பீர்க்கங்காய் கூட்டு

தேதி: August 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

பீர்க்கங்காய் - 200 கிராம்
பச்சை பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 3 தேக்கரண்டி
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெண்ணெய் - தாளிக்க


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் பச்சை பருப்பு, மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம், நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கவும்
வாணலியில் வெண்ணெயை போட்டு உருக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
தாளித்தவற்றை பருப்பு கலவையுடன் சேர்க்கவும். அதனுடன் உப்பு, ஆல் பர்பஸ் பொடி, தேங்காய் தூவவும்.
ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்

வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம். புலாவ்,தோசை, சப்பாத்தி, நாண், ஊத்தப்பம் ஆகியவற்றுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பீர்க்கங்கய் கூட்டு பக்கவே நல்லா இருக்கு. இனிமேதான் செய்து பாக்கனும். குறிப்புல பீர்க்கங்காய்னு சொல்ரதுக்கு பதிலா பரங்கிக்காய்னு சொல்லிட்டீங்க.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கோமு மேடம்
மன்னிக்கவும்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பீர்கங்காய் கூட்டு சூப்பர் நான் இந்த காயை வைத்து பொரித்த குழம்பு மட்டும்தான் பனுவேன் இப்ப இதுவும் தெரியும் உங்கள் குறிப்புக்கு நன்றி கவிதா, எப்படி அருமையான குறிப்பு நிறைய கைவசம் வச்சிருகீங்க என் கணவர் நான் ஒரு குறிப்பு அனுபினத்துக்கே என்ன பாரட்டி தள்ளிட்டார், அங்க எப்படி?

அன்புடன்
நித்யா

நித்யா மேடம்,

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

hai,

Thank you for giving a tasteful recipe. But I have one doubt.

What is meant by "ALL PURPUSE PODI". How can us make it. Please tell in detail.

Thank you,

Sudha