பூண்டு சாதம்

தேதி: August 18, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

பாஸ்மதி அரிசி - 2 கப்
பூண்டு - 20 பல் (பெரிய பல்லாக)
தேங்காய் பால் -2 கப்
தண்ணீர் -2 கப்
வெங்காயம் - 2
பொரித்த வெங்காயம் - தேவைப்பட்டால்
பச்சைமிளகாய் - 2
நெய் - 2 ஸ்பூன்
எண்ணைய் - தேவைக்குத் தகுந்தாற்போல்
இஞ்சி,பூண்டு விழுது - 3 ஸ்பூன்
முழு மிளகு -10
உப்பு -தேவைக்குத் தகுந்தாற்போல்
முந்திரி -10 துண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -3
பட்டை -1 துண்டு


 

வாணலியில் நெய் மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,முந்திரி,பச்சைமிளகாய் இட்டு முறிய விடவும்.

பின் நீளவாக்கில் வெட்டிய மிளகு,வெங்காயம் வதக்கவும். நன்கு வதங்கிய பின் பூடுகளை போடவும்.

பிறகு இஞ்சி,பூடு விழுது சேர்த்து கிளறவும்.

எண்ணெய் பிரிந்து வரும் பொழுது தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு அரிசியை கொட்டி உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும் மூடியின் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில் போடவும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பறிமாறும் போது பொரித்த வெங்காயத்தை மேலே தூவி பறிமாறலாம்.


குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு. குழந்தை பிறந்த உடன் இந்த சாதம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காரம் அதிகம் இல்லாத தாளிச்சா, வெங்காய ரெய்தா உடன் சேர்த்து பறிமாறலாம்.அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவும் கூட.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா இன்னும் படிக்கலை, ஆனா முதல் போடலாமேன்னு வந்துட்டேன், படிச்சுட்டு சொல்றேன்,

இப்போ படிச்சாச்சு,
நல்ல குறிப்பு, ட்ரை பண்ணிட்டு சொல்றேன், இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

வாழ்த்துக்களுக்கு நன்றி பவி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா மேடம்,
நல்ல குறிப்பு
மேலும்பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா. இப்படி நீங்க வந்து என்கரேஜ் பண்றது தான் என்னைய இன்னும் செய்ய தூண்டுது. வருகைக்கு மிக்க நன்றி!

செய்து பாருங்கள்.

ஆமினா மட்டும் போதும். மேடம் வேண்டாமே:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பூண்டு சாதத்திற்கு பாஸ்மதி ரைஸ்தான் டேஸ்ட் கொடுக்குமா.
சாதா ரைஸிலும் பண்ணலாமா?

சாதா அரிசியிலும் பண்ணலாம். பாஸ்மதி இல்லாத பல நேரங்களில் சாதா அரிசியில் தான் செய்வேன்.

ஆனால் பாஸ்மதியில் உள்ள வாசனை கிடைக்காது. டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசப்படும்.

குழம்பு ஊற்றினால் பாஸ்மதியில் செய்த சாதம் பிரியாணி சாப்பிடுவது போன்ற சுவை கிடைக்கும். ஆனால் சாதாவில் அவ்வாறு உணர முடியாது. மற்றபடி சாதா அரிசியில் செய்வது அருமையாக இருக்கும்.

செய்து பார்த்துட்டு உடனே சொல்லுங்க. காத்துட்டு இருப்பேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,

பூண்டு சாதம் நல்லா வித்தியாசமா இருக்கு. சீக்கிரம் எனக்கும் யூஸ் ஆகும். விருப்பப் பட்டியலில் சேர்த்துக்கிறேன். குறிப்புக்கு நன்றி.

கவிதை, கதை, இப்பொ சமையல் குறிப்பும் சூப்பர். சீக்கிரமா நீங்களும் செய்யலாமிலும் ஒரு குறிப்பை போடுங்க. நம்ம அறுசுவைல சகல கலா வல்லிகளோட லிஸ்ட் கூடிகிட்டே போகுது. வாழ்த்துக்கள்.

கோமு,

நீங்க எப்போ குறிப்பு அனுப்ப போறீங்க? உங்க கை மணத்தையும் எடுத்து விடுங்க.

//சீக்கிரம் எனக்கும் யூஸ் ஆகும்//
வாழ்த்துக்கள்!

சீக்கிரம் செய்துட்டு சொல்லுங்க! சீக்கிரமாகவே யாரும் சமைக்கலாமில் குறிப்பு கொடுத்துவிடுகிறேன் பா. தொடர் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.

//நம்ம அறுசுவைல சகல கலா வல்லிகளோட லிஸ்ட் கூடிகிட்டே போகுது//
உண்மை தான். ஆனா என்னால தான் வர முடியல. எல்லாம் அரைகுறையாச்சே :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பூண்டு சாதத்திற்கு பாஸ்மதி ரைஸ்தான் டேஸ்ட் கொடுக்குமா.
சாதா ரைஸிலும் பண்ணலாமா?

this site super


வாசனை ஊர தூக்கறது!

இருந்தாலும் ஆம்ஸ் கையால பண்ணி சாப்டா தனி டேஸ்டுதான்!

அதனால எனக்கு மட்டும் ஒரு பெரிய தூக்கு ( அதுக்கு மேல சாப்டா கண் பட்டுடும் அதான் ஹிஹிஹி...........) கொரியர் பண்ணிடுப்பா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உங்களுக்கு இல்லாத சாப்பாடா?

உடனே அனுப்புறேன் மாமி!

பெரிய தூக்கு என்ன பெரிய கேரியர் 10 அடுக்கு இருக்குமே அந்த கேரியர்ல கொரியர் பண்ணி அனுப்புறேன்!

வருகைக்கு நன்றி மாமி!

செய்து பாருங்க. ஆமிக்காக :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி பூண்டு சாதமும் நல்ல குறிப்பு இதையும் செய்துபார்திட வேண்டியதுதான் செய்துவிட்டு பின்னுட்டம் அனுப்பறேன், கொஞ்சம் எழுத்துப்பிழை உள்ளது சரி பாருங்க ஆமி விளக்கப்பட குறிப்புக்கு காத்துகொண்டிருகின்றோம் ரம்ஜானுக்கு செய்யும் புதுமையான சமையல் எதவது இருந்தால் கண்டிப்பா கொடுங்க தொடர்ந்து நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள் ஆமி....

அன்புடன்
நித்யா

செய்து பார்த்துட்டு கண்டிப்பா மறக்காம சொல்லிடுங்க நித்யா, அதுகாக காத்திட்டுருப்பேன். சீக்கிரமா விளக்கபட குறிப்புகள் அனுப்ப முயற்சி செய்கிறேன் நித்யா.

இந்த குறிப்பு தான் நான் முதன்முதலில் எழுதியதால் பதற்றத்தில் எழுத்துபிழைகள் வந்துவிட்டது. சுட்டிகாட்டியதற்கு நன்றி. கண்டிப்பாக இனி வரும் குறிப்புகளை சரிபார்த்து அனுப்புகிறேன் நித்யா.

தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வந்ததும் முதல் பதிவு ஆமினாகிட்ட தொடங்கியிருக்கீங்க!

அறுசுவையின் சார்பில் உங்களை அன்புடன் அழைக்கிறேன். நல்ல பயனுள்ள தகவல்கள்,படைப்புகள் தந்து அறுசுவையை மேலும் மேலும் முன்னேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க சொன்னது சரிதான். சாதா அரிசில செய்தா ருசில கொஞ்சம்
காம்ரமைஸ் பண்ணிக்க வேண்டிதான் இருக்கு. இந்தபக்கம் பொன்னி
அரிசியோ மத்த நல்ல வெரைட்டி அரிசியோ கிடைக்காது. ஒர்கிலோ
45 ரூபா கொடுத்தா தான் நல்ல பச்சை அரிசி கிடைக்கும். அதில்
தான் செய்தேன். என்ன இருந்தாலும் பாஸ்மதிக்குன்னே ஒரு தனி வாசனை உண்டுதான். இதுவும் ஓ. கே. தான் நாட் பேட்.

செய்தாச்சா?:)

இந்த ஊர்லையும் முதலில் கச்சா சாவல் தான் இருந்தது கோமு!

அதுல சமைக்கவே தெரியல. தண்ணி கூட ஊத்துனா கொளஞ்சுடும். கம்மியா ஊத்துனா கல்லு மாறி இருக்கும். பச்சரிசி சாப்பிடுவதும் ஒத்துகல. புழுங்கல் அரிசி கிலோ 35 க்கு மேல வங்கனா தான் நல்லா இருக்கும். அதுவும் சமயத்துக்கு கிடைக்காது. என் தம்பி சென்னையில் இருந்து ஒரு மூட்டை புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பான் கார்கோவில். அதுனால இப்போ நம்ம ஊர் சாப்பாடு மாறி சாப்பிட்ட பீலிங் கிடைக்குது. பாஸ்மதி கிலோ 100 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட மனசே வராது. அதுனால பிரியாணி செய்யும் போது மட்டும் வேண்டா வெறுப்பா பாஸ்மதி வாங்குவேன். ஆனா இப்ப மொத்தமா பிக்பஜார்ல வாங்குவதால் டிஷ்கவ்ண்ட் கொடுக்குறாங்க. அதுல வாங்கி இப்படி விதவிதமா சமைக்க ஆரம்பிச்சேன். இப்ப மாத்துனா முடியல. பாஸ்மதி இருந்தா தான் நெய்சொறுங்குற நிலைமை வந்துருச்சு :(

செய்து பார்த்ததுக்கு மிக்க நன்றி பா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நாம தமிழ் காரங்க உலகத்ல எந்தபக்கம் போனாலும் நல்லா நாக்கை
வளத்துதான் வச்சிருக்கோம். இதுக்கு இதுதான்னு பழ்கிட்டோம். ஆனா
கூட நம்மல்லாம் ரொம்ப ஐயோ பாவங்க. இப்போ எங்க என்ன கிடைக்குதோ
அதுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிடவும் கத்துக்கிட்டோம். நல்லாம் எவ்வளோ
நல்லவங்க இல்லியா ஆமினா? தமிழ் நாட்ல எல்லாம் ரேஷன்ல ஒரு ரூபாய்க்கு
ஒருகிலோ அரிசி கிடைக்குதாம். அதுலயும் ரெண்டுவிதமான அபிப்ராயம் சொல்ராங்க நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு. ஒரு ரூபாக்கு ஒருகிலோன்னா
இங்க நினைச்சுக்கூட பாக்க முடியாது. ஆமினா நீங்க எங்கப்பா இருக்கீங்க?

என்ன தான் இருந்தாலும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் தானே?

அங்கே கறிவேப்பிலை இல்லாமல் தாளிப்பே இருக்காது. ஆனால் இங்கே கறிவேப்பிலை என்பதே பலருக்கும் தெரியாது. வேண்டுமென்றால் ஹவுஸ் ஓனரம்மா சொந்த காரங்க வீட்டுக்கு போகணும் (2 மணி நேர பயணம் )

முருங்கை கீரை இப்போது தான் மரத்தை கண்டுபிடித்தேன். பூங்காவில் அழகுக்கு வைத்திருக்கிறார்களாம். (எங்க ஊர்ல இது மேல தான் பேய் இருக்கும்னு சொல்லுவாங்க).கிரண்டர் இங்கே தயாரிப்பதே இல்லையாம். அப்படியென்றால் என்னவென்று தெரியாதாம். (கொடுமை)

வாழை இலையில் சாப்பிட்டால் என்னமோ குற்றம் பண்ணுவது போல் பார்க்கிறார்கள். கீரை தினமும் சாப்பிட்டு பழகிய எனக்கு வெறும் பாலக் போர் பண்ணுது. ஊருக்கேத்த வேஷம் போட நானும் பழகிட்டேன் :(

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி சில நேரங்களில் நல்ல அரிசியாய் வருகிறது. அதை என் அம்மா இட்லி,தோசைக்கு பயன்படுத்துகிறார்கள் கோமு. நான் இருப்பது உத்திர பிரதேஷத்தில்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி இன்று உங்கள் பூண்டு சாதம் செய்தேன் பைகானா புட்டா தாலி உடன் நன்றாக இருந்ததுப்பா நன்றி

நஸ்ரின்

செய்து பார்த்தாச்சா. மிக்க நன்றி நானும் அடுத்த முறை பைகானா புட்டா தாலி உடன் செய்து பார்க்கிறேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா