
பெருமாள் அண்ணாச்சியை தெரியாதவர்கள் அந்த ஊரில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரின் செல்வாக்கு பரந்துவிரிந்து இருந்தது. அவர் வீட்டு விஷேஷம் என்றால் சொல்லவா வேண்டும்? மகனின் திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே சொந்த,பந்தங்கள் வர தொடங்கிவிட்டனர். ஆளுக்கு ஒரு வேலையாய் செய்து கல்யாண வேலையில் மும்முரமாயினர். ரேவதி மட்டும் யாரிடமும் பேசாமல், யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருந்தாள்.
அண்ணாச்சி ஊரில் பெரிய பணக்காரர்;மூன்று உணவு விடுதிகளுக்கு உரிமையாளர்;நிலத்தில் பணத்தை கொட்டியதால் ஊரில் பல ஏக்கருக்கு சொந்தக்காரர்; கஷ்ட்டப்பட்டு முன்னேறியதால் பணத்தின் அருமை அறிந்தவர்;அதனால் சிக்கனவாதி; எதைசெய்தாலும் பலமுறை சிந்தித்து செயல்படும் திறமைமிக்கவர்; ஆசைக்கும் ஆஸ்திக்கும் இரு பிள்ளை செல்வங்கள்.
ரேவதி தனித்து இருப்பதை எப்படியோ கவனித்த அண்ணாச்சி அருமை அழைத்து விவரம் கேட்டார். ரேவதியோ,
“அப்பா! எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்ட்டம் இல்ல. அதனால தான் சீதனத்துக்கு கூட வரல.நம்ம அந்தஸ்து என்ன? அவங்க அந்தஸ்து என்ன? ஏணி வச்சாலும் எட்டுமா? தம்பிக்கு எவ்வளவு பெரிய இடங்களில் இருந்தெல்லாம் பொண்ணு குடுக்க ரெடியா இருக்கும் போது தெரிஞ்சே சேத்துல போய் கால் வைக்கிறீங்களேப்பா...! அதான் கவலையா இருக்கு” என மனதில் பொத்திவைத்த சலனத்திற்கான காரணங்களை கொட்டிவிட்டாள்.
அண்ணாசி பொருமையாக, “ செல்லம்,உன் அம்மா இருந்த வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம வீட்டு வேலையையும்,ஹோட்டல் வேலைக்கும் உதவி பண்ணா. அவ போனதுக்கு அப்பறம் எல்லாமே தலைக்கீழா மாறிபோச்சு. ஏழை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறேன்’ங்குறதைவிட இந்த வீட்டு வேலை பாத்துக்குறதுக்கும்,ஹோட்டல் வேலையெல்லாம் செய்றதுக்கும் ஆள் வேணும். பாத்திரம் கழுவ,மாவு அரைக்க அப்படி இப்படின்னு தனிதனியா ஆள் வச்சு பணம் போனது தான் மிச்சம். பணக்கார பொண்ணூங்கல்லாம் இந்த வேலையை செய்வாங்களா? மாணிக்கம் ஏழையா இருக்குறதுனால அவன் பொண்ணை நாம் எந்த வேலை வாங்கினாலும் கேள்வி கேக்கமாட்டான். கேக்கவும் முடியாது. அப்பா எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இல்லாம இல்லடா தங்கம்” என்ற விளக்கத்தில் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றாள். பின் சகஜமாய் வேலையில் ஈடுபட தொடங்கிவிட்டாள்.
“புடிச்சாலும் புளியங்கொம்பா தான் தேடிபுடிச்சுற்க மாணிக்கம்.அண்ணாச்சி வீட்டு சம்மந்தம்னா சும்மாவா? யாருக்கும் கிடைக்காத அதிஷ்ட்டம் உனக்கு கெடச்சுற்கு” என ஒவ்வொருவரும் சொல்ல சொல்ல பெருமையடைந்தான் மாணிக்கம். பிறந்திலிருந்தே ஏழை. 4 பெண் பிள்ளைகளில் 3 பெண்களை எப்படியோ தட்டுதடுமாறி கரைசேர்த்தான். இந்த கல்யாணம் கடைசி மகளுக்கு. இந்த வரன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தான் மாணிக்கம்.
\ஆனால் மாணிக்கம் மனைவியோ, “ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் எப்படி சமாளிக்க போறோமோன்னு கஷ்ட்டமா இருக்குங்க. சீர்,செனத்தியெல்லாம் அவங்க அளவுக்கு செய்யணும். நம்மனால முடியுமா? வாங்கின கடனே கழுத்த அறுக்குற அளவுக்கு இருக்கு. மறுபடியும் கடன் வாங்கினா எப்படி மீள்றதுன்னு தெரியல!” என ஆரம்பத்திலிருந்து இன்று வரை புலம்பிக்கொண்டே இருந்தாள்.
“அடி போடீ போக்கத்தவளே! கடன,உடன வாங்கி இந்த கல்யாணம் முடிச்சா அண்ணாச்சி சொத்துக்கு நம்ம பொண்ணுக்கும் உரிமை வந்துரும்ல! மாப்பிள்ளைய தனியா வான்னு சொன்னா வந்துறபோறாரு. அப்பறம் சொத்த பிரிச்சு கேக்க சொல்லலாம். அப்படியே நம்ம கடனையும் அடச்சுற்லாம். நம்ம நெலமையும் மாறும். எத்தன நாளைக்கு தான் குண்டுசட்டில குதுரைய ஓட்டுறது?” என சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் மும்முரமானான்.
சில நாட்களுக்கு பின் தெரிந்துவிடும். யார் எண்ணம் நிறைவேறியது என்று!
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
ஆமினா... சிரிச்சுட்டே இருக்கேன் படிச்சுட்டு.... ;) பாதி பொண்ணுங்களுக்கு கல்யாணமே வீட்டு வேலைக்கு ஆள் தேவை காரணத்தால் தான் முடிவாகுது. ஆனா இந்த கதையில் பெண் வீட்டுக்காறரும் கொஞ்சம் கெட்டிகாறரா தெரியறார். ஹஹஹா.... ;) வாழ்த்துக்கள் ஆமினா. சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆமினா..குறும்பான..யோசிக்கவைத்த கதை..!வழக்கம்போலே ஆமினா..rocking u !!
Madurai Always Rocks...
ஆமி
எப்பவும் கதைகளில் உங்களின் வயதிற்கு மீறிய ஒரு அழுத்தம் இருக்கும். கதை சூப்பர். அதன் தலைப்பும் தான். ;)
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
நல்ல கதை ஆமினா..சில இடங்களில் எழுத்துப் பிழை.பராவாயில்லை..எதார்த்தம் அதை மறைத்துவிட்டது....நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
மிக விரைவிலேயே கதையை வெளியிட்ட அட்மின் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
வனிதா அக்கா!
எல்லா பெத்தவங்களும் ஏமாளியா இருந்துருவாங்களா என்ன? :)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ஆனந்தி. ஒவ்வொரு முறையும் உங்க உற்சாகம் நிறைந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் அதிகமாக ஊக்கப்படுத்துகின்றன. அதுனால தான் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்னு பல பேரிடம் சொல்லியிருக்கேன்:)
நீங்க பேசும் போதெல்லாம் என் மீது தனிபட்ட அக்கறை காட்டுவது போல் உணர்கிறேன். உங்கள் அன்பு பிடியில் மாட்டிக்கொண்டேன் மிகுந்த மகிழ்ச்சியுடன்....
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ரம்யா
//வயதிற்கு மீறிய ஒரு அழுத்தம்//
இதற்கு காரணம் என் மாமியார். அவங்க கதை சொல்லல. ஆனா இந்த மாறி மேலோட்டமா அவங்க பார்த்த அனுபவத்த சொல்லுவாங்க. அந்த அனுபவத்த நான் சுட்டுட்டேன். இனிமே தான் அவங்க கிட்ட சொல்லணும். இனி ஆமிக்கிட்ட ஜாக்கிரதையா தான் பேசுவாங்க:)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரம்யா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சேக் அண்ணா!
நன்றி அண்ணா. நானே பலமுறை முயற்சி செய்கிறேன். ஆனால் எழுத்துபிழை என்னையே சுத்திக்கிட்டு வருது.
அடுத்த முறை கவனமா கழட்டி வச்சுட்டு வரேன்:)
அக்கறைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நான் அறுசுவை.காம் ல் தொடங்கும் ஐ.டி அடிக்கடி பிளாக் செய்யப்படுகிறது. சரியான பெயர்,பாஸ்வேர்டு கொடுத்தாலும் உள்நுழைய முடிவதில்லை. இதைப்பற்றி சொல்லுங்க , ப்ளீஸ்
ஹாய் ஆமி,
நீங்கள் எழுதிய கதை நல்லா இருக்கு. எழுத்து நடை, பேச்சு வழக்கு எல்லாம் அருமை. எல்லாவற்றிலும் ஆதாயம் தேட நினைக்கும் மக்களின் மனதை படம் பிடித்து காட்டுகின்றன உங்கள் எழுத்துக்கள். யதார்த்தமான கதை. வழக்கம் போலவே கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள்.
நல்ல கதை.ஒரே விஷயம் தான் ஆனால் ஒவ்வொருடைய சிந்தனையும் எப்படி மாறுபட்டுள்ளது என்று அழகாக சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள்.
இதை அட்மின் அண்ணா இன்னும் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.
உங்கள் ஐடி அடிக்கடி பிளாக் செய்யப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.கீழே தொடர்புக்கு சென்று அதன் மூலம் அட்மின் அண்ணாவிடம் கேளுங்கள். உடனே பதில் சொல்லுவார்கள்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ஹர்ஷா
உங்கள் பதிவுக் கண்டு மகிழ்ச்சி.
தொடர்ந்து வந்து வாழ்த்துவது இன்னும் எனக்கு பூஸ்ட் குடிச்சது மாறி இருக்கு.
உங்களின் இந்த ஊக்கங்கள் தான் என்னை மேலும்,மேலும் எழுத வைக்கிறது!
வாழ்த்துக்களுக்கு நன்றி ஹர்ஷா!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்தை கண்டு. நீங்க நல்லா புரிஞ்சுக்கிட்டீஙக்ன்னு இந்த வார்த்தைகளிலேயே தெரிகிறது. ஒரு சிம்பிள் பழமொழி தான்.
“நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்”
இதை கருவாக கொண்டு எழுதினேன்:)
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ரீம்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நல்ல கதை படிச்ச திருப்தி. ரொம்ப அழகா வார்த்தைகளை
கையாளுரீங்க ஒரே விஷயம் ஒவ்வொருவர் பார்வையில்
எப்படியெல்லாம் வித்யாசமாகட்தெரிகிரது. பாராட்டுக்கள் ஆமினா.
அன்பு ஆமினா,
நடந்த ஒரு சம்பவத்தை, நேரே உட்கார்ந்து, விவரிப்பது போல, சுவையாக சொல்லியிருக்கீங்க.
கல்யாணங்களில் ஒவ்வொருத்தரின் நோக்கமும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கு. நிறைய வீடுகளில் நடப்பதுதான் இது.
பாராட்டுகள், வாழ்த்துகள்
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
ஆமீனா, எண்ணங்கள் பலவிதம் கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார் என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல அண்ணாச்சி ஒண்ணு நினைக்க பொண்ணோட அப்பா ஒண்ணு நினைச்சிருக்காரு போல. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்பதற்கேற்ப உங்கள் கதை அமைந்திருந்தது. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம். :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
சரி தான் கோமு.எல்லாருடைய எண்ணங்கள் என்றும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு விசயமும் மாறுபடும்.
மகன் டாக்டராக ஆக வேண்டும் என அப்பா நினைப்பதும், தான் என்ன ஆசை படுகிறேனோ அது போல் தான் ஆவேன் என மகன் நினப்பதும் இயல்பு தானே!
எல்லாருக்கும் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அது நிறைவேறுவதும் நிறைவேறாததும் இறைவன் கையில் :)
பாராட்டுக்களுக்கு நன்றி கோமு!
இந்த முறை உங்கள் கதை எதிர்பார்த்தேன். இன்னும் எழுதவில்லையா? உங்கள் எழுத்தை படிக்க ஆவலாக உள்ளேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
//கல்யாணங்களில் ஒவ்வொருத்தரின் நோக்கமும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கு//
உண்மையான வார்த்தை. நான் பல இடங்களில் பார்த்துள்ளேன். முக்கியமாக கல்யாணங்களில் தான் அதிக எதிர்பார்ப்பு உண்டாகும். பல உதாரணங்களை சொல்லலாம். மகள் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்தால் வெளிநாடு செல்வாள்,மாமியார் கொடுமை இல்லையென நினைப்பார்கள். கல்யாணம் ஆன பின்போ என் அம்மா,அப்பா பக்கத்துல தான் இருக்கணும்னு சட்டம் பேசுவாங்க!
கதை படித்து கருத்து சொன்னதை கண்டு மிக்க மகிழ்ச்சி சீதாம்மா!
பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
உங்களை போன்றவர்கள் பாராட்டும் போது இன்னும் பல படைப்புகள் தந்துவிட வேண்டுமென மனதுக்குள் புது உணர்வு எழுகிறது :)
தொடர்ந்து என் படைப்புகள் வந்தால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டுமென அன்பு வேண்டுகோள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நானும் அந்த பழமொழியை மையமாக வைத்து தான் எழுதினேன்.
நீங்கள் சொல்வது போல ஒரு வல்லவனை அடக்க கூடிய பலம் பொருந்தியவன் கண்டிப்பாக இருப்பான்!
கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி!
கருத்துக்கு நன்றி கல்பனா!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Sugumar11,
நீங்கள் guna20, guna22 என்று வரிசையாக எத்தனை பெயரில் வந்தாலும் ப்ளாக் செய்யப்படுவதற்கு ஒரே காரணம், நீங்கள் கொடுத்திருந்த ஒரு (மோசமான) பதிவுதான்.
ஆமினா மேடம்,
வாழ்த்துக்கள்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் கணக்கு வாழ்கையை பற்றி
ஆனால் அது தரும் பாடங்கள் மிக பெரியது
தொடரட்டும் உங்கள் பணி...
அன்புடன்,
கவிதா
கவிதா
தொடர்ந்து வாழ்த்தி வருகிறீர்கள். நன்றி!
//ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் கணக்கு வாழ்கையை பற்றி
ஆனால் அது தரும் பாடங்கள் மிக பெரியது//
அழகான வரிகள். புத்தக கல்வியில் அறிவை மட்டுமே வளர்க்கலாம். ஆனால் அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான் நமக்கு எது சிறந்த வழி என சொல்லும் இல்லையா?
தொடர்ந்து இது போல் ஆதரவு கொடுங்கள். எனக்கு அது ஊக்கங்களை தரும்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா
கதை மிகவும் அருமை. யதார்த்தமாக இருந்தது. கல்யாணத்துக்கு போய்ட்டு வந்த திருப்தி வந்தது.... ஆனால் கல்யாணத்துல ஒரே ஒரு குறை... கல்யாணசாப்பாடு போடாமலே அனுப்பிட்டாங்கப்பா....
கல்யாண வீட்டில் ஒவ்வொருவரின் எண்ணமும் ஒவ்வொரு மாதிரி... அதை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
அதான் சொன்னேனே,அன்ணாச்சி ரொம்ப சிக்கனவாதின்னு. அதான் கல்யாண எப்ப நடக்குதுன்னு சொல்லிட்டு கல்யாணத்துக்கு கூடிட்டு போகாம பொறுத்திருந்து பார்க்க சொல்லியிருக்கார்:)
பாராட்டுக்கு மிக்க நன்றி ராதா!
தொடர்ந்து படித்து உங்க நிறை குறைகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றாக எழுதி கடைசியில் ஒரு மர்மம்...
தொடர்கதைப்போல் உள்ளது..
நன்றிகள் ஆமினா .
தலைப்பு சரியாக வைத்துள்ளீர்கள்...
வாத்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
// கடைசியில் ஒரு மர்மம்
தொடர்கதைப்போல் உள்ளது..//
அதை இன்னும் அதிகமா சொல்லனும்னா அறுசுவைல 100 எபிசோட் போகும். அதான் விட்டுட்டேன்:(
உறவுகள் தொடர்கதை இல்லையா?:)
வாழ்த்துக்களுக்கும், விமர்சனதிற்கும் மிக்க நன்றி யோகராணி.
உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து முயற்சி செய்து எழுதுவேன்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
எண்ணங்கள் பலவிதம் கதை அருமை ஆமினா, ஒவ்வோருவர் எண்ணங்களும் ஒருவருக்கோருவர் மாறுபடும் என்பதயும், யாரையும் நாம் தவாறக எடைபோடக் கூடாது என்பதையும் அழகா சொன்னீங்க, அடுத்தவர் கஷ்டத்தில் பலர் இப்படித்தான் குளிர்காய்கிறார்கள், தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்யா
ஒரு வழியா இப்ப தான் உங்களுக்கு நேரம் கிடைத்ததா பதிவு போட?
கண்டிப்பா நித்யா. எண்ணங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும்.
//அடுத்தவர் கஷ்டத்தில் பலர் இப்படித்தான் குளிர்காய்கிறார்கள்//
இந்த வார்த்தையை நான் பலமுறை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். எரியும் வீட்டில் மிச்சம் என்ன இருக்குனு பார்த்து அதையும் பிடுங்கி போகக்கூடியவர்கள் அதிகம். ஒருவரின் ஏழ்மையை தனக்கு சாதகமாக்கி கொள்பவர்கள் இந்த சமுதாயத்தில் அதிகமுண்டு!
கருத்துக்களுக்கு மிக்க நன்றி நித்யா. தொடர்ந்து உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
ஒரு சமையல் குறிப்போடு நிப்பாட்டிட்டீங்க போல!
சீக்கிரமா மற்ற குறிப்புகளை அனுப்புங்க. எதிர்பார்த்துக்கொண்டிருபேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா