பெண் குழந்தை பெயர்

ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....

என் husband தான் இந்த பெயரை தேர்வு செய்தது.fullmoon ல அவ பொறந்தனல நிலான்னு வைச்சாரு

ஆமாம் இப்பலாம் யாரு கூப்பிடறதுக்காக பெயர் வைக்கிறாங்க, ஸ்டைலிஷா இருக்கான்னு தான் பாக்குறாங்க. அப்படி இல்லையா நியூமராலகிப்படி தான் வைக்கிறாங்க. சொல்ல போனா தமிழ் பெயர்களே வைக்கிறது இல்ல.

ஜெயலெஷ்மி உங்க பொண்ணு பேரு சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு சஹானா.

மஹா ஆஹா எவ்வளவு நாள் கழிச்சு இப்படி தமிழ் பெயரா கேட்க நல்லா இருக்கு நிலா.

சின்மயி, ஆராதனா, ப்ரமோதிதா, திலோத்தமா இந்த பெயர்லாம் எனக்கு பிடிக்கும்,
ரம்யா. அதிலும் இந்த ஆராதனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பெயர்.

aiskka,avanthika,theetchanya,arunthathi(vanathai ponraval)

கரெக்ட் தான் ஆனந்தி நீங்க சொல்றது...கண்டிப்பா என் குழந்தைக்கு வாயில் நுழையாத பேரை வைக்க மாட்டேன் ..ஏன்னா என் கணவரின் வீட்டு மக்கள் அனைவரும் கிராமத்து ஆட்கள் ... அவங்களா ரொம்ப மார்டன் பெயரை குப்பிட முடியாது....
என்னக்கு தோழிகள் அனுப்பிய சில பெயர்கள் ரொம்ப பிடிச்சிருக்கு ... Let see...

Neenga madurai ya?????

மதுரம் என்ற பெயர் எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப பிடித்த பெயர் ...ஆனால் ரொம்ப பழைய காலத்து பெயர் என்று என் friends சொல்றாங்க...
உங்கள் கருத்து என்ன ????

என்கிட்ட கேட்டீங்களான்னு தெரியல ஆனா பதில் சொல்றேன் நானும். நல்லா இருக்கு சத்யா ஆனா மதுரம் இது பழைய பெயரா இருக்கு சத்யா அப்பறம் உங்க பொண்ணு பெரியவளா வளார்ந்து உங்ககிட்ட ஏன்மா எனக்கு இந்த பேரு வச்சனு கேட்க கூடாதுல. நான் நினைக்கிறேன் இந்த பேரு கலைவாணர் திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்களோட மனைவி பெயர்னு. உங்களுக்கும் உங்க கணவருக்கும் இது தான் இஷ்டம்னா அதுவே வச்சுடுங்க.

Saisha - pidichirukka, thayaar peyar. Sri stuti yil indha peyar varum.

Peyar natchathirapadi vaipanga....nan enakku kuzhandhai pirandha un peyar vakkarenu endha perumal kitta vendikitteno andha peyaraiye vachutten. Nan natchathira padi vakkalai.

ஆமாம் சத்யா..மதுரையே தான்..என் கசின் பிரதர் க்கு பொண்ணு பிறந்திருக்கு மூணு மாசம் முன்னாடி..i ல ஆரம்பிக்கிற மாதிரி பேரு வைக்கணும் சொல்லிட்டு இருந்தான்..எல்லோரும் ஐஸ்வரியா னு சலிச்சு போன பெயரயே சொன்னங்க..நான் இனியா,இலக்கியா..னு எடுத்து விட்டேன்..அண்ணி வீட்ல இருக்கிறவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆர்ம்பிச்ட்டாங்க..என்ன ஆனந்தி..ஒரு மாடர்ன் ஆ யோசிக்க முடிலயானு..ஆள விடுங்கட னு இருந்துட்டேன்..அவங்க நிறைய பேரு யோசிச்சு..யோசிச்சு...அவங்களுக்கே வாய்க்கு நுழையாமல்..பைனல்ஆ இனியாஸ்ரீ னு வட்சுட்டங்கலாம்..ஜெய லக்ஷ்மி உங்க பொண்ணு பேரு சஹானா நல்லா இருக்கு..

Madurai Always Rocks...

இனியா இந்த பேரு கூட நல்லா இருக்கே, நல்லது ஆனந்தி இதையும் நோட் செய்துகிறேன், எதுக்குனு பாக்குறீங்களா எனக்கு பெண் குழந்தை பிறந்தா வைக்குறதுக்கு தான். இலக்கியா இதுவும் நல்லா தான் இரூக்கு. பாருங்க ஆனந்தி நீங்க சொன்ன பேரு தான் கடைசில வச்சி இருக்காங்க. i ல சில பேரு தான் இருக்கு இல்ல

மேலும் சில பதிவுகள்