”இந்த மனுசன கட்னதுக்கு பதிலா கல்ல கட்டிருந்தாக்கூட எதுக்கும் ப்ரோஜனமா இருக்கும். வீட்ல வயசுக்கு வந்த புள்ள ஒன்னு பல வருஷமா குத்தவச்சு இருக்கே.. அதெல்லாம் கவல கிடையாது. விடிஞ்சதும் திங்கணும், தூங்கணும், படுக்கணும், அந்த பாழாய்போன மனுசங்களோடு சேர்ந்து சீட்டு விளையாடனும். இதே பொழப்பா போச்சு. இவர கட்டிகிட்டு என்ன சுகத்த கண்டுட்டேன்" கூவி அழுதாள் முனியம்மாள்.
"சத்தம்கித்தம் போட்ட கழுத்த நெரிச்சு கொன்னு போட்ருவேன். சீ.. வாயப்பொத்து" கண்கள் இரண்டும் தக்காளிப்பழம் போல் சிவந்து கர்ஜித்தான் வேலாயுதம்.
"ஆமா.. அது ஒன்னுதான் பாக்கி. வாய்யா வா உன் கையாலையே எங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டு, இன்னொருத்திய கட்டிக்கிட்டு மவராசனா இரு"
அதற்கு மேல் அங்கு நின்றால் அது இரத்த பூமியாகிவிடும் என்ற பயத்தில் வீட்டைவிட்டு வெளியேறினான் வேலாயுதம்.
இந்த சண்டை ஒன்றும் புதிதல்ல இருவருக்கும். சில சமயங்களில் முனியம்மாவின் கத்தலில் கிராமமே அவள் வீட்டின் முன்னால் நிற்கும். பகல் இரவென்று கிடையாது. ரேவதி அவர்களின் ஒரே மகள். வழியில்லாமல் முனியம்மாவோடு சேர்ந்து கூலிவேலைக்குப் போய்வருவது வழக்கம். சில சண்டைகளின் முடிவில் முனியம்மா ரேவதியை கூட்டிக்கொண்டு சுற்றுலாவிற்கு செல்வதுபோல் பிறந்தவீடு போய் வருவாள். பிறகு ரெண்டு சொட்டைத்தலைகளுடன் வந்து பஞ்சாயத்து பண்ணி மறுபடியும் வீட்டிற்கு வந்து சேர்வாள்.(என்ன பொழப்புடா சாமி இது?)
வேலாயுதம் நல்ல உழைப்பாளி. ஆனா மகாகுடிகாரன்.(மகா நடிகன் போல் மகா குடிகாரனா? அப்ப பொறம்போக்குனு சொல்லுங்க) எப்போது சண்டைபோட்டாலும் கொட்டிக்க ராத்திரியானா வந்து விழுந்துருவான். அன்னைக்கு தமிழ்க்'குடி'மகன் மிஸ்ஸிங்.
வாசலில் அவனுக்காக உக்காந்து காத்திருந்து அவன் வராமல் போகவே தூங்க போய்விட்டாள் முனி.(அதான் பேய்யாட்டம் ஆடுதோ?) விடிந்தும் ஆள் வரவில்லை. 'எக்கா எங்க வீட்டு ஆள எங்காச்சும் பாத்திகளா?" இதே பல்லவியில் அக்கம்பக்கம் எல்லாம் விசாரித்துப் பார்த்தாகிவிட்டது. ஊஹூம்.. ஆள் போலிச் சாமியார்போல் மறைந்துவிட்டானோ என்னவோ?...
மறுநாள் இரவு, ஊரடங்கி எல்லோரும் ஏப்பம் விட்டு தலைசாஞ்ச நேரம்.... வீட்டில் நுழைந்தான் வேலாயுதம். முனியம்மாவிற்க்கு உசுருபோய் திரும்ப வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. (பெண் மனசு ஆழம் என்று ஆம்பிள்ளைக்குத் தெரியும்.. ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்)
"ரேவதி சாப்பாடு வைக்கவானு கேளும்மா?“
"அப்பா சாப்பிட வாங்கப்பா..எங்கப்பா போய்டீங்க நேத்தல்லாம்?"
"எனக்கு வேண்டாம்மா..நீ போய் சாப்பிட்டு தூங்கு"
தூங்க போய்விட்டாள் ரேவதி. அவனிடம் மறுபடியும் ஏதும் கேட்காமல் உணவு எடுத்துவைத்தாள் முனி. முதலில் ரோசம் காட்டிவிட்டு, வயிறு அலாரம் அடிக்கவே கை நனைத்தான். சாப்பிட்டுகொண்டே கேட்டான்.
"ஏம்புள்ள என் மேல இன்னும் கோவமா. நான் ஒன்னும் ரேவதி மேல அக்கறை இல்லாம இல்ல."
திடீரென்று ஒரு மரப்பொட்டியை திறந்து கையில் ஏதோ எடுத்துவந்து அவள் முன் போட்டான்.
"பார்..நம்ம மவளுக்காக இவ்ளோ நாள் நான் சேர்த்து வச்சுருக்குற பணம். நான் குடிகாரந்தான், ஆனால் இதயமில்லாதவன் கிடையாது. புருஷன் பொஞ்சாதிகுள்ள ஆயிரம் சண்டை வரும் போவும். அன்பு இல்லாம போய்ராது. நேத்து பூரா குடிச்சிட்டு பண்ணையார் தோப்புக்குள்ளதான் எந்திரிக்க முடியாம கிடந்தேன். ஆனா நினைப்பெல்லாம் உன் மேலையும் ரேவதிமேலையும்தான் புள்ள. என்னால் குடிக்குறத நிப்பாட்ட முடியல. சத்தியமா சொல்றேன் புள்ள நாளேலிருந்து சீட்டு விளையாட மாட்டேன். (அப்ப குடி?)உடம்பு வலிக்குன்னு ஆரமிச்சி இன்னும் வுடமுடியல."
"உங்கள மாதிரிதான் நானும், கோவத்துல வார்த்த வந்துருது.சரி கொஞ்ச நாளைக்கு நம்ம சண்டையெல்லாம் மூட்டைகட்டிவச்சுட்டு ரேவதிக்கு பக்கத்து கிராமத்லேயோ இல்ல நம்ம சொந்தபந்தத்திலேயோ வரன் பாருங்க. அவளுக்கு வயசு ஏறிகிட்டே போகுது."
சரி என்பது போல் தலையாட்டியவனாய் முனியம்மாவின் மடி சாய்ந்தான் வேலாயுதம்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
ஷேக்... நல்ல எதார்த்தமான கதை. :) வீட்டுக்கு வீடு வாசப்படி. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஷேக்
எதார்த்தமான நல்ல கதை.. கனவன் மனைவிக்குள் இதெல்லாம் சாதாரணம்.. ;-)
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
முதலில் இந்த கதையை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு என் நன்றி!
வனிதா மேடம் உங்கள் தொடர்சியான அன்பான் பாராட்டுதலுக்கு நன்றிகள் பல...
எல்லா புகழும் இறைவனுக்கே!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அழகான கதை அண்ணா!
உண்மையாவே பல இடங்களில் நடக்கும் விசயத்தை அழகா கதையா கொண்டு வந்துருக்கீங்க!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ரம்யா மேடம்..ஒரு சாதாரண விசயத்தை அதனால்தான் சிம்பிளாக சொல்லியுள்ளேன்...உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி! நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
நன்றி ஆமினா...எல்லாம் உனது ஊக்கமும் பாராட்டுதலும்தான்...
எல்லோருடைய பாராட்டிலும் விமர்சனத்திலும்தான் நான் வீரநடை போடுகின்றேன்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக்,
உங்க கதைய படிச்சேன், நல்லாயிருந்தது.
ஒரு சின்ன ஆலோசனை, தப்பா எடுத்துக்காதீங்க.
அடுத்த முறை, கதைக்கு தலைப்பு வைக்கும் போது பார்த்து வைங்க. தலைப்பை படிச்சு, சிரிச்சு, சிரிச்சு,கதையையும் சிரிச்சுகிட்டே தான் படிச்சேன்.
ஆமா, அதென்ன முனி?..... அவள் வேலாயுதத்தோட மனைவி, Sir. பாவம், அவர் கோச்சுக்கப் போறார்.
மேலும் நிறைய கதைகள் எழுதுங்க. வாழ்த்துக்கள்.
ஹர்ஷா மேடம் உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி..என் கதை நல்லவே இல்லை என்று நீங்கள் சொன்னாலும் பராவாயில்லை...நீங்கள் சிரித்து கொண்டே படித்தீர்கள் என்று சொன்னீர்களே அதுவே போதும்..நான் கதை எழுதி ஒன்றும் சாதிக்கப் போவதில்லை..ஆனால் என் நண்பர் ஒருவரை சிரிக்கவைத்தேன் என்ற சந்தோசம் எனக்கு உண்டு.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
கதை ரொம்ப நல்லா இருக்கு ஷேக் ஆமா அதென்ன
//முனி.(அதான் பேய்யாட்டம் ஆடுதோ?) //
இப்படி குடிச்சிட்டு வந்தா பேயாட்டம் ஆடாம என்ன செய்வாங்க??
ponni
கலக்கிட்டீங்க போங்க
//பார்..நம்ம மவளுக்காக இவ்ளோ நாள் நான் சேர்த்து வச்சுருக்குற பணம். நான் குடிகாரந்தான், ஆனால் இதயமில்லாதவன் கிடையாது. புருஷன் பொஞ்சாதிகுள்ள ஆயிரம் சண்டை வரும் போவும். அன்பு இல்லாம போய்ராது.//
நல்ல வரிகள் அண்ணா, எங்கயோ போய்டீங்க, இதே மாதிரி உங்க கவிதை அழகாக வர என் வாழ்த்துக்கள்
அன்புடன்
பவித்ரா
நன்றி பொன்னி சிஸ்டர்..குடிச்சா அப்ப பெண்கள் பேய்யாகி விடுவார்களா..தாய்மார்களே!தந்தைமார்களே பொன்னி சொல்றத நல்லா கேளுங்க..யாரும் பேய் பார்க்கனும்னு ஆசைபட்டா இது ஒரு அழகான ஐடியா,,,
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
பவித்ரா ரொம்ப நன்றி உன் அன்பிற்கும் பாசத்திற்கும் பாராட்டுதலுக்கும்.ஆனால் ஒரு உண்மை சொல்லவா?இதில் கவிதை வரிகள் என்று நான் ஏதும் பயன்படுத்தவில்லை..அந்த வரி உன் கண்களுக்கு கவிதையாகபட்டால் அதற்கும் என் நன்றி!
(இதில் கொஞ்சம் அடக்கி வாசித்தேன் பா.)
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
எனக்கு அந்த வரிகள் பிடித்திருந்தது அவ்வளவுதான், அது கவிதை இல்லைன்னு எனக்கும் தெரியும்
அன்புடன்
பவித்ரா
ஷேக் நீங்களும் உங்க ஹீரோ மாதிரி குடிச்சிட்டு வீட்டுக்கு போய் பாருங்க அண்ணியோட ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும்னு
அண்ணி கவனிக்க: கதை தலைப்ப பாத்தீங்களா "குடிகாரன் - ஷேக்"
ponni
குடிகாரனும் சீட்டாடுபவனும் திருந்தியதா சரித்திரமே இல்லையே
அன்புடன்
THAVAM
சரிதான் தவமணிஅண்ணா....ஆனால் நான் திருந்தியதாக கதையில் சொல்லவில்லை...குடிகாரன்பேச்சு விடிஞ்சா போச்சுதான்...கதைக்கு கண் மூக்கேது சார்...
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
//குடிகாரனும் சீட்டாடுபவனும் திருந்தியதா சரித்திரமே இல்லையே//
உண்மை தான். அதுனால தான் நாங்க (கணவர் வீட்டில் உள்ளவர்கள்) சீட்டு விளையான்டா மாமி குச்சியெடுத்துட்டு வருவாங்க. கொழுத்தி போட:(
ட்ரைன் ல மட்டும் தான் நிம்மதியா வெளையாட முடியும்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கதை ரொம்ப நல்லா இருக்கு, பாராட்டுக்கள். சாதாரண விஷயத்தை இவ்வளவு சிம்பிலாக கதை வடிவில் சொல்ல உங்களால்தான் முடியும்.அதென்ன முனி?
அன்பு ஷேக்,
நான் சொல்ல நினைத்ததை எல்லாம் எல்லோருமே சொல்லிட்டாங்க. எத்தனையோ வீடுகளில் நடப்பதை அழகாக கதை வடிவில் சொல்லியிருக்கீங்க.
பாராட்டுகள், வாழ்த்துகள்
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
மீண்டும் ஒரு நல்ல கதை ஷேக் தம்பி.
வாழ்க்கை பாடங்களை கதையாக கொடுப்பதில் உங்களுக்கென ஒரு தனி இடம் உண்டு.
மிகவும் அருமையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
சகோதரர் ஷேக் அவர்களே, உங்களுடைய குடிகாரன் கதை மிகவும் நன்றாக இருந்தது. கல்(ள்)லுகுள்ளும் ஈரம் இருக்கும் என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள். நாளுக்கு நாள் உங்களுடைய எழுத்து நடை மெருகேறிக்கொண்டே செல்கிறது. எதிர்காலத்தில் பெரிய கவிஞராகவோ, எழுத்தாளராகவோ ஆனால் இந்த சகோதரியை மறந்து விடாதீர்கள் :) தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கோமு மேடம் நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு.எனெக்கென்னமோ என் கைகளையும் மனதையும் கட்டி போட்டதுபோல் உண்ர்ந்தேன் இந்த கதை எழுதிய பிறகு..ஏனென்றால் எப்போதும் பயன்படுத்தும் கவிதைவரிகள் இதில் இல்லை...
முனி என்றால் பேய்...(ஹெஹெஹெஹ்ஹ்) பொஞ்சதி பேயாட்டம் ஆடுறாளாம் மேடம்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
சீதாலஷ்மி மேடம் நன்றி உங்கள் பாராட்டுத்ளுக்கு...உண்மைதான் மேடம்.எல்லோருடைய வாழ்க்கையிலும் இது சகஜம்தான்..ஆனாலும் எழுதியபின் யோசித்தேன் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாமோ என்று.உங்களை போன்ற பெரியவர்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை,நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
///வாழ்க்கை பாடங்களை கதையாக கொடுப்பதில் உங்களுக்கென ஒரு தனி இடம் உண்டு.
மிகவும் அருமையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்///
நன்றி யோகராணி மேடம் உங்கள் அன்பிற்கும் பாராட்டுதளுக்கும்.
எனக்கு இதுபோன்ற அனுபவம் வாழ்க்கையில் இல்லை...ஆனால் இந்த கதைகளில் வரும் கதாநாயகன் போல் சில மனிதர்கள்..நானும் பார்க்கிறேன் குடிகாரனெல்லாம் ஒருநாள் திருந்துவார்கள் என்று..
குடிகாரன்பேச்சு விடிஞ்சாபோச்சு என்பதை சில குடிகாரர்கள் காலம்காலமாய் நிலைநிறுத்தி வருகிறார்கள்..எனெக்கென ஒரு தனி இடமா?நன்றி!(அதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சிக்கிறேன்)
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
சகோதரி கல்பனா அவர்களுக்கு..நன்றி உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும்!
எனக்கும் தெரிகிறது என் எழுத்துக்களின் வித்தியாசம்...நான் பெரிய கதாசிரியரோ கவிஞனகவோ வராவிடினும் படித்தால் ரசிக்கலாம் என்ற நிலையை அடைந்தாலே அதுவே மாபெரும் வெற்றிதான்!
அதென்ன பெரிய எழுத்தாளனோ கவிஞனோ ஆனால் நட்பை மறந்து விடாதீர்கள்???
கவிஞன் என்ற பட்டம் அவ்வளவு போதை வஸ்தா நண்பர்களின் முகம் கண்டுகொள்ளாதபடி நடப்பதற்கு.....
ஆணவம் என்பது ஒரு கொடுமையான விஷக்கிருமி..ஒரு பெரிய விருட்சத்திற்க்கே அது அபாய சங்கு ஊதிவிடும்!எப்போதும் இறைவனிடம் வேண்ட நினைப்பது அந்த விஷகிருமியடமிருந்து விவகாரத்துதான் அல்லது பாதுகாவல்தான்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் அண்ணா
கதை யதார்த்தமாக உள்ளது. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..... எப்படியோ பணம் சேர்த்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவச்சா சரிதான்.... மேலும் பல நல்ல கதைகள் வெளிவர வாழ்த்துக்கள்...
(எப்போ உங்க பேர குடிகாரன்-ஷேக் னு மாத்தினீங்க..... அண்ணி கவனிக்கவும்....)
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
அடபாவி ராதா என்னையபோய் குடிகாரன் என்று சொல்றியேப்பா?இதுல வேற அண்ணி கவனைக்க வேண்டுமாம்!நல்ல இருக்கு நியாயம்.குடும்பத்ல குழப்பம் உண்டு பன்னிருவ போலிருக்கே!எனிவே..நன்றி உனது அன்பிற்கும் பாராட்டுதலுக்கும்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அண்ணா
தவறு என்னிடமில்லை.... நீங்களே தலைப்பைப் பாருங்கள்..... இருந்தாலும் தங்களை குடிகாரன் என்று நானே கூறுவேனா.... சும்மா விளையாட்டுக்குதான். நான் சொன்னாலும் அண்ணி நம்பிடுவாங்களா?....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
கதை ரொம்ப நல்லா இருக்கு. சொல்ல நினைத்ததை தோழிகள் சொல்லிவிட்டதால் ஒரே வரியில் சொல்றேன். ஷேக் கதை ஷோக்கா இருக்கு. தொடரட்டும் உங்கள் படைப்புகள்
சங்கீதா மேடம்..ரொம்ப நன்றி!கதை ஷோக்காகீதா?கதை ஷோக்கா சங்கீதா?(வித்தியாசம் புறிகிறதா உங்களுக்கு) எனக்கு உங்களை போன்ற தோழிகளின் தோழர்களின் நண்பர்களின்,தங்கைகளின் ஆதரவு எப்போதும் தேவை..உங்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் என் இதயன் கனிந்த நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்