கோதுமை ரவை சாம்பார் சாதம்

தேதி: August 11, 2010

பரிமாறும் அளவு: 2பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை ரவை- 1கப்
துவரம் பருப்பு- 1/2கப்
சின்ன வெங்காயம்-7
கத்திரிக்காய்-1
தக்காளி-1
கேரட்- 1/2
முருங்கைக்காய்-1/2
சௌசௌ-1/2
பச்சை மிளகாய்-1
கறிவேப்பிலை-1இனுக்கு
சாம்பார் பொடி-3தேக்கரண்டி
பெருங்காய பொடி-1/2தேக்கரண்டி
புளி-சிறு நெல்லிக்காய் அளவு
மல்லிக்கீரை- 1மேசைக்கரண்டி
உப்பு-தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய்-1மேசைக்கரண்டி
கடுகு- 1/2தேக்கரண்டி
சீரகம்1/2தேக்கரண்டி
வெந்தயம்-1/4தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-1
கறிவேப்பிலை-1இனுக்கு


 

துவரம்பருப்பை கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும்.
ரவையை தண்ணீரில் களைந்து அதனுடன் வெட்டிய காய்கள் வெங்காயம் கறிவேப்பிலை சாம்பார்பொடி, பெருங்காய பொடி சேர்க்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
வேக வைத்த பருப்பையும் சேர்த்து மேலும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும்.(பருப்பு வேக வைத்த நீர் இருந்தால் அதையே சேர்க்கவும்)
உப்பு சேர்த்து உப்பு புளி காரம் சரிபார்க்கவும்
குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.
பிரஷர் அடங்கியதும் திறந்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
மல்லிக்கீரை சேர்த்து கிளறி தேவைப்பட்டால் மேலே அரைத்தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
சூடாக பரிமாறவும்


சற்று தளர்வாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். குக்கரை திறந்த பின் தண்ணீர் அதிகம் போல் தோன்றினால் தாளித்ததும் அதே வாணலியில் இட்டு சற்று கிளறினால் இறுகி விடும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு கவிசிவா,

கோதுமை ரவைல உப்புமா செய்யறப்போ, சாதா ரவைக்கு சேர்க்கறதை விட கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்க்கறதுண்டு. சாம்பார் சாதத்துக்கு, 1:2 அளவு தண்ணீர் போதுமா? அதே போல, கோதுமை ரவை வறுக்கணுமா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா சாரிம்மா. நான் இப்பதான் உங்க பின்னூட்டத்தை பார்த்தேன். குக்கரில் வைப்பதால் இந்த அளவு தண்ணீர் சரியா இருந்ததும்மா. நான் ரவையை வறுக்கவில்லை. நன்கு குழைவாக கொஞ்சம் சேர்ந்தார்போல் இருந்தால்தான் எனக்கு சாம்பார் சாதம் பிடிக்கும். இங்கு கிடைக்கும் கோதுமை ரவை ஊரில் கிடைப்பதை விட பொடியாக இருந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கோதுமை ரவை தயிர்சாதம் போலவே , இந்த சாம்பார் சாதமும்
நல்ல வந்தது. த்யிர் சாதத்துக்கு ரவையை வறூக்க வேண்டாம்
சாம்பார் சாதம் பண்ணும் போது லேசாக வறுத்து தான் பண்ணினேன்.
அப்போ உதிர், உதிரா வந்தது. குறிப்புக்கு நன்றி.

கோமு சாரிப்பா. இப்பதான் உங்க பின்னூட்டமும் பார்த்தேன். சீதாம்மாக்கு பதில் சொன்னதுக்கு நன்றிப்பா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!