சீலா மீன் பொரியல்

தேதி: August 17, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீலா மீன் - கால் கிலோ
வெங்காயம் - 15 சிறியது
தக்காளி - 2
மசாலாதூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிப்புக்கு
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 1
மஞ்சள் தூள், உப்பு, மசாலாதூள் - சிறிது


 

முதலில் மீனில் உப்பு, மசாலாதூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊறவிடவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அத்துடன் கருவேப்பிலை,கொத்தமல்லி இலை சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சிறிது மஞ்சள் தூள்,உப்பு, சிறிது மசாலாதூள் சேர்த்து குழைய வதக்கவும்.

மற்றொரு வாணலியில் 3 மேசைகரண்டி எண்ணெய் ஊற்றி மீனை நன்கு பொரித்து எடுக்கவும்.

பின் வதக்கிய மசாலா கலவையில் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கவும்.


இந்த மீன் பொரியல் சாதம், பருப்பு குழம்பு உடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா மேடம்,
நல்ல புதுமையான குறிப்பு
சீலா மீனிற்கு ஆங்கிலத்தில் என்ன?
மற்ற மீனில் செய்யலாமா?
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க கருத்துக்கு நன்றி. சீலா மீனுக்கு ஆங்கில பெயர் Barracuda. மற்ற மீனில் நான் செய்தது இல்லை