மெகந்தி டிசைன் - மெகந்தி - அறுசுவை கைவினை


மெகந்தி டிசைன்

திருமதி. அனுஷா
Sat, 14/08/2010 - 16:29
Difficulty level : Easy
3.5625
16 votes
Your rating: None

 

  • சாட் பேப்பர்
  • கருப்புநிற ஸ்கெட்ச் பென்

 

படத்தில் உள்ளது போல் கையின் வடிவத்தை கருப்பு நிற கெட்ச் பேனாவால் சாட் பேப்பரில் வரைந்துக் கொள்ளவும்.

மணிக்கட்டுக்கு கீழுள்ள பகுதியில் சற்று தள்ளி "V" வடிவில் இரட்டை கோடுகள் வரைந்துக் கொள்ளவும். அந்த "V" வடிவ கூர்ய முனையின் கீழ் சிறிய வட்டம் வரைந்து அதனுள் சின்ன சின்ன கட்டங்கள் வரைந்துக் கொள்ளவும். வரைந்த வட்டத்திற்கு மேல் சிறிது இடைவெளி விட்டு மற்றொரு வட்டம் வரையவும். இப்போது இந்த வட்டத்தை சுற்றி 5 இதழ்கள் வருவது போல் வரைந்து கொள்ளவும். கடைசி இரண்டு இதழ்களில் ஓரத்தில் படத்தில் உள்ளது போல் வளைவுவாக வரைந்து உள்ளே கட்டங்கள் வரையவும். நடு இதழ்களின் மேல் சிறிய இலை போல் வரைந்து ஓரங்களில் சற்று தள்ளி முத்துக்கள் போல் வரைந்துக் கொள்ளவும்.

"V" வடிவத்தின் ஏதாவது ஒரு முனையில் அரைவட்டம் வரைந்து அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளவும். சிறிது இடைவெளி விட்டு மூன்று வளைவுகள் வரையவும். அதன் மேல் மூன்று இதழ்கள் வரையவும். இதழ்களுக்கு மேல் சற்று தள்ளி நான்கு வளைவுகள் வரையவும். நான்காவது வளைவு "V" வடிவத்தின் கூர்மையான முனையில் நடுவில் முடிய வேண்டும். முதல் கட்ட வளைவை விட்டு விட்டு மற்ற இரண்டு வளைவுகளிலும் உள்ளேயும் சின்ன சின்ன கட்டங்கள் வரையவும். நான்காவது வளைவின் நடுவிலிருந்து ஒரு வளைவு ஆரம்பித்து அதற்கு நேர் எதிரே உள்ள கோட்டில் முடிக்கவும். அதன் உள்ளே முன்பு வரைந்த அதே டிசைனை இதில் வரைந்துக் கொள்ளவும். முதலில் வரைந்த இரண்டு டிசைனையும் சேர்த்தாற் போல் அதற்கு மேலே ஒரு வளைவு வரைந்து இந்த டிசைனை வரைந்து கொள்ளவும்.

இதுப்போல் வரைந்த ஒவ்வொரு டிசைனுக்கு எதிர் எதிர் புறமாக இந்த டிசைனை வரைந்து கொண்டு வரவும். உள்ளங்கை முழுவதும் இதே டிசைன் தான் வரும். வளைவுகளை சிறியது, பெரியதுமாக வரையவும். வளைவுகளின் அளவை பொருத்து, அதன் உள்ளே இதழ்களை வரைந்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு விரல்களின் நுனியிலும் குறுக்கே கோடு வரைந்து அந்த இடத்தை நிரப்பி கொள்ளவும். விரல்களுக்கும் அதே டிசைனை வரைந்து முடிக்கவும்.

இந்த மெகந்தி டிசைன் ஒரு சின்ன டிசைனை மையாக வைத்து கைமுழுவதும் வரைய கூடியவை. கையில் போட்டு கொள்வதற்கு மிகவும் எளிமையான டிசைன். பார்ப்பதற்கு க்ராண்டாகவும் இருக்கும். இந்த மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வரைந்து காட்டியவர் திருமதி. அனுஷா அவர்கள்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..அனுஷா

அனுஷா

பார்ப்பதற்கு மிக அழகாக நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அனுசா

அழகு.... சொன்னபடி கிரேண்ட்டா இருக்கு!

இது போல் இன்னும் அதிக குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அனுஷா

அனுஷா... கலக்கிட்டீங்க!!! ரொம்ப சுலபமா போடக்கூடிய சூப்பரான டிசைன். :) நான் போட்டு அனுப்பிடறேன்.... வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெகந்தி டிசையின்.

அமினா நன்றாக இருக்கின்றது உங்கள் மெகந்தி டிசையின். மிகவும் கஷ்டப்படாமல் சுலபமாக போடக்குடியதாக இருக்கின்றது.

எனக்கும் போட்டுக்கொள்ள ஆசைதான். ஆனால் என்ன ஒரு கவலை இதை போட்டுக்கொண்டால் லீவு போட்டு விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான். வேலைக்கு போனால் கையைபார்த்து விட்டு பாம்பு என்று சொல்லி ஓடி விடுவார்கள்.ஹி ஹி ஹி ...................

சும்மா பகிடிதான் தப்பாய் நினைக்காதீங்க.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி

யோகராணி

மெஹந்தி டிசைன் செய்தது நான் இல்ல. அனுஷா!

அப்பறம் என்னைய வந்து அடிச்சுற போறாங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மெஹந்தி டிசைன்

அழகாக வரைந்து காட்டி இருக்கிறீர்கள் அனுஷா.

‍- இமா க்றிஸ்

அனுஷா

அழகா இருக்கு,

வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

அனுஷா.

மெஹந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கும்மா. வாழ்த்துக்கள்.

அனுஷா.

மெஹந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கும்மா. வாழ்த்துக்கள்.