இஞ்சி குழம்பு

தேதி: August 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (9 votes)

 

இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 3 முழு சின்ன பூண்டு [பொடியாக நறுக்கவும்]
சின்ன வெங்காயம் - 15 - 20 [பொடியாக நறுக்கவும்]
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
தக்காளி - 2
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு [கரைத்து வைக்கவும்]
மிளகாய் வற்றல் - 12
மல்லி - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துண்டுகள் - ஒரு கைப்பிடி [அரைத்து பால் எடுத்து வைக்கவும்]
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி


 

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முதலில் இஞ்சியை போட்டு வதக்கி எடுக்கவும். அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் மற்றும் தனியாவை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
மீதம் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் திரண்டதும் எடுக்கவும்.

இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து செய்வதால் உடம்புக்கு மிகவும் நல்லது. விரும்பினால் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். அல்லது இஞ்சுடன் சேர்த்தும் அரைத்து ஊற்றலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா இஞ்சி குழம்பு வத்தல் குழம்பு நிறத்துக்கு நல்ல காரசாரமான குழம்பு மாதிரி இருக்கு. தேங்காய் சேர்க்காமா செஞ்சா இந்த குழம்பு எத்தன நாள் வரைக்கும் இருக்கும். பயணத்திற்கு எடுத்து செல்லாமா?

வனிதா மேடம்,
நல்லா இருக்கு:-)
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இஞ்சி குழம்பு பார்க்கவே ஜோரா இருக்கு. செய்து பாத்துட்டு சொல்ரேன்

பார்க்கும் போதே செய்ய தூண்டியது. உடனே செய்து விட்டேன். சுவை அபாரம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அட்மின்'கு மிக்க நன்றி :)

வினோஜா... மிக்க நன்றி. கொஞ்சம் காரமா தான் இருக்கும் ;) தேங்காய் சேர்க்காமல் செய்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும். கண்டிப்பா பயணத்துக்கு சரியா இருக்கும்.

கவிதா... மிக்க நன்றி :)

கோமு... மிக்க நன்றி... அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :)

லாவண்யா... மிக்க நன்றி... இத்தனை வேகமா செய்துட்டு பின்னூட்டம் கொடுத்து ரொம்ப குஷி ஆக்கிட்டீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க வீட்டில் இன்னிக்கு இந்த கொழம்பு தான் வச்சாங்க. இப்பதான் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்தேன், ரொம்ப நல்லா இருந்துச்சு. எல்லோருமே உங்களை வாழ்த்தினாங்க.

Thank you for this very good recipe.

இதுவும் கடந்து போகும்.

யோகலக்ஷ்மி.... மிக்க நன்றி. சீக்கிரமே செய்து பார்த்து பின்னூட்டம் தந்து குஷியாக்கிட்டீங்க ;) ரொம்ப நன்றி..

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hello super

ராதிகா... அறுசுவையை சொன்னீங்களா குறிப்பை சொன்னீங்களா? எதை சூப்பர்'னு சொல்லிருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hello madam nan arusuvaiku puthithu aanal nan ethai parthu niraya recepies seithu parthu ullen. ungaludayathum niraya seithu parthu ullen. ellame nandraga ullathu ethuvarai ethai parthum nan samayal seithathuillai arusuvaiparthuthan niraya katrukondu ullen. ungalukkum thanks. arusuvaiku remba thanks

ராதிகா யோகேந்தர்... தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். நீங்கள் அறுசுவையை பார்த்து பயன் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி :) எல்ல அபகுதியும் அறுசுவையில் பயனுள்ளதாகவே இருக்கும். நீங்களும் பங்கு பெருங்கள். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா