சேமியா கிச்சடி

தேதி: August 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.6 (5 votes)

 

சேமியா - 2 கப்
காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - 1/4 tsp
பட்டை, லவங்கம், சோம்பு, கருவேப்பிலை - தாளிப்பதற்கு
எண்ணெய் - 4 tsp
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க


 

சேமியாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசறி வறுத்து தனியே வைக்கவும்.
முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளி மற்றும் காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
மீதமுள்ள எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து பொரிய விடவும்.
பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா சேர்த்து மூடிவைத்து 8 நிமிடம் வேகவிடவும்.
இறக்கி முந்திரி மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா மேடம்,
நானும் இதே போல் தான் செய்வேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா மேடம் சேமியா கிச்சடி குறிப்பு அருமை செய்து பர்த்துவிட்டு பினுட்டம் அனுப்பறேன் மேலும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

கவிதா, நித்யா

உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி. செய்து பார்த்து பின்னூட்டம் கொடுக்கவும்.
மேடம் எல்லாம் வேண்டாம் சங்கோஜமாக இருக்கிறது.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சேமியா கிச்சடி நல்லா வந்தது. நல்ல குறிப்புக்கு பாராட்டுக்கள்.

உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. பாராட்டுக்கு வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

vegetable ah vega vaikanuma illa appadiyae sethukalama?pls reply

காய்கறிகளை பொடியாக நறுக்கி வதக்குவதால் வேக வைக்க தேவை இல்லை......
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

I came to know about this site a few days back.
Such a nice site and i had tried this Semiya Kichdi today.
It really tastes good..
Keep up the good work.