help me

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,எல்லோரும் நலமா? என்னுடைய வலிக்கு மருந்து கூறுங்கள்.இரவில் காது வலி ஏற்பட்டால், என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம். உடன் பதில் தாருங்கள்.

கோதுமை தவிட்டை கைபொறுக்கும் சூட்டில் வறுத்தெடுத்துக் கொண்டு அதை ஒரு வெள்ளைத் துணியால் சுற்றி காதிற்கு ஒத்தடம் தரலாம். அல்லது பூண்டை நசுக்கி கொஞ்சமாக பஞ்சை எடுத்துக்கொண்டு அதனுள் வைத்து சுற்றி காதிற்குள் வைக்கலாம். இதெல்லாம் என்னுடைய பாட்டி பண்ண வைத்தியங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னப்பா யாரும் பதில் போடல, எல்லோரும் அரட்டைல இருக்கீங்களா? மாமி நீங்களுமா? பதில் சொல்லுங்கோ.

நன்றி, நீங்களாவது வந்திங்க. ஆனா நான் இருப்பது ஷார்ஜாவில்,2வது சொன்னதை முயற்ச்சிக்கிறன்.

காது, கண் சம்பந்தப்பட்ட வலிகளுக்கு டாக்டரை பார்ப்பதே மேல். வீட்டு வைத்தியம் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
வாணி

மேலும் சில பதிவுகள்