வால்நட் தோசை

தேதி: August 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிபருப்பு - 2 கப்
அரிசி - 1 கைப்பிடி
வெந்தயம் - 1/4 tsp
வால்நட் - 15
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 3 பல்
சோம்பு - 1/2 tsp
தேங்காய் துருவல் - 3 tsp
கொதம்மல்லி இலை - கொஞ்சம்
தயிர் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு


 

பாசிபருப்பு அரிசி வெந்தயத்தை ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தயிர் மற்றும் உப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
உப்பு மற்றும் தயிர் சேர்த்து கரைத்து அரை மணி நேரம் கழித்து தோசையாக வார்த்தெடுக்கவும்.
புளி சட்டினியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா மேடம்,
நல்ல புதுமையான குறிப்பு
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!