரு ஐஸ்க்ரீம் குச்சியின் ஒரத்தை வைத்து ஒட்டவும். இதுப்போல் வரிசையாக ஒன்பது ஐஸ்க்ரீம் குச்சிகளையும் ஒட்டி நன்கு காயவிட்டு எடுத்து கொள்ளவும். அதன் பிறகு ஃபேப்பரிக் பெயிண்டின் நீலநிறமும், வெள்ளைநிறமும் கலந்து லைட் நீலநிறமாக ஆகிக் கொள்ளவும். இந்த நீலநிறத்தை ஒட்டி வைத்திருக்கும் ஒன்பது ஐஸ்க்ரீம் குச்சியிலும் பெயிண்ட் செய்து சிறிது நேரம் காயவிடவும்.
பெயிண்ட் காய்ந்ததும் ஐஸ்க்ரீம் குச்சியின் ஒரத்தில் வளைவு வளைவாக உள்ள பகுதியில் சிறிது தள்ளி (உள்பக்கமாக) இரு ஐஸ்க்ரீம் குச்சிகளை வலது, இடது புறமாக வைத்து பெவிக்கால் தடவி ஒட்டவும். இப்போது அந்த குச்சிகளின் மேலும், கீழும் இரு ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து ஒட்டி விட்டு லைட்நீலநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
இப்போது அறுங்கோண வடிவத்தில் ஒட்டியிருக்கும் ஐஸ்க்ரீம் குச்சிகளில் நடுவில் ஒன்பது குச்சிகள் ஒட்டிய ஃப்ரேமை வைத்து ஒட்டவும்.
பிறகு இந்த ப்ரேமை கோல்டுநிற பூக்களும், மணிகளும் கொண்டு அலங்கரிக்கவும். ஒரு வெள்ளைநிற பேப்பரை ப்ரேமில் உள்பகுதியின் அளவுக்கு நறுக்கி எடுத்து கொண்டு அதனை ஃப்ரேமில் நடுவில் வைத்து ஒட்டிக் கொள்ளவும். விரும்பினால் லேஸை மிகச்சிறிய போவ் போல் செய்து அலங்கரிக்கலாம். ஃப்ரேமில் பின்பக்கத்தில் நடுவில் சிறிய வட்டமாக இருக்கும். அந்த இடத்தில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சியின் முனையில் பெவிக்கால் தடவி ஒட்டி ஸ்டாண்ட் போல் செய்து கொள்ளவும்.
ஃப்ரேமில் வலது, இடது பக்கம் உள்ள இடைவெளியின் வழியாக போட்டோவை பொருத்திக் கொள்ளவும். ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு மிகவும் எளிதாக செய்யக்கூடிய போட்டோ ஃப்ரேம் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த போட்டோ ஃப்ரேம் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் செண்பகா எப்படி இருக்கீங்க. பொண்ணு நலமா? கலக்குறீங்க. நவீனா குட்டி அழகா இருக்காள். மேலும் இதே போல் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

போட்டோ ப்ரேம் அருமையா இருக்கு. சின்னச்சின்ன
பொருட்களைக்கொண்டே அழகழகான கை வேலைகள்
செய்து காட்டி அசத்துகிரீர்கள். வாழ்த்துக்கள்.


இப்பொதான் ஒங்களுக்கு மெயில் பண்ணிட்டு வரேன்.
அடடா. கொழந்தையின் போட்டோவும் போட்டோ ப்ரேமும் கொள்ளை அழகு.
கண்ணு பட்டுவிடும் அந்த சின்ன கவிதைக்கு.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

செண்பகா

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு... அதே சமயம் ரொம்ப சுலபமாகவும் இருக்கு.... தேங்ஸ்பா.... செய்து பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்... எனக்கு அனைத்தும் கிடைத்தால் செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்கிறேன்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செண்பகா..

உங்க முன்னாடி தேவையில்லாத பேப்பர்ஸ் கூட கசக்கி போட முடியாது போல. அதையும் எடுத்து எதாவது உபயோகப் பொருளா மாத்திடுவீங்க..;-) ரொம்ப அழகு.. நவீனா குட்டியையும் சேர்த்து தான் சொன்னேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செண்பகா

பிரேம் ரொம்ப அழகா இருக்கு. சுலபமா செய்திடலாம்.

எல்லா பொருள்களும் வீட்டிலேயே இருக்கு. இரவே செய்து பாத்துற வேண்டியது தான்.

எப்படி தான் இப்படிலாம் யோசிக்கிறீங்களோ?

என் வீடு முகவரி தரேன். கொஞ்சம் கொரியர்'ல போட்டு அனுப்பிவிடுங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் செம்பகா!
இஸ்கிரீம் குச்சிகளை கொண்டு மிகவும் அழகான பிரேம். எப்படீ இதெல்லாம்?! ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.

நவீனா குட்டி அழகா இருகின்றா. உங்களுடன் டெலிபோனில் கதைத்தது மிகவும் சந்தோசம்.

அன்புடன் யோகராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Hello frd im vry new 2 tis site... i lik ur creative wrks.. ur babe looks cho smart..

ஃபோட்டோ ஃப்ரேம் ரொம்ப அழகா இருக்கு. ஆனா நவீனா குட்டிதான் ரொம்ப ரொம்ப அழகு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃபோட்டோ ஃப்ரேம் ரொம்ப எளிதாகவும் அழகாகவும் இருக்கு. நவீனா குட்டியும் தான்.
இதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுட்டு அதில இருக்கிற குச்சிய யூஸ் பண்ணனுமா, இல்ல ஐஸ்கிரீம் குச்சியவே கடையில வாங்கணுமா? :-)

எங்க ஆத்துக்காரர்கிட்ட இன்னைக்கு ஒரு 25 ஐஸ்கிரீம் வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரு மாதிரியா மொறைச்சு பார்த்துட்டு பதில் சொல்லாமலே ஆஃபிஸுக்கு போய்ட்டாரு. :-(

அன்புடன்,
இஷானி

ஹாய் எப்படி இருக்கிங்க பாப்பா ரொம்ம அழகா இருக்கு. உங்க பிரேமும் தான்.நன்றீ................

madam unga padaippugal ovvonrum arumai ana enakku oru sandegam anda 6 kuchigal kizhe vizhundurada

kuttireyama

ஹாய் மேடம் உங்கள் கைதிறன் அருமை நீங்கள் தனியே வகுப்புக்கு சென்றீர்கலா
குட்டிறேயமா

shenbaga மேடம்,
புதுமையான குறிப்பு அருமை
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ப்ரேம் அழகு... செய்த ப்ரேமின் அழகை கூட்டியது குட்டியின் புகைப்படம். வாழ்த்துக்கள் செண்பகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு செண்பகா,

அழகான ஃப்ரேம் செய்திருக்கீங்க. அதென்ன, நவீனாவோட கண்கள் அப்படியே உங்களை மாதிரியே, சமத்து, சாந்தம் எல்லாம் ... வெரி கியூட்!!!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சுலபமாய், அழகழகாய் கைவினை செய்து அசத்துவதில் செண்பகாவுக்கு நிகர் செண்பகாதான். ;) பாராட்டுக்கள்.
நவீனாக்குட்டி படமும் அழகு. நன்றாக வளர்ந்து இருக்கிறாங்க.

‍- இமா க்றிஸ்

போட்டோ ஃப்ரேம் நல்ல அழகு.
குழந்தை நவீனா மிக மிக அழகு.
நவீனாவிற்கு என் முத்தங்களும்
ஆசிகளும்
பாப்பிக்கு என் வாழ்த்துக்கள்
அன்புடன் செபா

செண்பகா பாபு அக்கா, நீங்கள் பேப்பர் மட்டும் தான் ரீசைக்கிள் பண்ணுவீர்கள் என்று நினைதேன் ஆனால் நீங்கள் ஐஸ் குச்சிஐ கூட ரீசைக்கிள் பண்ணுகீறீர்கள். பாராட்டுக்கள்

shagila

செண்பகா, நான் உங்களுடன் பேசுவது இதுவே முதல் முறை. நீங்கள் செய்திருக்கும் போட்டோ பிரேமை விட பிரேமுக்குள் இருக்கும் குட்டி பாப்பா அழகாக இருக்கிறாள். நீங்கள் செய்த ஐஸ்குச்சி பிரேமும் குளிர்ச்சியாக நன்றாக இருக்கும். செய்முறையும் எளிதாக உள்ளது. வாழ்த்துக்கள். :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கதீஜா, கோமு, மோகனா, ராதா ஹரி, ரம்யா, ஆமினா, யோகராணி, வத்சலா, கவிசிவா, இஷானி, ரைஹானா, குட்டிரியாமா, கவிதா, வனிதா, சீதாலெஷ்மி, இமா, செபா, ஷாலி, கல்பனா அனைவருக்கும் ரொம்ப நன்றி. தாமதமா வந்து நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும். இங்கு நெட் சரியா கிடைக்கல, அதோட வைரஸ் பிரச்சனையும் இருந்ததால் உடனே வந்து பதில் சொல்ல முடியவில்லை சாரி.

senbagababu

ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு அழகான ஒரு போட்டோ ப்ரேம் செய்து காட்டினீர்கள். எனக்கு ஒரு சந்தேகம்; வேஸ்ட் நியூஸ் பேப்பர்களை கொண்டு என்ன செய்யலாம்???!!!

வரலக்ஷ்மி

True Love Never Fails.

hi shenbaga akka,ur daughter is so cute, unga creative thinking is awsome. i m interested in arts & crafts and i
wish to learn more crafts like you. so pls can u guide me how to start. waiting 4 ur reply.

with regards
swetha

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta