தேங்காய்க் குழம்பு

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடியாக அரிந்த வெங்காயம் - அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி - 2 கப்
தேங்காய்த் துருவல் - 2 கப்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


 

ஒரு வாணலியில் நல்லெண்ணையை ஊற்றி சுட வைக்கவும். அது காய்ந்ததும் கடுகைப் போடவும்.
அது வெடித்ததும் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேங்காயை இஞ்சியுடன் நன்கு அரைக்கவும். அதை சிறிது தண்ணீருடனும், இதர தூள்களுடனும் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்