ஆல் பர்பஸ் பொடி

தேதி: August 11, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (20 votes)

 

கடுகு - 25 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
சீரகம் - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
வெள்ளை எள் - 50 கிராம்
மிளகு தூள் - 50 கிராம்
கறிவேப்பிலை - 4 கொத்து (காய்ந்தது)
தனியா - 50 கிராம்
பெருங்காயம் - 15 கிராம்


 

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கல் தூசி பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் வெறும் வாணலியில் போட்டு தீயை மிதமாக வைத்து வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் பெருங்காயம் சேர்த்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும். இந்த பொடியை குழம்பு, கூட்டு, கலந்த சாதம், சாம்பார் ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்தலாம் வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments


ஹையா! நாந்தான் மொதல்ல!

நாளைக்கே பொடி செஞ்சு பாதுடுவேனே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிதா,
மாமி முந்திகிட்டாங்க. பரவாயில்லை, நம்ம மாமி தானே. உங்க பொடி ஐடியா நல்லாயிருக்கு. வெறும் குழம்பு மிளகாய் பொடிக்கு பதில் இது, வித்தியாசமா இருக்கு.செய்து பார்த்துட்டு சொல்றேன். மேலும் குறிப்புகள் கொடுத்து அசத்துங்க. வாழ்த்துக்கள்.

உங்க குறிப்பு பாத்ததுமே வீட்டில் தேவையான பொருட்கள் இருக்கான்னுதான்
பார்த்தேன் லக்கிலி எல்லாமே இருந்தது. உடனே வறுத்து பொடிச்சாச்சு.
அடுத்து பண்ணிய தட்டை பயறு குழம்பிலும் போடரதுக்கு சவுரியமா இருந்தது.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மாமி,
நலமா?
ரொம்ப சந்தோஷம்
கண்டிப்பாக திரித்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பிநூடதிற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி ,
நலமா? நீங்க எங்கே இருக்கீங்க?
உங்க பின்னூட்டம் கண்டு ரொம்ப சந்தோஷம்
கண்டிப்பாக திரித்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கோமு மேடம் ,
நலமா? நீங்க எங்கே இருக்கீங்க?
கண்டிப்பாக திரித்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
நான் நலம். நலம் விசாரித்ததற்கு நன்றி. நீங்க நலமா? உங்க குட்டி பொண்ணு எப்படி இருக்கா? நான் நியூஜெர்சியில் இருக்கிறேன். நீங்க ?

அன்பரசி,
மகள் நல்ல இருக்காங்க
நீங்க கிழக்கில் இருக்கீங்க
நான் மேற்கில் கலிபோர்னியாவில் இருக்கேன்

என்றும் அன்புடன்,
கவிதா

ஓ அப்படியா,
கிழக்கும் மேற்கும் அறுசுவையில் சங்கமம்னு சொல்லுங்க.

இன்னும் செஞ்சு பார்கவில்லை..நாளை செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்..ஆனா உங்க குறிப்புக்கள் எல்லாம் அசத்தலா இருக்கு..வாழ்த்துகள்

umarani

உமா மேடம் ,
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பர் திறமைசாலி தான் நீங்கள்

எனக்கு ஸ்வீட் சோம்பு செய்றது எப்படினு சொல்லிக்குடுங்களேன்

NOODLES MASALA PODI EPDI VEEDLAYE THAYARIKARATHUNU SOLLUNKALEN?

noodles masala powder eppadi veetuleye seyyarathunu sollungalen?