பட்டாணி மொச்சை தொக்கு | arusuvai


பட்டாணி மொச்சை தொக்கு

food image
வழங்கியவர் : Ms. Moorthy, USA
தேதி : திங்கள், 09/08/2010 - 11:59
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • பச்சை பட்டாணி - 1 கப்
 • பச்சை மொச்சை - 1 கப்
 • வெங்காயம் - 1
 • தக்காளி - 1
 • இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
 • மிளகாய் தூள் - 1/2 tsp
 • தனியா தூள் - 1/2 tsp
 • மஞ்சள் தூள் - 1/4 tsp
 • கரம் மசாலா - 1/4 tsp
 • கசூரி மேத்தி - 1/4 tsp
 • எண்ணெய் - 3 tsp
 • கொத்தமல்லி - சிறிதளவு

 

 • வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
 • எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
 • பட்டாணி மற்றும் மொச்சை சேர்த்து 2 நிமிடம் வதக்கி எல்லா தூளையும் சேர்க்கவும்.
 • 5 நிமிடம் வதக்கி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து 7 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
 • இடையிடையே கிளறி விடவும். தண்ணீர் வற்றியதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..



லாவண்யா மேடம்,

லாவண்யா மேடம்,
நல்ல combination
கண்டிப்பாக செய்து பார்கிறேன்
உங்கள் கலர்புல் சதம் அருமையாக வந்தது
வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
கவிதா

பாராட்டு

கவிதா உங்கள் மனபூர்வமான பாராட்டிற்கும் பின்னூடத்திற்கும் நன்றி.மேடம் வேண்டாமே.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

pattani mochai thokku

seithu pathu solren madam...............