கம கம ரசம்

தேதி: August 17, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

புளி - 1 எழுமிச்சை அளவு
மசாலாதூள் - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு, புளியை நன்கு சாறு எடுத்து அத்துடன் உப்பு,மஞ்சள் தூள் மசாலா தூள் கலந்து வைக்கவும்.
உரலில் இடிக்க தேவையானவை
சோம்பு - 2 தேக்கரண்டி
நச்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
பச்சைமிளகாய் - 1
பூண்டு தோலுடன் - 4 பல்
வெங்காயம் தோலுடன் - 2 சிறியது
தேங்காய் - 2 கீற்று

இவை அனைத்தையும் உரலில் போட்டு நன்கு தட்டி வைக்கவும்.
தாளிக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - சிறிது


 

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் இடித்தவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நல்ல ப்ரவுன் கலருக்கு வந்ததும் புளி கரைசலை ஊற்றி லேசாக கொதி வர ஆரம்பித்ததும் அடுப்பை அனைத்து விடவும். கம கம ரசம் தயார்


இந்த ரசம் பேருக்கு ஏற்றது போலவே கம கம என்று மட்டுமல்லாது மிகவும் சுவையாக இருக்கும். சாதம்,இடித்த மாசி,அப்பளம் கூட சாப்பிட்டால் சாப்பாடு அவ்வளவு ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கதீஜா மேடம்,
நல்ல புதுமையான குறிப்பு
தேங்காய் சேர்த்து ரசம்!!!!!!!!!!!!!
நச்சீரகம் என்றால் என்ன? சீரகம் தானா?
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க கருத்துக்கு நன்றி. சீரகம் தான். இந்த ரசம் தேங்காய் சேர்த்து செய்வதாலும் மேலும் இடித்தவற்றை வதக்கி செய்வதாலும் ரெம்ப டேஸ்டாக இருக்கும் ட்ரை செய்துட்டு சொல்லுங்க.

கதிஜா சிஸ்டர் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்!ரெசிபி நல்லாஇருக்கு ஒரு சந்தேகம்..மசாலாத்தூள் என்றால் என்ன/?மிளகாய் தூளா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக. உங்க கருத்துக்கு நன்றி. மிளகாய் தூள் தான்.

இந்த ரசம் சிறிது வித்யாசமான டேஸ்டில் இருக்கு. குறிப்புக்கு
வாழ்த்துக்கள்.

நன்றி கோமு மேடம். இப்பதான் இதை பார்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.

I like this rasam. super.....

hello kathija madam,i have one doubt, why we add onion with skin? any special? Thanks. i will try this rasam.

" Life is a Festival, Celebrate it "