புதிதாக கட்டிய இல்லத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?

அன்பு தோழிகளே,

என் பெயர் ஹேமா, என் கணவர் பெயர் பெரியசாமி, என் மாமனார் பெயர் கணேசன், மாமியார் பெயர் லட்சுமி இந்த நான்கு பெயரையும் சேர்த்து ஒரு நல்ல பெயராக சொல்லுங்கள், புதிதாக கட்டிய இல்லத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?

இப்படி மொட்டையாகக் கேட்டால் எப்படி? ;) உங்களைப் பற்றி, உங்கள் ரசனைகள், ---, ---, ---, எல்லாம் சொன்னால்தானே மற்றவர்கள் வந்து ஐடியா சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

என் உறவினர் ஒருவர் தன் இரு குழந்தைகளின் பெயர்களையும் இணைத்து “சுபமதி இல்லம்” என்று பெயர் வைத்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் விரும்பினால் இதேபோல் உங்களுக்கு மட்டுமே பொருந்தும் தனித்துவத்துடன் கூடிய ஏதும் பெயர் வைக்கலாம்.

வீடு கட்டியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்,
இஷானி

paradise home, heaven in earth, அழகிய கூடு, இனிய இல்லம், சந்தோஷ குடில். இல்லைனா இஷானி சொன்னது போல உங்க பேரு, உங்க கணவர் பேரு, உங்க பிள்ளைங்க பேரு எல்லாவற்றையும் சேர்த்து நீங்களே வித்தியாசமா எதாவது அழகான பேரா வைங்க.

ஹாய் இமா,

இப்பொழுது விரிவாக எழுதியுள்ளேன், பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் யாழினி,

உங்கள் ஐடியா மிகவும் பிடித்துள்ளது, நாங்கள் கீழ் தளத்தில் 3 வீடுகள் கட்டுகிறோம், அதில் முதல் வீடு எங்கள் பயன்பாட்டிற்கு, அதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என்று இருக்கிறோம், மீதி இரண்டு வீட்டிற்கும் வேறு பெயர் வைக்கலாம் என்று இருக்கிறோம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் இஷானி,

//என் பெயர் ஹேமா, என் கணவர் பெயர் பெரியசாமி, என் மாமனார் பெயர் கணேசன், மாமியார் பெயர் லட்சுமி இந்த நான்கு பெயரையும் சேர்த்து ஒரு நல்ல பெயராக சொல்லுங்கள், புதிதாக கட்டிய இல்லத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?//

உங்கள் கருத்துக்கு நன்றி, இப்பொழுது விரிவாக குறிப்பிட்டுள்ளேன், எனவே உங்கள் ஐடியாவை சொல்லுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஓ அப்படியா, நல்ல யோசனை வெவ்வேறு பேரு வைக்க போகிறீர்களா? முதல் வீட்டிற்கு உங்க எல்லாரோடய பேரையும் சேர்த்து ஒரு வித்தியாசமான பேரா வைங்க நல்லா இருக்கும். மற்றவைகளுக்கு பிடித்த பேர வச்சுடுங்க. வீடு வேலை எல்லாம் முடிஞ்சுதா? எப்போ க்ரஹப்ரவேசம்?

உங்க எல்லாருடைய பெயரிலிருந்தும் ஒரு லெட்டெர் வரும்படி
மானசரோவர்னு வைங்க.இந்தபெயர் புது வீட்டிக்கு நல்ல லக்கியா
அமையும்.

ஹாய் கோமு,

நன்றி, உண்மையிலே நீங்க சொன்ன பெயர் சூப்பர், எனக்கு மிகவும் பிடித்துள்ளது, இந்த மானசரோவர் பேர கேட்டோன்னே சும்மா அதிருதுபா:)

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

உடனே பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றிப்பா. இந்தபெயரில் உள்ள வீடுகளை
பாத்திருக்கேன். ரொம்ப செழிப்பா சுபிக்‌ஷமா இருக்கும். அதுதான் சொன்னேன்.

மேலும் சில பதிவுகள்