அரட்டை அரங்கம் 2010 பகுதி - 18

அரட்டை பாகம் 17.. அடேங்கப்பா.. அப்படி என்ன தான்ப்பா பேசினீங்க...
எல்லா விசயத்துக்கும் தனி இழை தொடங்க முடியாது.. இல்லை நல்லா போயிட்டு இருக்க இழைல "இன்னைக்கு என்ன மெனு" அப்படி கேட்டா அங்க சுவாரசியமா ஓட்டிட்டு இருக்கவங்க கொஞ்சம் சங்கடப்படலாம் இல்லையா.. அதனால தான் அட்மின் இப்படி ஒரு இழைய ஆரம்பிச்சார் பழைய/பழைய தளத்தில்....ஒரு ப‌ய‌னுள்ள‌ இழையை மொக்கை ( இது தான் வ‌ழ‌க்கும் மொழி அர‌ட்டைக்கு) இழையாக‌ ஆக்கிட‌ வேண்டாம்கிற‌ ந‌ல்லெண்ணம் தான்..

உண்மை உரைத்த பவித்ரா! இந்தா

உனக்கும் ஒரு ‘பன்னீர்’ சோடா!

பழசில்லை இது பகிற்வேன் நானே!

புதுசு கண்ணா புதுசுதானே!

கடைமை அழைக்குது என்னை இப்போது

கன்டின்யூ பன்னுங்கோ அரட்டைதனை எப்போதும்

மூன்று மணிக்கு மேலேதான்

வெளியே போறங்கோ சீதாம்மா

அதன் பிற்கு அரட்டையிலே

அடியேன்(ள்) பங்கும் இருக்கும் என்றேன்!

சென்று வருகிறென் விடை கொடுங்கோ.

செந்தமிழால் நானும் கேக்கறேங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


இமா!சீதா மாமி ! அப்பறம் ஜே மாமி!

வராதவாள்ளாம் வந்தா இந்தபக்கம்

கிள்ளி கிள்ளி கையே போச்சு போச்சு போச்சு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு பவித்ரா

பவித்ரா, தீர்ப்பு சொல்றப்போ அதை ஜஸ்டிஃபை பண்ணி சொல்ற விதம் நல்லாயிருக்கு.

ராதாஹரிக்கு அப்புறம் பட்டிமன்ற நடுவர் போஸ்ட் நீங்க எடுத்துக்குங்க. இது விளையாட்டுக்கு சொல்லலைப்பா, சின்சியரா சொல்றேன்.

பள பளா மல்கோவா மாமி, நமக்குள்ள சீனியர் ஜூனியர் எல்லாம் எதுக்கு, சரியா,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

தங்கள் சித்தம் என் பாக்கியம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு ஜெயந்தி மேடம்

நல்லா இருக்கீங்களா? மாட்டுப்பெண் சௌக்கியமா?

அம்மாவுக்கு இப்ப உடல்நலம் தேறியிருக்கா?

அன்னிக்கு ரிஷப்ஷன்ல திருப்பதிக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தது காதுல விழுந்தது. போய்ட்டு வந்துட்டீங்களா?

லீவ் முடிஞ்சு ஆஃபிஸ்க்கு வர ஆரம்பிச்சாச்சா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

என்ன அரட்டை மதியம் ஆனதும் மந்தம் ஆகிவிட்டது

hai

ரொம்ப நல்லா இருக்கோம்.
மாட்டுப்பெண், நான் ரெண்டு பேருமே 2ம் தேதி முதல் வேலைக்கு வரத் தொடங்கி விட்டோம்.
அம்மாவுக்கு பரவாயில்லை.
இன்னும் திருப்பதிக்குப் போகவில்லை. எனக்கு 2 வீட்டிலும் குலதெய்வம் திருப்பதி வெங்கடாசலபதி. விரைவில் போக வேண்டும்.
உங்க வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?

பட்டி மன்றத்துக்கு பதிவு போட முடியாம தடுமாறிட்டு இருக்கேன். ஒரு பக்கம் அடிச்சு வைச்சு இருக்கேன். நோட்பேட் அடிச்சு வைச்சு இருக்கேன். என்ன செய்றது நு கொஞ்சம் சொல்லுங்க. Please.

Don't Worry Be Happy.

எல்லாரும் ஜெயந்தி மாமி ஜெயந்தி மாமின்னு சொல்லுவாங்க, இப்பதான் பேச வாய்ப்பு கிடைச்சிருக்கு. நன்னா இருக்கீங்களா?

அன்புடன்
பவித்ரா

நான் இங்க பட்டிமன்றத்துக்காக போடறத என் சார்பா அங்க போட முடியுமா?

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்