இஞ்சி குழம்பு - 2

தேதி: August 16, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

1. இஞ்சி - 50 கிராம்
2. மிளகாய் வற்றல் - 10
3. மல்லி தூள் - 7 தேக்கரண்டி
4. புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
5. கறிவேப்பிலை - 5 கொத்து
6. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
7. சின்ன வெங்காயம் - 20
8. பூண்டு - 1 முழுசு
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு
11. தக்காளி - 2
12. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
15. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
16. உளுந்து - 1/2 தேக்கரண்டி


 

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்.
பின் 3 கொத்து கறிவேப்பிலை போட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
கடைசியாக மல்லி தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
புளியை கரைத்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கவும்.
மிச்சம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா மேடம்,
நல்ல குறிப்பு
பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன் உங்க குறிப்பாத்தான் இருக்கும் என்று
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
இன்று மதியம் உங்க இஞ்சி குழம்பு தான்.ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.இஞ்சி எனக்கு அவ்வளவாக பிடிக்காது.ஆனால்,இஞ்சி,தேங்காய்,காய்ந்த மிளகாய் வதக்கி அரைத்து,செய்தது சுவை நன்றாக இருந்தது.விருப்பப் பட்டியலிலும் சேர்த்துட்டேன்.குறிப்புக்கு நன்றி.

ஹர்ஷா... இன்றே இந்த பின்னூட்டத்தை பார்க்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். உங்களுக்கு பிடித்திருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா