மஷ்ரூம் பாஸ்தா

தேதி: August 17, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஷ்ரூம் - 1 pkt
பாஸ்தா - 2 கப்
சுக்கினி - 1
பூண்டு - 2 பல்
மிளகு தூள் - 1 tsp
ஒரேகனோ - சிறிதளவு
பார்ஸ்லே - சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் - 3 tsp
உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்வதற்கு
பால் - 1/4 கப்
வெண்ணை - 1/4 கப்
கிரீம் - 1/4 கப்
பார்மிசான் சீஸ் - 3 tsp


 

பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 10-12 நிமிடம் வரை வேகவிடவும்.
மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை காத்தார வைக்கவும். ஒன்றோடோன்னு ஒட்டாமல் வரவேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெண்ணை போட்டு உருகியதும் கிரீம் சேர்த்து பாலை கொஞ்சம் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு சீஸ் சேர்த்து கிளறி கொண்டே கொஞ்சம் பால் சேர்க்கவும்.
பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 8 நிமிடம் கிளற வேண்டும்.
பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொரிய விடவும்.
பச்சை வாசம் நீங்கியவுடன் நீளமாக நறுக்கிய காளான் மற்றும் துண்டங்களாக நறுக்கிய சுக்கினி சேர்த்து வதக்கவும்.
காளானில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கிளறி சாஸை ஊற்றி 2 நிமிடம் மேலும் கிளறி மிளகு தூள் ஒரேகனோ மற்றும் பார்ஸ்லே சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
சுவையான பாஸ்தா ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா மேடம்,
இந்த மஸ்ரூம் பாஸ்தாவை நான் ஒரு நண்பர் வீட்டில் சாப்பிட்டேன் எப்படி செய்தீங்கன்னு கேட்க கொஞ்சம் தயக்கமா இருந்தது..இப்போ நீங்க சொல்லிடீங்க
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா செய்து பார்த்து பின்னூட்டம் கொடுங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!


’மஸ்ரூம் பாஸ்தா’ வுல நேக்கு சில சந்தேகம்!

''பாளை''னா என்ன?

‘சுக்கினி’ங்கறது அசைவமா?

’ஒரேகனோ மற்றும் பார்ஸ்லே’ இது எங்க கிடைக்கும்?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அது எழுத்து பிழை (பாளை) , திருத்திவிட்டேன். இதில் எதுவுமே அசைவம் இல்லை. சுக்கினி என்பது ஒரு வகையான காய். அது பார்க்க நம்ப வெள்ளரி போன்றே இருக்கும். ஒரேகனோ மற்றும் பார்ஸ்லே என்பது நம்ப கொதம்மல்லி புதினா போன்றது. சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும். பச்சையாக இல்லாமல் காய்ந்ததும் கிடைக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!


பேரை போலவே மஸ்ரூம் பாஸ்த்தாவும் லாவண்யமாருக்கு!

வாங்கி செஞ்சுட்டு சொல்றேன் .
THANK 'Q'

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...