பச்சை நெல்லிக்காய் ஊறுகாய்

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெல்லிக்காய் - ஒரு கிலோ
இஞ்சி - 2 மேசைக்கரண்டி (துருவியது)
மிளகாய் - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு


 

நெல்லிக்காய்களை ஒரு நாள் வெய்யிலில் காயவைக்கவும்.
பிறகு குழவியால் தட்டினால் சதை தனியாகவும் கொட்டை தனியாகவும் கழன்று விடும். இது போல எல்லா நெல்லிக்காய்களையும் கொட்டைகளை நீக்கி சதையை எடுக்கவும்.
பிறகு அவற்றை அம்மியில் வைத்து இடித்தெடுத்து ஒரு ஜாடியில் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு சுத்தமான காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை விட்டு, தேவையான உப்பும் சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும்.
தினமும் காலையிலும் மாலையிலும் ஜாடியைத் திறந்து, கரண்டியால் கலக்கி விடவும். இரண்டு மூன்று நாட்களில் நன்கு மசிந்து துவையல் போலாகி விடும்.
அப்போது இரண்டு மேசைக்கரண்டி துருவிய இஞ்சியும், இரண்டு மேசைக்கரண்டி மிகவும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்க்கவும்.
இரண்டு நாட்கள் மெல்லிய வெள்ளைத்துணியால் வேடு கட்டி வெயிலில் காய வைத்து பின்னர் இதனை உபயோகிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்