அரட்டை அரங்கம் 2010 பகுதி - 18

அரட்டை பாகம் 17.. அடேங்கப்பா.. அப்படி என்ன தான்ப்பா பேசினீங்க...
எல்லா விசயத்துக்கும் தனி இழை தொடங்க முடியாது.. இல்லை நல்லா போயிட்டு இருக்க இழைல "இன்னைக்கு என்ன மெனு" அப்படி கேட்டா அங்க சுவாரசியமா ஓட்டிட்டு இருக்கவங்க கொஞ்சம் சங்கடப்படலாம் இல்லையா.. அதனால தான் அட்மின் இப்படி ஒரு இழைய ஆரம்பிச்சார் பழைய/பழைய தளத்தில்....ஒரு ப‌ய‌னுள்ள‌ இழையை மொக்கை ( இது தான் வ‌ழ‌க்கும் மொழி அர‌ட்டைக்கு) இழையாக‌ ஆக்கிட‌ வேண்டாம்கிற‌ ந‌ல்லெண்ணம் தான்..


பொன்னி! நன்னாருக்கியா?
ஊருக்கு வந்தா செத்த எங்காத்துக்கும் வந்துட்டு போவியோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இங்கல்லாம் இப்போ நல்ல மழை காலமாக்கும். ஐஸெல்லாம் வக்காதே.
அப்பரம் கோல்ட் பிடிச்சிக்கும்.

ஹாய் மாமீ! நல்லா இருக்கீங்களா??
இங்க காலையில் இருந்து ரொம்ப பனிமூட்டமா இருக்கு கண்ணே தெரியலை 100 அடிக்கு மேல... ஜாலியா ஒரு கப் காஃபியுடன் அதை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.... டின்னர் ரெடியா உங்க வீட்டில?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா எப்படி இருக்கீங்க? பேசி ரொம்ப நாளாச்சு :)

எல்லாம் சரிதான் 100 அடிக்கு மேல கண்ணு தெரியலன்னு சொன்னீங்களே அது பனி மூட்டமா இருக்கும் போது மட்டும்தானா இல்லை எப்பவுமே அப்படித்தானா? அய்யோ இலா பூரிக்கட்டையை எடுக்கறதுக்குள்ள மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏப்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


என்ன காத்தால வந்தெள்! ஆரம்பிச்சேள்! பேட்டேளே!

நானும் காஃபியோட அங்க வந்து என் காதை காமிக்கனும் ஒங்ககிட்ட.

ஹி ஹி ஹி ஹி

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி நான் டிசம்பரில் ஊருக்கு வருகிறேன் கண்டிப்பா வர பார்கிறேன். வீட்டில் தங்கைகள் மற்றும் மாமா நலமா பட்டி மன்றத்தில் வாதங்கள் எல்லாம் படிச்சிட்டு வருகிறேன். பட்டியில் கலந்துகொள்ள ஆசை ஆனால் continuous ஆ time கிடைக்கா மாட்டேங்குது மாமி அதான் problem

கவிசிவா! இப்போ பனிமூட்டம் தான்... ஹ ஹ ஹ...இன்னும் பல வருசம் ஆகும் எப்பவுமே மங்கலா தெரிய.... சே சே.. நான் பூரிக்கட்டை வீசறது எல்லாம் தெரியாது... ஒன்லி டிசைன்.. மனசில நினைச்சு வீசணும்... யாரை அடிக்கணுமோ அவங்கள பாத்தா அடிச்சிட்டு சமத்தா நம்ம கைக்கு வரும் :))

மாமீ! ஒரு நாள் வாரன் உங்கட டால் டால் டாலடிக்கும் கம்மல் பாக்க...நான் யூஎஸ்ல இருக்கேன்.. உங்களுக்கு காலையில் எனக்கு இரவு... இந்திய நேரம் 8:00 AM என்றால் இங்க இரவு/மாலை (முதல் நாள்) : 9:30 PM
அது தான் வந்திட்டு ஓடிட்டேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இப்போதான் உங்க பதிவ பார்த்தேன். மன்னிக்கனும். என்னோட எழுத்துக்கள்ள யாரோட சாயல் இருக்குன்னு தெரியலயே? எல்லோருடைய நூல்களையும் படித்துள்ளேன் எனக்குள் இருக்கும் எழுத்தாளரின் சாயலை கொஞ்சம் சொல்லுங்களேன் திருத்திக் கொள்கிறேன் நான் நானாக இருக்க வேண்டும். ப்ளீஸ்...

அன்புடன்
THAVAM

மாமி இருக்கீங்களா

அன்புடன்
THAVAM

மாமி இருக்கீங்களா சித்தே வரேளா

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்