
தீபாவளியின் கொண்டாட்டமான இரவில், மயிலாப்பூரின் லஸ் கார்னர்.நடை பாதைக் கடைகளில் ஆடைக்கு பொறுத்தமான வளையல்களைத் தேடும் பெண்களும், குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொண்டு பரிதாபமாக நிற்கும் ஆண்களும் , இடிக்கவென்றே வரும் விடலைகளும், இடிபடாமல் நழுவ முயலும் பெண்களுமாய் களை கட்டி இருந்தது.
கண்களில் கலர் துணிகளின் வண்ணங்கள் மின்ன, தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, பார்க்கும் அழகான பொருட்களை எல்லாம் ”வாங்கித் தந்தால் என்ன?” என்கிற கோபப் பார்வையை தந்தைக்கு அளித்துவிட்டு விடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு செல்கின்றன டீன் ஏஜுக்குள் நுழையாத சிறுசுகள்.
வாங்கிய உடையின், நகையின் விவரத்தை பெருமையாக சொல்லும் வரை தூக்கம் தொலைக்கும் தாய்மார்களின் கம்பீர நடை, கம்பீரம் என்பதன் விலையாக நிம்மதியை அடகு வைத்த கணவன்மார்களின் தொய்வான நடையுடனும் நடை மேடை அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.
கார்களின் விரைவின் ஒலியும்,கடைகளில் விளக்குகளின் ஒளியும் மெலிதான இரவை வலிதாக்கி கொண்டு இருக்கின்றது.கடைக்காரர்கள் ஒவ்வொரு வழிபோக்கரையும் ,ஆணோ பெண்ணோ எனப் பார்க்காமல் கம்மலையும் ஷேவிங் லோஷனையும் வரை முறை இல்லாமல் வாங்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
கண்டிப்பாக தீபாவளி அன்றாவது குடும்பத்துடன் போய் ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டும் என இருக்கும் பெரும்பான்மையான நடுத்தரக் குடும்பங்களின் வருகையால் அந்த ஹோட்டல் கதி கலங்கிக் கொண்டிருந்தது.பெரிய குடும்பம் ஓன்று வயதான பெற்றோருடன் வந்தது.ஒரு காலத்தில் தன கையைப் பிடித்துக் கொண்டு வலம் வந்த தன் மகன்-தன்னை அழைத்து வந்ததை சந்தோசமாகவும், எதோ ஒரு சோகத்துடனும் சிற்றுண்டிக்கு சொல்லிக்கொண்டு இருந்தனர்.தனது வயதான நிலையா?வாழ்வின் முடிவின் தருவாயா அல்லது மலரும் நினைவுகளா என விவரிக்க முடியாத ஒரு உணர்வு....மகன் அப்பாவிடம் என்ன வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தான்.
மஞ்சள் துணிப் பை,இருப்பதில் நல்லதான ஒரு சேலை மற்றும் ரவிக்கை என ஒரு 65 முதல் 68 வயதான பெண் கூட்டத்தில் இடம் கிடைக்காமல் ஒவ்வொரு டேபிலாக பார்த்துக் கொண்டு வந்தார்.எங்களுக்கு முன்னால் உள்ள டேபிளில் அமர்ந்தார்.எங்கோ வேலைப் பார்த்து கொண்டிருக்க வேண்டும்.கைகளில் கைப்பு தெரிந்தது.நடுக்கம் இல்லாமல் சற்று ஆரோகியமாக தென்பட்டார்.
கண்களில் வறுமையை விட வெறுமை பளிச்சிட்டது.நேர்த்தியாக வாரப் பட்ட தலை அவரின் தன்னம்பிக்கையை பறை சாற்றியது.நன்கு வாழ்ந்து குடும்பத்திற்க்காகவே----வாழ்வை சுக துக்கங்களை மறந்து, வாழ்வையும் வசதியையும் தொலைத்து நிற்கின்ற ஒரு சகாப்தம் அமைதியாக உட்கார்ந்து இருந்தது.
அந்நாளின் நினைவுகள் முகத்தில் நிழலாடியது.கணவருடனும் குழந்தைகளுடனும் கம்பீரமாக இதே தெருவை வலம் வந்த நினைவுகள் நிழலாடியாது.ஏக்கமாகவும்அந்நாளின் நினைவுகள் முகத்தில் ஏக்கமாகவும் , அதே நேரம் வாழ்ந்து முடித்துவிட்ட திருப்தியும் என மாறி மாறி கண்களில்....
மற்ற டேபிளில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை உறுத்தல் இல்லாமல் பார்த்து ,அதனுடன் இணைந்த தன பழைய வாழ்வை அசை போட்டுக்கொண்டு, மற்றவர்களின் மகிழ்ச்சியை மனமார வாழ்த்திக் கொண்டு அமர்ந்து இருந்தார்.
ஹோட்டல் பணியாளர் நாற்பது வயதிருக்கும்,அவ்வளவு கூட்டத்திலும் மிகவும் இறக்க சுபாவத்துடன் அவரிடம் சென்று
"என்னம்மா சாப்பிடறிங்க? "
கொஞ்சம்கூட யோசிக்காமல் "ரண்டு இட்லியும்,ஒரு உளுந்த வடை அப்புறம் ஒரு காபி...!"
சர்வர் அங்கிருந்து அகல முயல கடை முதலாளி கை அசைத்து அருகே வருமாறு கை அசைத்தார்.
மெதுவாக சர்வரிடம் "அந்த அம்மாக்கிட்ட பைசா வங்க வேண்டம்.நல்லா கவனிச்சு அனுப்பு.....ரொம்ப வருஷமா நம்ம கடைக்கு வர்றவங்க.....பாவம்....!"என கூற சர்வரின் கணிவு கூடிப் போகின்றது.
போய் விரைவாக டிபனுடன் வந்தவர்,அவரின் முன் வைத்து விட்டு தள்ளிப் போய் நின்று கொள்ள,அவர் கூச்சத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.தனியாக அவசரப் பட்டு வந்து விட்டோமோ என்கிற எண்ணம் கண் வழியே தெரிந்தது.
சாப்பிட்டு ,கை அலம்பி விட்டு தன இருக்கையில் அமர்ந்து
"பில் எவ்வளவுப்பா....?" என மெதுவாக கேட்க,
"அதெல்லாம் வேண்டாம்மா......"என அவசரமாக மறுத்தார் சர்வர்.
கண்களில் குழப்பத்துடன் "ஏன்?" என பார்வையிலே கேட்டார்.
யோசிக்காமல் ,மஞ்சள் பையில் கையை விட்டு அதனுள் இருந்த ஒரு சிறிய பையில் இருந்து அவசர அவசரமாக ஐம்பத்து ரூபாயை எடுத்து எண்ணி தட்டில் வைத்தார்.கூட்டம் அதிகமாக இருக்க வாக்குவாதம் தவிர்க்க எண்ணி பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு,"கொஞ்சம் இருங்கம்மா.."என கூறிக் கொண்டே கல்லாவை நோக்கி சென்றார். அந்தப் பெண்மணியும் அவரை தொடர்ந்து மெதுவாக பின்னாலேயே சென்றார்.
மீதியை அந்த அம்மாவின் கையில் கொடுக்க அதிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து சர்வரின் கையில் , கண்ணிமைக்கும் நேரத்தில் திணித்து விட்டு,கம்பீரமாக வாயிலை நோக்கி நடக்கலானார்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
வெவ்வேறுதரப்பட்ட மக்களை அழகாக விவரித்துள்ளீர்கள்.
கதை அருமை. மேலும் பல கதைகள் வழங்கிட வாழ்த்துக்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஃப்ளோரா ஜீவா .. அழகு வரிகள். கதை படித்தேன்னு சொல்றதைவிட படம் பார்த்தேன், கண் முன் ஓடியது காட்சிகள். வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஃப்ளோரா...
நான் நினைத்ததை வனியும் ஆமியும் கூறிவிட்டார்கள். ஆனால் உண்மையும் அதுதான். கண் முன்னே காட்சிகள் ஓடியது.. கடையை பற்றி நீங்கள் விவரித்த விதம் நன்று..
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
ப்ளோரா..அருமையான் நடை..வர்ணனை..எதார்ததம் கடை (கதை)நெடுகிலும் அள்ளி தெளிக்கப் பட்டுள்ளது.தொடர்ந்து எழுத எனது வாழ்துக்கள்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அன்பு ஃப்ளோரா
நம்மைச் சுற்றி நடப்பதை கவனித்து, அதை எழுத்தில் கொண்டு வருவதுங்கறது சாமானியமான விஷயம் அல்ல. ரொம்ப அருமையாக கவனித்து எழுதியிருக்கீங்க. ஒலியும் ஒளியும் மெலிதான இரவை வலிதாக்கியது, ஹோட்டலுக்கு மகனுடன் வந்திருக்கும் அப்பாவைப் பற்றிய வர்ணனை, அந்த அம்மா உறுத்தல் இல்லாமல், மற்றவர்களின் மகிழ்ச்சியை மனமார வாழ்த்தியபடி இருப்பது,- சிறுகதை ஒன்றில் இத்தனை நுணுக்கமான வர்ணனைகளை, கோர்வையாக சொல்லியிருப்பது ரொம்ப சிறப்பாக இருக்கு.
ஏற்கனவே பத்திரிக்கைகளில் எழுதியிருக்கீங்களா? மிகுந்த அனுபவமும் சரளமும் தெரியுது உங்கள் எழுத்தில்.
வாழ்த்துகள், பாராட்டுகள்
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
கதை ரொம்ப நல்ல இருக்கு சரளமான நடை அழகான வர்ணிப்புகள்
பலதரப்பட்ட மனிதர்கள் என்று அம்சமாக இருக்கு. வாழ்த்துக்கள்.
அன்புடன் ஃப்ளோரா!
ஒவ்வொரு காட்சியையும் அழகாக கொடுத்து, ஒரு அருமையான கதையை இங்கே பதித்ததற்கு என் நன்றிகள் பல.
இன்னும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
ப்ளோரா மேடம்,
வாழ்த்துக்கள்...
இயல்பான கதை
தொடரட்டும் உங்கள் பணி...
அன்புடன்,
கவிதா
ஃப்ளோரா அவர்களே, வணக்கம். உங்களுடைய உறுதியின் இறுதி கதை மூலமாக ஒரு ஐந்து நிமிடங்கள் மயிலாப்பூர் லஸ் கார்னரையே காங்கோவிற்கு இடம்பெயர்த்து வைத்தது போலிருந்தது. அந்த அளவிற்கு கதை தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் இருந்த்து. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ஃப்ளோரா மேடம்
அழகான கதை, அழகான வர்ணனை-யில் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டீா்கள்.. அருமை....
மேலும் பல நல்ல கதைகள் தர வாழ்த்துக்கள்....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
இவ்வளவு கருத்துக்கள் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.இது என் இரண்டாவது கதை.முதல் படைப்பு வெளி வந்தாலும் நான் அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை.கருத்துக்களும்,வாழ்த்துக்களும் கண்ணீரை வரவழைகின்றது.Blog எழுதுவதுண்டு.எல்லோருக்கும் அன்புடன் மீண்டும் நன்றிகள்.
ஃப்ளோரா ஜீவா
வந்தமைக்கும் கருத்துக்கும் அணைவருக்கும் நன்றி.
ப்ளோரா சூப்பர், ஃபர்ஸ்ட் க்ளாஸ், அருமை, பகுத் அச்சா, நஸ்ஸா உந்தி எனக்கு இவ்வளவு பாஷையில தான் சொல்ல தெரியும். உங்களோட வர்ணனைகள் ரொம்பவே அருமை. அந்த சுழலை சொல்வதாகட்டும், அந்த பெரியவங்களை பற்றி சொல்வதாகட்டும் உங்கள் வார்த்தைகள் நல்ல பயன்பாடு.
காட்சிகளை நீண்ட வாக்கியங்களில் அழகா பதிவு பண்ணியிருக்கீங்க. படிக்க ரொம்ப இதமா இருக்கு. தொடர்ந்து நிறைய கதை எழுதுங்கள். வாழ்த்துக்கள்
அன்புடன்,
இஷானி
பச்சோதாபம் தேவையில்லை என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள். நல்லா இருக்க்கு :)
நட்புடன்
நாகை சிவா
http://tsivaram.blogspot.com
"Follow your heart and your dreams will come true."
உ
என்னவென்று சொல்வதம்மா! வஞ்சி உங்கள் கதை அழகை!
சொல்ல மொழி இல்லையம்மா கதையின் வர்ணனையை!
சீதாம்மா சொன்னாமாறி //ஏற்கனவே பத்திரிக்கைகளில் எழுதியிருக்கீங்களா? மிகுந்த அனுபவமும் சரளமும் தெரியுது உங்கள் எழுத்தில்.// ?
பாராட்டுகள்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
வாழ்த்துக்கள்.
மேலும் எழுதுங்கள்.
அன்புடன்
ஜெமாமி