பிரி கிச்சடி

தேதி: August 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

பிரி என்றால் ஒரிய மொழியில் பாசிபருப்பு என்று பொருள்.

 

பாசிபருப்பு - அரை கப்
பீன்ஸ், காரட், பட்டாணி கலவை - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும்.
பின்பு குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்
அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு காய் கலவை சேர்த்து லேசாக வதக்கவும். அதன் பிறகு பாசிபருப்பு சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தண்ணீர் கொதிக்கும் போது உப்பு, அரிசி சேர்க்கவும்.
கொதி நன்கு வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்
சுவையான பிரிகிச்சடி ரெடி. தயிர் பச்சடி, தர்காரீ, டல்மா, கிரேவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். அனைவரும் சாப்பிட கூடியது மிகவும் சத்தானது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா உங்க பிரி கிச்சடி பர்க்கவே அழகா இருக்கு, எப்படி உங்களால மட்டும் விதவிதமான சமையல் செய்யமுடியுது நிறைய குறிப்புகள் கைவசம் வச்சிருகீங்க உங்க வீட்டுக்கு வந்தா வேரைட்டியான சாப்பாடு நிச்சையாம் கண்டிப்பா செய்துபார்த்துட வேண்டியாதுதான், ஒரு சந்தேகம் எனக்கு இங்க பாக்கிஸ்தான் பாஸ்மதி அரிசி கிடைக்கிது ஆனா நீங்க பன்றமாதிரி உதிர் உதிரா வரமாடுங்குது நான் எப்போழுதும் தம்மில்தான் போடுவேன் குக்கர் மிகவும் சின்னது அதான். வாழ்த்துக்கள் கவிதா.

அன்புடன்
நித்யா


இப்போவே சாப்புடனும் போலிருக்கே! இங்கே வரைக்கும்

மணக்கறது போங்கோ.

’பிரி கிச்சடி’யை

பிரியமாய்

தந்த கவிதாவுக்கு

நானும் FREEயாய்

தருவேன் பாராட்டு.!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உங்க குறிப்புகள் எல்லாமே மிகவும் வித்தியாசமா இருக்கு போங்க, மாமி சொன்ன மாதிரி இப்பவே சாப்பிடணும் போல இருக்கு, கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

அன்புடன்
பவித்ரா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல சத்தான ரெசிப்பி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நித்யா மேடம்,
கண்டிப்பாக வாங்க
எந்த பாஸ்மதி அரிசி வாங்கினாலும் தண்ணீர் அளவு எவ்வளவுன்னு பாருங்க
அப்புறம் குக்கர் வெயிட் போட்டதும் 7 நிமிஷம் வச்சிட்டு அடுப்பை அணைத்து விடுங்க அந்த சூடில் இருந்தாலே போதும்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மாமி ,
நலமா?
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவித்ரா மேடம் ,
நலமா?
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா மேடம் ,
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மேடம்ன்னு சொன்னா நான் உங்கக்கூட டூக்கா போங்க, பேசமாட்டேன்.

அன்புடன்
பவித்ரா

ஒரிய சமையல் குறிப்பாகப் போட்டுக் கலக்குறீர்கள்.. ;) எல்லாமே பிடித்திருக்கிறது. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

Imma,
எப்பவுமே ரெம்ப சுருக்குமா பேசுறீங்களே ஏன்?
-ஆஷிக்

இமா மேடம்,
எனக்கு ஒரு ஒரிய தோழி இருந்தாங்க ...
அவங்க கொண்டுவரும் உணவு எல்லாம் taste செய்து சமைக்க தெரிந்து கொண்டேன்
உங்க வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அக்கா, சூப்பர் போங்க, பார்க்கும் போதே நாக்கில் நீர் ஊற்றுகிறது... இப்பவே செய்து பின்னோட்டம் அனுப்புறேன்.

நன்றி
வரலக்ஷ்மி

True Love Never Fails.

லக்னோவில் பார்ட்டிகளில் இதை தான் வைக்கிறார்கள். அருமையா இருக்கும். குறிப்புக்கு நன்றி கவிதா!

செய்து பார்த்துட்டு சொல்றேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பிரி கிச்சடி ரொம்ப நல்லா இருக்கு.

வரலக்ஷ்மி,
என்னை அக்காவாக ஏற்று கொண்டதற்கு மிக்க நன்றி
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அப்படியா மேடம்,இந்த கிச்சடியை சொல்லி கொடுத்த என் தோழி குவஹாதியை சேர்ந்தவங்க
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

செய்து பார்த்துவிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா நலமா? நல்ல நல்ல குறிப்பா கொடுத்துட்டு இருக்கீங்க. எனக்கு உங்களுடைய எல்லாம் சமையலும் (குறிப்பாக ஒரிய சமையல்) பிடித்திருக்கிறது. நாளைக்கு இந்த பிரி கிச்சடிய செஞ்சு பார்த்துட்டு வந்து சொல்வேன்.

ஹாய் கவிதா நல்ல அருமையான குறிப்பு பார்க்கும் போதே சாப்ட தோணுதுபா இதை மீன் குழம்புடன் சாபிட நல்லா இருக்குமா

கவிதா... முகப்பில் எல்லாம் உங்க குறிப்பா இருக்கா... எனக்கு எதுக்கு பின்னூட்டம் தர, எதை விடன்னு ஒரே குழப்பம். ;) அதான் மொத்தமா இங்கயே கொடுக்கிறேன்... எல்லாமே சுப்பரான வித்தியாசமான குறிப்புகள். விரைவில் இந்த கிச்சடி செய்துட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா மேடம்,
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

nasreen
செம combination
அசத்துங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா மேடம்,
நலமா?
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவி உங்க பிரி கிச்சடி செய்தாச்சு சூப்பர்பா நான் சிக்கன் குழம்பு செய்தேன் என் கணவர் ஆம்லட் இருந்தால் நல்லா இருக்கும் சொன்னாங்க அப்புறம் ஆம்லட் செய்தேன் அதனுடன் சாபிடவும் ரொம்ப நல்லா இருந்தது எதுவுமே இல்லாம சபிடவும் ரொம்ப நல்லா இருந்தது குறிப்புக்கு மிக்க நன்றி மேலும் பல குறிப்பு கொடுத்து அசத்துங்க

அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துடேன் என்ன மேடம் சொல்லாமல் நஸ்ரின்நு சொல்லி இருக்கீங்க இப்பதான் சந்தோசமா இருக்கு

கவிதா

உங்க குறிப்பு பாக்கவே ரொம்ப அழகா இருக்கு... ஒரு நாள் ட்ரை பண்ணிர வேண்டியது தான்

பாஸ்மதி அரிசி உதிரி உதிரி யாக வர..... தேவையான அளவு தண்ணீா் மற்றும் பாஸ்மதி அரிச சேர்த்த பிறகு நன்கு கொதித்ததும் தண்ணீா் வற்றி சிறிதளவு மட்டுமே இருக்கும் போது குக்கரை முடினால் அடுப்பை குறைவாக வைத்து 5 நிமிடம் கழித்து அணைத்துவிடலாம் நித்யா.... சாதம் உதிரி உதிரியாக வரும்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நஸ்ரின் ,
நல்லா இருந்ததா?
மிகவும் மகிழ்ச்சி....
செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தந்ததற்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ராதா மேடம் ,
கண்டிப்பாக செய்து பாருங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இன்னிக்கு பிரி கிச்சடிதான், காலைலயும் அத தான் சாப்பிட்டேன், மதியமும் அதுதான் கவிதா. அதிகபட்சமா நான் உங்க குறிப்பு பார்த்துதான் சமைக்கிறேன் போல.

அன்புடன்
பவித்ரா

பவி,
செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் தந்தற்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Wow! Very nice! I got appreciation for making this piri kitchadi. But I tried this in the electric rice cooker. Perfect. Thank you mam

பிருந்தா மேடம்,

நல்லா இருந்ததா?

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

Rompa nalla irukuthu iniku try pannitu sollren...

ZajneeMufeetha