அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

//Aratai aranga makalai, valthukal , ellorum asthuringa ponga, thodratum ungal aratai//.

ஆரடை அரங மகலை, வல்துகல் , எல்லொரும் அச்துரிங பொங, தொட்ரடும் உஙல் அரடை.

நாங்க இப்படி தான் இதை படிக்க முடிகிறது.

நீங்கள் சொல்வது புரிந்தாலும் அதை நிறைய பேர் தவறாக படிக்கலாம் இல்லையா?

தமிழில் எழுதுங்க ப்ளீஸ்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வரவா எல்லாரும் வாழ்த்திட்டு காணாம பேடறேளே!

இங்க வந்து நேக்கு சம்மமா அரட்டை போடனும்

இல்லேனா நான் அழறாமாறி போட்டோ எடுத்து ஒங்களுக்கு அனுப்பிடுவென்!

ஆமா!

என் போட்டோவை பாத்து பயந்த 2 பேர் அறுசுவைல இருக்கா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


//மாமி...
நோகாமல் நொங்கு திங்குறதுங்கிறது
இதானோ?//

ஆமா நேக்கு கவிஞர் ஷேக் மாறி கவிதை எல்லாம் எழுத வராது.

அதான் வாலி சார் பாட்டை (ஒலியா) (ஒளியா) பரப்பினேன்!

சுதந்திரம் கெடச்சு என்ன ப்ரயோசனம்.

சுதந்தரமா ஒரு பாட்டை (ஒலியா) (ஒளியா) பரப்ப முடியல்லை.

ஒடனே நோகாமல் எடுத்த நொங்குக்கு பங்கு கேட்டுண்டு வந்துடரா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எப்பவுமே அரட்டை அரங்கம் ஓபன் பண்ணா சிரிச்சுட்டே இருப்பேன்.

இதை என் கணவர் கவனிச்சுட்டே இருந்தார்.

இன்னைக்கு மாமிவோட சுதந்திர தாகத்தை பார்த்து நான் சிரிச்சது பார்த்து பொறுக்க முடியாம என்னன்னு பார்த்து அவரே சிருச்சுட்டார்.

ஸ்பெஷலா ஆஷிக் சுவாரியா பார்த்து சொன்ன மேட்டர் “கொலை பட்னியா போகுது”

இதுல என்ன சேதினா?

இதுவரைக்கும் என்னைய பைத்திமா நெனச்சு என்னமோ ஆயிடுச்சுன்னு மனசுக்குள்ள பொழம்பிருக்கார்!

இப்ப அவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டார்!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மாமி உங்க பதில பாத்து சிரிச்சுட்டேன்

மாமி ஹாஹா

//நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்...//

இது ரம்யாவுக்கு மட்டும் இல்லை நேக்கும் ரொம்ப புடிக்கும்

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!

சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டேருங்க!

ஹஹஹாஆஆஆ ஹிஹிஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.

ஹுஹுஹூஊஊஊஊஊஊஊஊஊஊஊ.....................................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Zuviria!,
பரவா இல்லையே அதுக்குள்ளேயும் தமிழ்ல சிரிச்சிட்டீங்களே,
வாழ்க உங்கள் தமிழ் சிரிப்பு
-ஆஷிக்


சமத்தா எப்படி தமிழ்ல சிரிக்கறெள்!

நேக்கு ஒங்களை நெனச்சா பெருமையாயிருக்கு!

(என் போட்டவை பாத்து பயப்படரதுக்கு யாரும் தயாரால்லைனு

இப்போ தெரிஞ்சு போச்சு)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, கருத்துகள் கலக்கல்

மேலும் சில பதிவுகள்