பாலக் பருப்பு கடையல்

தேதி: August 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

பாலக் கீரை - 1 கட்டு
வேகவைத்த பாசிபருப்பு - 2 tsp
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1 (சிறியது)
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/2 tsp
பெருங்காயம் - சிறிது
வெங்காயம் வடகம் - கொஞ்சம்
எண்ணெய் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு


 

கீரையை நன்கு கழுவி 10 சின்ன வெங்காயம் தக்காளி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவைத்து ஆறவைத்து சீரகம் உப்பு மற்றும் பருப்பு சேர்த்து மிக்சியில் ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.
(சட்டியில் மத்தால் கடைந்தால் இன்னும் ருசியாக இருக்கும்)
மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு பெருங்காயம் காய்ந்த மிளகாய் வடகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து கீரையில் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா மேடம்,
இந்த கடைசல் தான் நாளைக்கு ...
நல்ல சத்தான குறிப்பு
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா. செய்து பார்த்து பின்னூட்டம் கொடுக்கவும்.
தயவு செய்து மேடம் வேண்டாமே......ரொம்ப சங்கோஜமா இருக்கு.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாலக் கீரை கடையல் கேட்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு. இன்றைய ஸ்பெஷல் இதுதான். இது போல நிறைய குறிப்புகள் தர வாழ்த்துகள்

kavi
Nice line from calender talk: Ennai alatchiyamaga kilithu eriyathe! Un latchiyathil oru nal kuraikirathu enbathai ninaivil vaithu kol

உங்கள் பாராட்டிற்கு நன்றி. செய்து பார்த்து பின்னூட்டம் கொடுக்கவும்.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பாலக் பருப்புக்கடைசல் ரொம்ப, ரொம்ப நனா வந்தது.
குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!