கோதுமை ரவை தயிர்சாதம்

தேதி: August 12, 2010

பரிமாறும் அளவு: 3பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை ரவை- 1கப்
தயிர்- 1/4கப்
பால்-1/4கப்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1மேசைக்கரண்டி
இஞ்சி-1/2இன்ச் துண்டு(பொடியாக வெட்டியது)
பச்சைமிளகாய்-1(பொடியாக வெட்டியது)
கடுகு- 1தேக்கரண்டி
உளுந்து- 1மேசைக்கரண்டி
பெருங்காயப் பொடி- 1/2தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1இனுக்கு
மல்லிக்கீரை- 1மேசைக்கரண்டி


 

கோதுமை ரவையை சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து குக்கரில் 4விசில் வேக வைக்கவும்
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேக வைத்த ரவையை சேர்க்கவும். ஒரு முறை கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
தயிரும் காய்ச்சி ஆறிய பாலும் தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து கிளறி பரிமாறவும்.


தயிரின் புளிப்புக்கேற்ப அளவை கூட்டவோகுறைக்கவோ செய்யவும். காலையில் செய்து மதியம் லஞ்சுக்கு எடுத்து செல்வதாக இருந்தால் அரை கப் பாலும் 1தேக்கரண்டி தயிரும் சேர்த்து கிளறவும். சாப்பிடும் போது சரியான அளவில் புளித்திருக்கும். சற்று தளர்வாக கிள்றினால்தான் ஆறும் போது சரியாக இருக்கும். இல்லையென்றால் கெட்டியாகிவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நாங்க வட நாட்டில் வசிப்ப்தால் அரிசியை விட கோதுமை மாவு, கோதுமை
ரவைதான் நிரைய யூஸ்பண்ணுவோம்.இதை லாப்ஸி என்போம். இந்த ரெசிப்பி
எனக்கு மிக வும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

நன்றி கோமு. ஒக்கே இனிமே நானும் இதை செய்து எல்லாருக்கும் லப்சின்னு சொல்லி கொடுத்துடறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!